ICT அகடமி பெயரில் மெகா கொள்ளை…தமிழக அரசை ஏமாற்றும் அதிகாரிகள்.

தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல்[ICTACT]  தமிழக அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் 14.9.07ல்  முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்து, 8.4.08ல் அமைப்பு உருவாக்கப்பட்டது.

 தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, அதன் மூலம் மாணவர்களை தொழில்துறைக்கான தகுதி பெறச் செய்யும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஒரு முன்னோடி நிறுவனம்..

 இதற்கான அரசாணையும் 16.4.09ல் வெளியிடப்பட்டது. ICTஅகடமியில் தற்காலிக தலைமை செயல் அலுவலராக கே.ஜெயராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். பிறகு எம்.சிவக்குமார் தலைமை செயல் அலுவலராக இலட்சுமிநாராயணனால் தேர்வு செய்யப்பட்ட  ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றுகிறார்.. எம்.சிவக்குமாருக்கு தற்போது  மாத சம்பளம் ரூ5.50 இலட்சம்..

  லட்சுமிநாராயணன்[CYINET], B.V.R மோகன்ரெட்டி, பாலகிருஷ்ணன், கிரிஷ் கணேசன் இந்த அரசு சார்ப்பற்ற உறுப்பினர்கள் பிடியில் ICTஅகடமி சிக்கி  தவிக்கிறது.

 தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவின் 14மாநிலங்களில் கிளைகள் திறந்துள்ளார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு பலன் இல்லை. தமிழக மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லாமல், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதுதான் வேடிக்கையாக உள்ளது..

 தன்னிச்சையாகவும், அரசின் நோக்கங்களுக்கு எதிராகவும், தமிழக அரசின் நிதியினை முறைகேடாகவும் பயன்படுத்தி, தமிழக மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட ICTஅகடமி  தலைமை நிர்வாக அதிகாரி சிவக்குமாரால் சீரழிந்து வருகிறது.

 ICT அகடமி தொடர்பாக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிட்டார் . ஆனால் முதல்வரின் உத்தரவை மீறி விசாரணை நடக்கவில்லை. 

 இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இதுவரையில் எந்த திறனாய்வும் மேற் கொள்ளப்படாமல் தன்னிச்சையாக அரசின் கொள்கைகளுக்கு விரோதமான செயல்களை மேற்க்கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை…

  தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் நிறுவனத்துக்கு அரசின் சார்பில் ஆட்சி மன்ற குழுவிற்கும், ஆலோசனை குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள அரசு சார் உறுப்பினர்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  ICTஅகடமி  முறைகேடுகள் தொடர்பாக விஜிலென்ஸ் இயக்குநர், மத்திய விஜிலென்ஸ் ஆணையருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது…

Comments

comments