Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197
TNPSCயின் ஊழல் விளையாட்டு.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)

TNPSCயின் ஊழல் விளையாட்டு..

2012ல் நடந்த முறைகேடு விசாரணை என்னாச்சு…

                             ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தொடர்பா?

டி.என்.பி.எஸ்.சியிலிருந்து 7.7.12ல் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில்  தருமபுரி வட்டத்தில் ஜெயஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மையத்தில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் 1 முதல் 59 கேள்விகள் வரை சரியாக அச்சிடப்பட்டுள்ளது. பிறகு மீண்டும் 1 முதல் 59 கேள்விகள் திரும்பவும் அச்சிடப்பட்டு இருந்தது. பிறகு 154-200 கேள்விகள் அச்சிடப்பட்டு இருந்தது. 60 லிருந்து 153 வரை கேள்விகள் திரும்ப, திரும்ப அச்சாகி இருந்தது. இந்த குளறுபடியான வினாத்தாள் 5பேரிடம் இருந்தது.

 இது தொடர்பாக கல்லூரியின் முதல்வர்  இன்பசேகரன், அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் லில்லி ஐ.ஏ.எஸ் விசாரணை செய்து, உறுதிப்படுத்தினார். குளறுபடியான வினாத்தாள் பெற்றவர்களுக்கு, மீண்டும் வேறு தேதியில் தேர்வு நடத்தப்பட்டது.  குளறுபடியான வினாத்தாள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில்  டி.என்.பி.எஸ்.சியின் உறுப்பினர் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் தான் காரணம் என்று தெரியவந்தது… இதை தொடர்ந்து அந்த விசாரணை முடங்கியது…

  இன்று வரை விசாரணை நடந்ததா.. என்ன அறிக்கை கொடுத்தார்கள்..அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

 இப்படி டி.என்.பி.எஸ்.சியில் 2012லிருந்து ஊழல் விளையாட்டு தொடங்கிவிட்டது…  ஆனால் டி.என்.பி.எஸ்.சி ஊழல்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் விசாரணை உண்மை வெளிவருவதில்லை…

 பாவம்…படித்த ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்…

   

Comments

comments