MY CHILD MY CARE திட்டத்தில் முறைகேடா..திரு கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் விளக்கம்..மக்கள்செய்திமையத்தின் கேள்வி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் MY CHILD MY CARE திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக மக்கள்செய்திமையம், தமிழக ஆளுநர் அவர்களுக்கு, இயக்குநர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு அனுப்பிய புகார் மனுவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம். இந்த செய்தி தொடர்பாக சிலைடுயும் வெளியானது.

 8.10.18ம் தேதி மதியம் 2.50 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் அவர்கள் 04175 -232260 எண்ணிலிருந்து தொடர்புக்கொண்டார். MY CHILD MY CARE திட்டத்தில் முறைகேடு நடக்கவில்லை. சொசைட்டி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தில் தொடக்கத்தின் போது பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது கொடுக்கவில்லை, ஆனால் நோட்டில்  யார்..யார் பணம் கொடுத்தார்கள் எழுதி வைத்து உள்ளோம். திட்டத்துக்கு வசூலான பணத்தை செலவு செய்யவில்லை .  பள்ளி ஆசிரியர்கள் மிகவும் குறைந்தளவில் தான் பணம் கொடுத்தார்கள்..நான் ஊழல், முறைகேடு செய்யாத அதிகாரி. நான் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் படிப்பில் முன்னேற வேண்டும் என்பதற்காகதான் இந்த திட்டத்தை தொடங்கினேன். என் குழந்தைகளுக்காக நான் பிச்சை எடுக்கவில்லை. ஏழை குழந்தைகளுக்காக பிச்சை எடுக்கிறேன்..

        முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமாருக்கு, விருப்பம் இல்லாமல் பணம் கொடுத்த ஆசிரியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று நான் கூறி, சுற்றிக்கை அறிக்கை அனுப்ப சொன்னேன். ஆனால் ஆசிரியர்கள் ஒருவரும் பணத்தை திருப்பி பெறவில்லை என்று விளக்கம் அளித்தார்..

மக்கள்செய்திமையத்தின் கேள்வி…

  1. பணம் கொடுத்தவர்களின் விவரங்கள் நோட்டில் எழுதி வைத்துள்ளோம் என்று கூறுவது சரியா. சொசைட்டில் சட்டத்தில் பதிவு செய்தவுடன், பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது ஏன் கொடுக்கவில்லை.
  2. ரூ5000 பணம் கொடுத்திருந்தால், ரூ2000 கொடுத்ததாக எழுத வாய்ப்பு உள்ளதே..
  3. முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் விருப்பம் இல்லாமல் பணம் கொடுத்தவர்கள் திருப்பி பெற்றுக்கொள்ளலாம் என்று சுற்றிக்கை அனுப்பி உள்ளார். விருப்பம் இல்லாமல் பணம் கொடுத்த ஆசிரியர்கள் பணத்தை திருப்பி கேட்டால், அந்த ஆசிரியர்கள்

பழி வாங்கப்படுவார்கள்..ஏற்கனவே ஆசிரியர்களிடம் ஒருமையில் பேசும் முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார், பணத்தை திருப்பி கேட்கும் ஆசிரியரின் நிலை எப்படி இருக்கும்.

  1. செய்தித்தாள்களில் பெரியதாக செய்தி வந்தால், மக்கள் திட்டத்தை ஆதரிப்பதாக நினைக்க முடியாது. செய்தித்தாள்களில் ரூ500 கவர் கொடுத்தால், இரண்டு கால செய்தி, ரூ2000 கவர் கொடுத்தால் முதல் பக்கம் நான்கு கால செய்தி வெளியாகும். திருவண்ணாமலை என்ன செய்தி வெளியாகிறது என்று சென்னையில் அதிகாரிகளுக்கு தெரியாது.
  2. சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக (work) பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் அரசாணை எண்.1/2.1.15ல் உலக தரம் வாய்ந்த சாலைகள் போடுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ135கோடிக்கான பணி ஏன் நடக்கவில்லை. விளக்கம் அளிப்பாரா…

  மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் விளக்க கடிதம் அனுப்புவதாக கூறினார்கள். ஆனால் விளக்க கடிதம் வரவில்லை. ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் நம்மிடம் பேசிய போது, எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்பதை சொல்லவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் பேசிய போது, சட்டைக்கு பட்டன் இல்லாமல் ஊக்கு போடும் ஏழை குழந்தைகள் என்று கூறியது, தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதாக கருதுகிறோம்.

  MY CHILD MY CARE திட்டத்தின் முறைகேடு தொடர்பாக தமிழக ஆளுநர் அவர்களும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகமும் விசாரணை நடத்தட்டும் காத்திருப்போம்…

 

 

Comments

comments