மக்கள்செய்திமையம் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் செய்திமையம்.காம் இணையதளத்திலும் பல ஆயிரம் கோடி ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது.
மக்கள்செய்திமையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பல ஊழலுக்கான ஆதாரங்களை பெற்று, 15 ஊழல் புத்தகங்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஊழல்களை அம்பலபடுத்தியதால், ஆசிரியர் அன்பழகன் மீது 23 பொய் வழக்குகள் போடப்பட்டது. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, 119 நாட்கள் கோவையில் தனிமை சிறையில் இருந்தார்.
18..12.19ம் தேதி மாலை 6மணிக்கு பூந்தமல்லியில் உள்ள என் வீட்டின் அருகே என் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டில் மாடுகளால் நான் உயிர் பிழைத்தேன். துப்பாக்கி சூடு தொடர்பாக புகார் கொடுத்தும், காவல் துறை அதிகாரிகள் பெயரளவுக்கு விசாரிக்க கூட இல்லை. ஆனால் அந்த பகுதியில் மாடுகள் மேய்க்க பூந்தமல்லி காவல்துறை தடை விதித்துள்ளது. அடுத்த துப்பாக்கி சூட்டில் ஆசிரியர் அன்பழகன் பிழைக்க கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம்..
துப்பாக்கி சூடு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD ஆக GOVT OF INDIA MINISTRY OF CORPORATE AFFAIRSல் பதிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக செய்தி நிறுவனத்துக்கு பிரைவேட் லிமிட் கிடைத்துள்ளது.
MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD பெயரில் இனி ஊழல், நிர்வாக சீர்கேடுகளை ஆதாரங்களுடன் தொடர்ந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும். மேலும் ஊழல், நிர்வாக சீர்கேடுகளை 5 நிமிடம் -10 நிமிடம் ஒடக்கூடிய ஆவணப்படமாக வெளியிட முடிவு செய்துள்ளது.
MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD இனி ஊழல், நிர்வாக சீர்கேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதிலும், அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளிலும் தமிழக மக்களுடன் கைக்கோர்த்து செயல்படும்..
]]>
பெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி, சீரழிந்துவிட்டது. வழக்கம் போல் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” யா என்ற கேள்வி சென்னை மாநகர மக்களிடம் எழுந்துள்ளது.
ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரை பெயரில் Quotation work order அதாவது டெண்டர் இல்லாமல் பணிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் SPK & co நிறுவனத்துக்கும் டெண்டர் டிரான்பரன்சி சட்டத்தை மீறி டெண்டர் கொடுக்கப்பட்டு வருகிறது.
பெரு நகர சென்னை மாநகராட்சியில் ஊழல் கடலாக ஓடுவதால், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் அளிக்க மறுக்கிறார்கள்.. ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரைக்கு 2017 ஏப்ரல் முதல் 2018 டிசம்பர் வரை கொடுக்கப்பட்ட ஒப்பந்தபணிகளின் விவரங்கள் கேட்டால், தகவல் பெறும் உரிமைச் சட்ட பிரிவு8(1)(j)வில் தகவல் வழங்க மறுக்கிறார்கள்..
SPK & co , KCP engineersதொடர்பாக தகவல் அளிக்க மறுக்கிறார்கள். பணிகளின் எம்.புத்தகம் தர மறுக்கிறார்கள்.. பெரு நகர சென்னை மாநகராட்சியின் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ பற்றி அடிப்படை அறிவே இல்லை என்பது உறுதியாகிறது.
ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரையை பற்றி, பெரு நகர சென்னை மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், முந்திரிகொட்டை மாதிரி பேருந்து சாலைகள் துறைகள் தகவல் அளிக்க முடியாது என்று பதில் அளிக்கிறார்கள்..
இதிலிருந்து தாமஸ் அய்யாதுரை பெயரில் ஊழல் நடக்கிறது என்பது உறுதியாகிவிட்டது..
பெரு நகர சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளர் பதவி உயர்வு பெற, முயற்சி செய்து வரும் கண்காணிப்பாளர் பொறியாளரும், ஊழல் திலகம் என்ற பட்டம் பெற்ற அதிகாரி மக்கள்செய்திமையம் ஆசிரியர் அன்பழகனை கொலை செய்துவிடுவேன் என்று தன் சகா அதிகாரிகளிடம் வெளிப்படையாக பேசிவருகிறார்.. அந்த அதிகாரி திமுக பிரமுகருக்கு நெருங்கி உறவினர்..
திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவும்அந்த ஊழல் திலகம் அதிகாரிக்கு துணை போகிறார்… இந்த நிலையில்தான் சென்னையில் திமுக உள்ளது..
]]>
தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார். மாநாடு முடிந்தவுடன் ரூ2.50 இலட்சம் கோடி முதலீடு செய்வதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று உலக முதலீட்டாளர்களுடன் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட போட்டோவும், முதலீட்டாளர்களின் பட்டியலும் வெளியானது.. ஆனால் முதலீட்டாளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் முதலீடு செய்யாமல் ஒடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை..
ரூ2.50 இலட்சம் கோடி முதலீடு எங்கே?
உதாரணமாக வேளாண்மைத்துறையில் நாஞ்சில் புட் பார்க் பிரைவேட் லிமிட் நிறுவனம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், தேவாலை தாலுகாவில் ரூ150 கோடி முதலீட்டில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் 10.9.2015ல் கையெழுத்தானது.
அதே போல் DPS அக்ரிடெக் லிமிட் நிறுவனம் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ650கோடியில் நீர் வேளாண்மை பண்ணை அமைத்து 62,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் 10.9.2015ல் கையெழுத்தானது.
இந்த இரண்டு நிறுவனமும் இத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. இதை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையரகம் உறுதி செய்துள்ளது. இதற்கான ஆதாரம் இதோ…
10.9.2015ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட பல ஒப்பந்தங்களின், முதலீட்டாளர்கள் பலர் தொழில் தொடங்காமல் ஒடிவிட்டார்கள்..
உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி இனியும் தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம்…
]]>
பெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கால் பட்ட இடமெல்லாம் ஊழல் தான். ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை.. நான் ஒரு “”PHONY” என்று புலம்வார்..
FALCON SECURITY AGENCY பெரு நகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையில் 2017-18ல் மருந்தாளுநர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யப்பட்டு, பணி வழங்கப்பட்டது. ஒரு வருட பணியில் மூன்று மாதம் ஊதியத்தை FALCON SECURITY AGENCY கொடுக்கவில்லை. போராட்டத்துக்கு பின் இரண்டு மாதம் ஊதியம் கொடுத்தது. இன்னும் ஒரு மாதம் ஊதியம் வழங்கவில்லை. பணிக்கு வந்த ஊழியர்களிடம் PF,ESI கொடுக்கவில்லை. PF அலுவலகத்தில் பணமே செலுத்தவில்லை. PF ஆணையரிடமும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் FALCON SECURITY AGENCY நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்கள்..
இதனால் FALCON SECURITY AGENCY நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்து, ஒப்பந்த பணிகள் கொடுக்க கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்யிடம் மனு கொடுத்துள்ளார்கள்.. தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்றச் சங்கம் தான் பாதிக்கப்பட்ட மருந்தாளுநர் ஊழியர்களுக்காக போராட்டம் நடத்தி வருகிறது.
ஆனால் FALCON SECURITY AGENCY நிறுவனத்துக்கு பெரு நகர சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் SECURITY பணி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பல ஒப்பந்த பணிகளை கொடுக்க ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்..
மருந்தாளுராக பணிபுரிந்த ஊழியர்களுக்கு இன்னும் ஒரு மாத சம்பளம் பாக்கி உள்ளது, PF,ESI கொடுக்காத FALCON SECURITY AGENCY மீண்டும் ஒப்பந்த பணி கொடுத்துள்ளது, ஊழல் தானே….
இப்படி பெரு நகர சென்னை மாநகராட்சியில் தினமும் பல ஊழல்கள் அரங்கேறி வருகிறது.. அதனால் பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் மினி தொடராக வெளி வரும்..
]]>
செய்தித்துறை ஊழலில் சிக்கி சிரழிந்துவிட்டது. செய்தித்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டைகள் வழங்கிட அரசாணைகள் ஏதும் இல்லை என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு எப்படி Head lines media network ஆன்லைன் சேனலின் கேமிராமேன் கார்த்திக் என்பவருக்கு ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டது(, 2019 கார்டு எண் -470). செய்தித்துறை இயக்குநர் டாக்டர் பி.சங்கர் IAS பதில் சொல்லுவாரா…
]]>ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜாராம், குமார் தலைமையில் புரோக்கர்களின் அட்டகாசத்தை புகைப்படங்களுடன் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆவடி தனி வட்டாட்சியர் ஸ்ரீதர், வட்டாட்சியர் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டுவிட்டது. மக்கள் வரும் போதும், அலுவலகத்திலிருந்து வெளியே போகும் போதும் பூட்டிய கதவை திறக்க ஜெயில் வார்டன் போல் வெற்றி என்ற ஊழியர் நிற்பார்.. மக்கள் ஜெயில் கைதி போல், பூட்டிய அலுவலகத்துக்குள் நிற்க வேண்டும்..
வட்டாட்சியர் அலுவலகத்தில் செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 10 நிமிடம் மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நின்றால் போது, வட்டாட்சியர் ஸ்ரீதர் டென்சனாகி மனு கொடுத்துவிட்டால் போங்கள் என்று விரட்டி அடிப்பார்..
ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம் புழல் சிறைச்சாலையாக காட்சியளிக்கிறது. மக்கள் தவிக்கிறார்கள்..
ராஜாராம், குமார் புரோக்கர் கும்பல் ஒரு பக்கம், வட்ட துணை ஆய்வாளர் சிவக்குமார், தற்காலிக ஊழியர்களை வைத்துக்கொண்டு மறுபக்கம் இவர்களிடம் சான்றிதழில், பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா தொடர்பாக வரும் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள்.. யாரிடம் இலஞ்சம் கொடுத்தோம் என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்..
முன்னாள் வட்டாட்சியர் வில்சன், தற்போது வட்டாட்சியர் ஸ்ரீதர் இருவராலும் கொடுக்கப்பட்ட 10,000 பட்டாவில் 4000 பட்டா போலி பட்டா இதற்கான ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ந.க.எண்.3217/2018/ஆ1 நாள் 23.5.18ல் கொடுக்கப்பட்ட தடையில்லா சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தாலே ஆவடி தனி வட்டாட்சியர்கள் வில்சன், ஸ்ரீதரின் பல ஊழல்கள், போலி பட்டாக்கள் அம்பலமாகும்…
]]>சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளின் அவல நிலைய பாருங்கள்..
அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் லேசா இருமினால் கூட அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்துவிடுவார்கள்.. ஏழை, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனையில் வரிசையில் நின்று, ரூ10,ரூ20 இலஞ்சம் கொடுத்து சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்..
அரசு மருத்துவமனையில் ஏழைக்கு காப் சிரப் கொடுத்தார்கள்.. பாட்டில் காப் சிரப் என்று உள்ளது. அதே பாட்டிலில் Composition..Providone Iodine என்று அச்சிடப்பட்டுள்ளது. Iodine புண், காயத்துக்கு போடும் மருந்து..
பாட்டிலில் இருப்பது காப் சிரப்பா… காயத்துக்கு போடு அயோடின் மருந்தா..இந்த அவலமான நிலையில் தான் மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது..
காப் சிரப் சப்ளை செய்த எஸ்.எம். பார்மா பெங்களூர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..
ஏழை மக்கள் பாட்டிலில் காப் சிரப் இருந்து குடிந்திருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் காப் சிரப் என்று எழுதப்பட்ட பாட்டிலில் அயோடின் மருந்து இருந்து குடித்திருந்தால் என்னவாகும்..நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது..
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்…அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அப்பாவி ஏழை, நடுத்தர மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை…
]]>தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் மாதா, மாதம் இலட்சக்கணக்கில் போலி பில் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக 10 பெண் ஊழியர்களை நியமித்துவிட்டு, 80 பெண் ஊழியர்களுக்கு பில் போடப்படுகிறது..
ஆவடி பெரு நகராட்சியில் டெங்கு காய்ச்சலுக்கு ஜனவரி 2017 முதல் செப்டம்பர் 2017 வரை போடப்பட்ட பில் பில்லின் மதிப்பு ரூ73,42,608(ரூ73.42இலட்சம்)..
7 வவுச்சர்களில் 9மாதங்களில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் போடப்பட்ட போலி பில் மதிப்பு ரூ73.42இலட்சம்..
இதை விட வேடிக்கை என்ன வென்றால்…
இப்படி டெங்கு கொசு பெயரில் 9மாதங்களில் போடப்பட்ட போலி பில்லின் மதிப்பு ரூ1கோடி..
இதை தவிர சுகாதாரபிரிவுக்கு செலவு செய்யப்பட்ட தொகை தனி…
ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை கொசு அடிக்கும் இயந்திரத்திற்கு வேலையே இல்லை.. வெயில் காலத்தில் கொசு எப்படி பரவும்…
டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பாக போடப்பட்ட போலி தொடர்பாக விஜிலென்ஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது..
ஆவடி தொகுதி, அமைச்சர் மா.பாண்டியராஜன் தொகுதி.. அமைச்சர் தொகுதியில் இந்த நிலையா…இனி மக்கள்தான் நியாயம் கேட்க வேண்டும்..
]]>
தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி இல்லாத, மற்ற துறையிலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வில்(NON –Revenue confired IAS) இரண்டு இடங்கள் காலியாக இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளிலிருந்து 10 பேர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் நடத்தும் நேர்முக தேர்வில் கலந்துக் கொண்டார்கள்..
ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தாலும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகத்தில் பணியாற்றாமல் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநராக கடந்த 10 ஆண்டுகளாக வேலையே இல்லாமல் ஜாலியாக பணியாற்றும் கிளாடுஸ்டோன் புஷ்பராஜ் பெயரை அதிமுக அரசு பரிந்துரை செய்துள்ளது.
சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தில் ரூ283 கோடிக்கு என்ன திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று வெள்ளை அறிக்கை வெளியிட்டால் நல்லாயிருக்கும்..
தமிழக அரசின் வரலாற்றில் சுகாதாரத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. ஏன்.. நேர்முக தேர்வுக்கே செல்வதில்லை..
சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குநர் டாக்டர் செல்வநாயகம், இணை இயக்குநர் டாக்டர் உமா இருவரில் ஒருவருக்கு ஐ.ஏ.எஸ் கிடைக்கும் என்று பரவலாக பேச்சு இருந்தது. கூடுதல் இயக்குநர் டாக்டர் செல்வநாயகம், திருச்சி மாநகராட்சியில் ஆணையர் பொறுப்பில் இருந்த போது, நடந்த ஊழலில் 1998ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டாக்டர் செல்வநாயகத்தின் மீது குற்றச்சாட்டு குறிப்பாணைகள் பல நிலுவைகள் உள்ளது.
அதிமுக அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக டாக்டர் உமா பெயரை பரிந்துரை செய்திருப்பதாக தெரிகிறது. ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநர் கிளாடுஸ்டோன் புஷ்பராஜ், டாக்டர் உமா இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
ஐ.ஏ.எஸ்க்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு மக்களைப்பற்றி தெரியாது.. மக்களிடம் பழகாதவர்கள்..ஒரு கிலோ அரிசி என்ன விலை.. பருப்பு என்ன விலை.. கத்தரிக்காய் என்ன விலை என்றே தெரியாதவர்கள்..
ஐ.ஏ.எஸ் பதவி உயர்வில் அதிமுக அரசின் பரிந்துரையால் பல நேர்மையான அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்..
தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கம் உள்ள நேர்மையான அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கொடுத்தால், தமிழ்நாடு வளர்ச்சி பெறும்..
]]>
செய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்..
திருவல்லிக்கேணி அஞ்சல் நிலையம் எதிரே சத்யா DTP உள்ளது. அங்குதான் ஊடக அங்கீகார அட்டை விலைக்கு வாங்கி தரப்படுகிறது. சத்யா DTP நிலையத்தில் சித்திக் பாய் ஆல் இன் ஆல்..
பாரத அன்னை புரட்சித் தலைவி என்ற நாளிதழ் அதிமுக தலைமை கழகத்தில் போட்டோகிராபராக இருக்கும் சுரேஷ் நடத்துகிறார். தற்போது சுரேஷ் அதிகமாக அதிமுக தலைமை கழகத்திற்கு வருவதில்லை, தன்னுடைய உதவியாளர் கம் சப் –எடிட்டர் சந்திரசேகர்தான் போட்டோ எடுத்து வருகிறார்.
பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழுக்கு 2017லிருந்து ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு நான்கு பேருக்கு ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழில் வருவதில்லை..
சுரேஷ், டாக்டர் புரட்சித் தலைவி என்ற மாதமிருமுறை பத்திரிகை ஆர்.என்.ஐ டைட்டில் வாங்கி உள்ளார். ஆனால் பத்திரிகை வருவதில்லை.. மூன்று பிரஸ் பாஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.
விற்பனைக்கு மட்டுமல்ல, பி.ஆர்.ஒ அலுவலகத்துக்கு கூட வராத பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழ், டாக்டர் புரட்சித் தலைவி மாதமிருமுறை இதழுக்கும் தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது..
புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழின் ஊடகம் அங்கீகார அட்டை செய்தி வெளியானதும், தலைமைச் செயலகத்தின் பி.ஆர்.ஒ அலுவலகத்தில் விவாதம் நடந்தது..பி.ஆர்.ஒ சார்.. உண்மையான அடையாள அட்டைதான்.. ஆதாரம் வெளியிடவா…
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் பி.சங்கர் ஐ.ஏ.எஸ் அய்யா என்னதான் செய்கிறார்….நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்… தொடரும்…
இந்த பதிவு தொடர்பாக ஆதரவாகவும், எதிர்த்தும் பல கருத்துக்கள் வெளியாகியது. 2013ல் ஆர்.என்.ஐ பெற்ற நாளிதழ் 2014 வரை ஊடகம் அங்கீகார அட்டை வாங்கவில்லை..வெளிவராத பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழ் 2.2.19 தேதியிட்ட பி.டி.எப் வெளியாகி உள்ளது..
]]>