karthikeyan IAS modified web site – MSM News reaction.. மக்கள்செய்திமையம் செய்தி எதிரொலி… நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணைய தளத்தில் திருத்தம்… ஊழல் தடுப்பு இயக்குநரம் முகவரியில் குழப்பம்..

28.5.19ம் தேதி மக்கள்செய்திமையம் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணைய தளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.              

    நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் ஆங்கில  இணைய தளத்தில், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் என்று குறிப்பிட்டு கார்த்திகேயன் போட்டோ உள்ளது. கூடுதல் இயக்குநர் ம. அசோகன் போட்டோ இல்லை.

 நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தமிழ் இணைய தளத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் என்று குறிப்பிட்டு பிரகாஷ் போட்டோ இடம் பெற்று உள்ளது. கூடுதல் இயக்குநர் ம. அசோகன் என்று குறிப்பிடப்பட்டு, ஓராண்டுக்கு முன்பு ஒய்வு பெறும் நாளில்  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட  செபாஸ்டின் போட்டோ உள்ளது. என்ன நிர்வாகமே.. கேலிக்கூத்தாக இருக்கிறது..

 மக்கள்செய்திமையத்தின் இந்த செய்தியை பார்த்தவுடன், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.. நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணைய தளத்தின் பணிகளை கவனிக்கும் அதிகாரிகளை அழைத்து கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பேசினார்.  28.5.19ம் தேதி மதியம் 12மணியளவில் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தமிழ்  இணைய தளத்தில்  கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பெயருடன் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் படம் இருந்தது மாற்றப்பட்டது. தற்போது கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் படம் இடம் பெற்றுள்ளது.

 அதே போல் கூடுதல் இயக்குநர் ம.அசோகன் படத்துக்கு பதிலாக செபாஸ்டின் படம் இருந்தது. செபாஸ்டின் படம் எடுக்கப்பட்டுவிட்டது.

  மக்கள்செய்திமையத்தின் செய்தி எதிரொலியாக, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தமிழ் இணைய தளத்தில் திருத்தம் செய்த அதிகாரிகளுக்கு நன்றி..

 ஆனால் ஊழல் தடுப்பு மற்றும் இயக்குநரகம், எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை-16க்கு மாறிவிட்டது. ஆனால் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணைய தளத்தில் ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 முகவரிதான் உள்ளது.. அதிகாரிகள் இணையதளத்தை என்ன தான் பார்க்கிறார்கள் என்று நமக்கு ஒண்ணுமே புரியவில்லை.

  மக்கள்செய்திமையம் எப்போதும் உண்மையை மட்டுமே வெளியிடும்.. சொல்வதை செய்யும், செய்வதை சொல்லுவது மக்கள்செய்திமையம் மட்டுமே…

Comments

comments