ICDS – அங்கன்வாடி மையங்களில்-FLEXI FUNDல் ரூ16.32 கோடி முறைகேடு – ரூ328.10கோடி என்னாச்சு சிபிஐ விசாரிக்குமா?

தமிழக அரசின் சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் ஊழலில் மூழ்கிவிட்டது. சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணி திட்டம், இதற்காக தமிழ்நாடு முழுவதும் 54,439 அங்கன் வாடி மையங்கள் உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அங்கன்வாடி மையங்களை பார்த்தால், கண்களின் இரத்த கண்ணீர் தான் வரும்..

 மத்திய அரசு 2014-15ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ1000/- FLEXI FUND என ரூ5.44கோடி ஒதுக்கீடு செய்கிறது. ரூ5.44கோடியில் 90 சதவிகிதம் ரூ4.89கோடி மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு ரூ54.43இலட்சம் மட்டுமே.

 2014-15ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ4.89கோடி நிதிக்கு  19.8.2014ல் அரசாணை எண்.41 வெளியிடப்பட்டது. 2015-16க்கு 5.11.15ல் தான் அரசு ஆணை வெளியிடப்பட்டது. 2014 ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதிக்கு அரசாணை வெளியிட  150 நாட்கள் ஆகிவிட்டது. 2015ல் அரசாணை வெளியிட 210 நாட்கள் ஆகிவிட்டது. 54,439 மையங்களில் எப்படி செலவு செய்வார்கள்.. எங்கே செலவு செய்தார்கள், இரண்டு தாய்மார்களிடம் கோப்புகளில் செலவு செய்ததாக கையெழுத்து வாங்கிவிட்டார்கள்.. மூன்றாண்டுகளில் 2016-17 வரை மூன்றாண்டுகளில் FLEXI FUNDக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ16.32கோடி செலவு செய்யாமல், செலவு செய்ததாக  போலியாக கோப்புகள் தயார் செய்து இரண்டு தாய்மார்களிடம் கையெழுத்து வாங்கி முறைகேடு நடந்துள்ளது..

 இந்த இலட்சணத்தில் 2015-16ல் General integrated child development services scheme க்கு ரூ328.16 கோடி ஒதுக்கீடு செய்தது…இந்த நிதி நிலை என்னவென்று தெரியவில்லை.

 FLEXI FUND & General integrated child development services scheme இந்த இரண்டு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐக்கு, மத்திய அரசின்  பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அமைச்சகத்துக்கு புகார் அனுப்பி உள்ளோம்.

 ரூ344.48 கோடி திட்டங்களில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிக்கு தொடர்பு இருக்கிறது…

 

Comments

comments