Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197
DVACயில் ஊழலா? – சுதாதேவி ஐ.ஏ.எஸ் பலிகடா-காப்பாற்றப்பட்ட அமைச்சர் சரோஜா | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)

DVACயில் ஊழலா? – சுதாதேவி ஐ.ஏ.எஸ் பலிகடா-காப்பாற்றப்பட்ட அமைச்சர் சரோஜா

தமிழக அரசு சத்துணவு திட்டத்துக்கு வாரம் 5 நாட்கள் முட்டை சப்ளை செய்யும், கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் சிக்கிய அமைச்சர் சரோஜா, அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வி.அமுதவள்ளி, மணிவாசன், சிவசங்கரன், அசோக் டோங்கரா, கண்ணன் மற்றும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சேவியர் கிறிசோ நாயகம் ஆகியோர் மீது 9.7.18ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பினேன்.

அந்த புகாரில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை பற்றி 10 வரிகள் தான் உள்ளது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் 9.7.18ம் தேதி அனுப்பிய புகாரை 24.9.18ல் அதாவது 80 நாட்கள் கழித்து , sec 17(A)(1) of prevention of corruption (amendment) act 2018ன்படி தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கிறது.. தலைமைச் செயலாளருக்கு அனுப்பி கடிதத்தில் திருமதி சுதாதேவி ஐ.ஏ.எஸ் மற்றும் பலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஊழல்கள், ஆதாரங்களுடன் 3 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவது பக்கத்தில் சுதாதேவியை பற்றி 10 வரிகள் தான், இருக்கையில், சுதாதேவி ஐ.ஏ.எஸ் பெயரை எப்படி குறிப்பிட்டு தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பட்டுள்ளதை பார்க்கும் போது, ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

9.7.18ம் தேதி அனுப்பிய புகார் மனு, 10.7.18ல் பெறப்பட்டுள்ளது. இந்த புகாரை sec 17(A)(1) of prevention of corruption (amendment) act 2018ல் கொண்டு வர முடியாது. ஏனென்றால் இந்த சட்டம் 26.7.18 தான் செயல்பாட்டுக்கு வருகிறது..செயல்பாட்டுக்கே வராத சட்டத்தின் படி எப்படி என்னுடைய புகாரை, தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்ய முடியும்..

DVACயில் சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை பலிகடாவாக்கி, குமாரசாமி, அமைச்சர் சரோஜா, அமைச்சர் காமராஜ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை  காப்பாற்ற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது..

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் ஊழலில் முழ்கிவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுந்துள்ளது..

                                   

 

Comments

comments