Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197
IHHL திட்டம்- தமிழகத்தில் பிரதமர் மோடி- ஏமாந்து போனாரா..ஏமாற்றப்பட்டாரா.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)

IHHL திட்டம்- தமிழகத்தில் பிரதமர் மோடி- ஏமாந்து போனாரா..ஏமாற்றப்பட்டாரா..

மத்திய அரசு, நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற சுகாதாரம் 98 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 47 லட்சம் கழிப்பறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றன என்று பிரதமர் மோடி, மதுரையில் எய்மஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பேசினார்.

  தனி நபர் கழிப்பறை திட்டத்தில் தமிழகம் முழுவதும் போலி பில் போட்டுதான் எடுக்கப்பட்டுள்ளது. தனி நபர் கழிப்பறை 20% சதவிகிதம் மட்டுமே கட்டுப்பட்டுள்ளது. இதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது.. உதாரணமாக…

  மதுரை மாவட்டம் கொட்டாம்படி ஊராட்சி ஒன்றியத்தில் பூதமங்கலத்தில் 2016-17ம் ஆண்டியில் 270 வீடுகளில் தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் கீழ் தனி நபர் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.. தனி நபர் கழிப்பறை கட்டப்பட்டுள்ள கேவலமான நிலையை படங்களில் பாருங்கள்..

 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெரு நகராட்சியில் ஆணையராக இருந்த மதிவாணன், தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் கீழ் தனி நபர் கழிப்பறை  கட்டாமலேயே கட்டியதாக 4000 கழிப்பறைகளுக்கு போலியாக ஆவணம் தயாரித்து போலி பில் போட்டு எடுத்துள்ளார்.. இதே நிலைதான் தமிழ்நாட்டில் IHHL திட்டத்தின் தனி நபர் கழிப்பறை…

    IHHL திட்டத்தின் தனி நபர் கழிப்பறை முறைகேடு தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் குப்பைக்கூடைக்குதான் சென்றது..

             பிரதமர் மோடி தமிழகத்தில் ஏமாற்றப்பட்டது உண்மைதான்…

 

 

Comments

comments