TNEB 2017 ஜனவரி to 2018 ஜனவரி வாங்கிய கடன் ரூ31,591 கோடி…மொத்த கடன் ரூ1.31 இலட்சம் கோடி..

தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின்  மொத்த கடன் என்று கணக்கீட்டால் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்… இதுதான் 2011 மே மாதம் முதல் பிப்ரவரி 2018 வரை அதிமுக ஆட்சியின் மெகா சாதனை…

 தமிழ்நாடு மின்சாரவாரியம் ஜனவரி 2017 முதல் 2018 ஜனவரி வரை 12 மாதங்களில்  வங்கிகள், நிதி நிறுவனங்களில்  வாங்கிய கடன் ரூ 31,591 கோடி…

 அம்மாடியோவ்.. மயக்கம் வருகிறது… கொஞ்சம் சோடா குடித்துவிட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள் கடன் விவரங்கள் இதோ…

  1. TNEB bonds – ரூ73.10கோடி
  2. REC –           ரூ3176.91 கோடி
  3. PFC – ரூ4006.80 கோடி
  4. TNPFC – ரூ21,026 கோடி
  5. MTL/Banks – ரூ1500 கோடி
  6. RGGVY –   14 கோடி
  7. R-APDRP –A – ரூ143.28 கோடி
  8. R-APRDRP-B – ரூ665.12கோடி
  9. HUDCO – ரூ1000 கோடி

   மொத்தமாக 12 மாதங்களில் வாங்கிய கடன் ரூ31,591.35கோடிதான்…ஏற்கனவே தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு ஒரு இலட்சம் கோடி கடன் இருக்கிறது… இதையும் சேர்த்து கணக்கீட்டால் ரூ1.31 இலட்சம் கோடி கடன்.. இதில் அசல், வட்டி எப்படி கட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை..

  நிலக்கரி கொள்முதலில் ஊழல், மின் மீட்டர் கொள்முதலில் ஊழல், உதிரி பாகங்கள் கொள்முதலில் ஊழல் என்று தமிழ்நாடு மின்சாரவாரியம் ஊழலில் கொடிக்கட்டி பறக்கிறது…

                          தமிழ்நாடு தாங்காது…அம்மா…

Comments

comments