TNMSCயின் ஆனந்தன்- உலக வங்கி புரோக்கரா..நிழல் விஜயபாஸ்காரா !

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு  மாத்திரை, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில்(TNMSC) 10 ஆண்டுகளாக அதிகாரமையத்தில் வலம் வரும் கே.ஆனந்தன் தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நிழல். ஆனந்தனை சுகாதாரத்துறையில் நிழல் அமைச்சர், உலக வங்கி புரோக்கர் என்று அன்பாக அழைப்பார்கள்.. ஒய்வு பெற்றப்பிறகும் TNMSCயில் CONSULTANT(EQUIPMENT) என்ற பதவியில் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.

 

 உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளில் தமிழக அரசின் எந்த துறையில் கடன் வாங்க வேண்டுமென்றாலும், ஆனந்தனை அணுகுவார்கள்.. கடன் வாங்கி கொடுப்பார். கடன் பெற்ற திட்டத்துக்கு பதிலாக வேறு திட்டத்துக்கு அந்த  பணத்தை செலவு செய்வது எப்படி..கடன் வாங்கி அப்படியே போலி பில் போடுவது எப்படி..போட்ட போலி பில்லுக்கு பயன்படுத்தியதற்கான சான்றிதழில் கொடுப்பது எப்படி எல்லாம் ஆனந்தனின் ஆசிதான்.. உலக வங்கி, ஆசியா வளர்ச்சி வங்கிகளின் தமிழக அரசின் புரோக்கர்…

  SOUTHERN STRUCTURALS கம்பெனி மூடப்பட்டதும், எப்படியோ TNMSCயில் 3.12.2008ல் துணை மேலாளர் பதவியில் சேர்ந்த கே.ஆனந்தன், இன்று TNMSC கண் அசைவில்தான் செயல்படுகிறது..

 பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தொழில்துறை, மின்சாரவாரியம், தமிழ்நாடு காகித ஆலை  இப்படி தமிழக அரசின் அனைத்து  துறைகளிலும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களில் மத்திய அரசின் ஒப்புதலுடன் கடன் வாங்கி செயல்படுத்தப்படும் திட்டங்களில் நடக்கும் ஊழல், முறைகேடுகளுக்கு முக்கிய காரணமே கே.ஆனந்தன் தான்..

 நிதித்துறை செயலாளருடன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார். முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ் இருவரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள்..

1.11.80 BE முடித்து சான்றிதழில் வாங்கி ஆனந்தன், 20.6.1980ல் southern structurals கம்பெனியில் முதுநிலை பொறியாளராக பணியில் சேர்ந்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

 1980ல் BE Mechanical முடித்த  ஆனந்தன்தான், தமிழக அரசின் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பொறுப்பில் உள்ளார்.. எப்படி என்று கேள்வி கேட்காதீர்கள்..நிழல் விஜயபாஸ்கர்…

 தமிழக அரசின் அதிகாரமையத்தில் வலம் வரும் கே.ஆனந்தனை சிபிஐ விசாரிக்குமா… ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரிக்குமா?

 

 

 

Comments

comments