RURAL DEVELOPMENT DEPT E SEVAI BUILDINGS CLOSED… Rs100cr LOSS.. ஊரக வளர்ச்சித்துறை.. மூடி கிடக்கும் கிராம சேவை மையம்… முடங்கி போன ரூ100கோடி மதிப்புள்ள கட்டிடங்கள்..

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் பாஜக அரசு, ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று மீண்டும் அறிவித்துள்ளது. இதோ மத்திய அரசின் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ரூ100கோடி மதிப்பில் கிராமங்களில் கட்டப்பட்ட கிராம சேவை மையம், மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் மூன்றாண்டுகளாக மூடிகிடக்கிறது.. இது தான் ஊழல் இல்லாத ஆட்சியா..

    தமிழகம் முழுவதும் உள்ள 12,600 கிராமங்களில், ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு நான்கு கிராமங்களில் கிராம சேவை மையம் தொடங்க  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு கிராம சேவை மையமும் ரூ17 இலட்சம் முதல் ரூ20 இலட்சத்தில் 2014-15, 2015-16,2016-17 ஆகிய ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

 1500க்கு மேற்பட்ட கிராம சேவை மையம் கட்டப்பட்டு, செயல்படாமல் அதாவது மக்கள் பயன்பாட்டுக்கு வராமல்  மூன்றாண்டுகளாக மூடி கிடக்கிறது. மூன்றாண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் ரூ17 இலட்சம், ரூ20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, மூன்றாண்டுகள், நான்கு ஆண்டுகளாக மூடி கிடந்தால், கட்டிடம் என்னவாகும். பல கட்டிடங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பல கட்டிடங்கள் பாழாய் போய்க்கொண்டு இருக்கிறது.

 உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், மத்திய அரசின் நிதியில் ரூ100கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழாய் போய்க்கொண்டு இருக்கிறதே என்று கவலைபடவில்லை.

 திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நெமிலிச்சேரி கிராமத்தில் 2015-16ம் ஆண்டில் ரூ17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தையும், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பாலவேடு கிராமத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை நாம் பார்வையிட்ட போது, அரசு பணம் இப்படி வீணாகி போய்கிறதே என்று கண்கள் கலங்கியது.

 இந்த இலட்சணத்தில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசு மீண்டும் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று அறிவிப்பை நினைத்தால்….

Comments

comments