DO WELL சபேசனை காப்பாற்றுவது யார்?-வருமான வரித்துறை அதிமுகவுக்கு ஆதரவா…

வருமான வரித்துறைக்கு கிடைத்த, ரகசிய தகவலின் பேரில், DO WELL ASSOCIATE உரிமையாளர் சபேசன் வீட்டில் அதிரடியாக நடத்திய ரெய்டில் ரூ15கோடி பிடிப்பட்டது. சபேசன் வீட்டில் பிடிப்பட்ட பணம் கோயம்புத்தூர் பி.என் பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட் போட்டு சில கோடிகள் வைக்கப்பட்டு இருந்தது.

 சபேசனிடம் நடந்த விசாரணையில், சரவணனைப்பற்றி உளறிக்கொட்டிவிட்டு, மயங்கி விழுந்துவிட்டார். சரவணன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ77 இலட்சம் பிடிப்பட்டது.

 வருமான வரித்துறையினரால் பிடிப்பட்ட ரூ15.77கோடி தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை எதுவும் தராமல் மெளனமாக இருக்கிறது. சபேசனை வருமான வரித்துறை விசாரிக்கவும் இல்லை.

 DO WELL ASSOCIATE பெயரில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எல்.இ.டி விளக்கும் உள்ளிட்ட அனைத்து தெரு விளக்குகளையும் சப்ளை செய்து வருகிறார். சபேசனை போலி பில் சபேசனை என்றுதான் அழைப்பார்கள்..

 நகராட்சி நிர்வாகத்தின் தஞ்சை மண்டலம் மற்றும் சேலம் மண்டலத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் சபேசன் எல்.இ.டி விளக்கு சப்ளை தொடர்பான டெண்டரில், கே.சி.பி சந்திரசேகர் பாட்னர் என்று கையெழுத்து போட்டு இருப்பதாக தெரிகிறது.

 சபேசனை ஆதரவாக பாஜகவின் அகில இந்திய நிர்வாகிகளில் ஒருவர் வருமான வரித்துறைக்கு சிபாரிசு செய்த காரணத்தால், சபேசனை வருமான வரித்துறை விசாரிக்கவில்லை.

         சபேசன் வீட்டில் ரெய்டு நடக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, 1.4.19ல் வேலூரில் நடந்த ரெய்டின் போது கைப்பற்ற பணம் என்று பத்திரிகையாளர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளார்கள்..

 வருமான வரித்துறையும் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது..

  திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில்  அமைச்சர் பெஞ்சுமினும், அமைச்சர் மா.பாண்டியராஜனும் வாக்காளர்களுக்கு ரூ1000/- கொடுத்து வருகிறார்கள்..பணம் கட்டு கட்டாக சாக்கு மூட்டைகளில் அமைச்சர்களின் கார்களில், காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்வது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா.. வருமான வரித்துறைக்கு தெரியாதா…

 

 

 

Comments

comments