DVACயின் அவல நிலை… குமாரசாமியை காப்பாற்றும் முருகன் ஐ.பி.எஸ்

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நிர்வாகம் முடங்கிவிட்டது..இனி ஊழல் புகாரை ஆதாரங்களுடன் கொடுக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் முட்டை ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் 4.7.18 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு (DVAC)  விரைவு அஞ்சல் மற்றும் மெயிலில் புகார் அனுப்பினேன். விரைவு அஞ்சல் தபால் 5.7.18ல் மாலை 4.11க்கு பெற்றுள்ளார்கள்.

5.7.18 அன்று தான் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கிறது. நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் நடக்கிறது.

4.7.18ல் முட்டை ஊழல் தொடர்பாக அனுப்பிய புகார் மனுவில் சுதாதேவி ஐ.ஏ.எஸ் தொடர்பாக ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் சரோஜா முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடர்பான விவரங்கள் உள்ளது.

 ஆனால் 9.7.18ல் அனுப்பிய முட்டை ஊழல் தொடர்பாக அனுப்பிய புகார் மனுவில் நான்காம் பக்கத்தில் ஒரு பாரா 10 வரிகளில் சுதாதேவி ஐ.ஏ.எஸ் தொடர்பாக கூறியுள்ளோம். சுதாதேவி ஐ.ஏ.எஸ் மட்டுமல்ல  நுகர்பொருள் வாணிப கழகத்தின் விஜிலென்ஸ் அதிகாரி முனியாண்டி, தலைமை கணக்கு அதிகாரி மாசிலாமணி பெயரும் இடம் பெற்றுள்ளது.

24.9.18ம் தேதியிட்டு(petn.No.6732/2018/PUB/CC-HQ ) விஜிலென்ஸ் இயக்குநரகம், தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் நமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. DVAC தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடித்ததில் வி.அன்பழகன், மக்கள்செய்திமையம் புகார் கடிதம் தேதி 4.7.18 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. The allegations in the petition are leveled against the following officials..Tmt Sudhadevai IAS என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4.7.18ல் அனுப்பிய முட்டை ஊழல் புகாரில், சுதாதேவி ஐ.ஏ.எஸ் தொடர்பாக ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை..பிறகு எப்படி சுதாதேவி பெயரில் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்ப முடியும்..

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியையும், சிக்கிய ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், அமைச்சர்கள் சரோஜா, காமராஜ்யையும் காப்பாற்ற, இணை இயக்குநர் முருகன் ஐ.பி.எஸ் முடிவெடுத்துவிட்டார், அதனால் பொய்யான கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ளார்.

        DVACயின் அவல நிலையை கடிதமே உறுதி செய்துவிட்டது.. DVAC நிர்வாகம் முடங்கி போய்விட்டது உறுதியாக தெரிகிறது..

 

Comments

comments