Breaking News

பல்லவபுரம் நகராட்சி… விஜிலென்ஸ் ரெய்டு நடந்து 45 வது நாள்… கோபாலகிருஷ்ணன் லீவாம்.. முடங்கி போன நகராட்சி நிர்வாக ஆணையரகம்….

  நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யின் எடுபிடி கம் நிழல் ஆணையர் கோபாலகிருஷ்ணன், நெருங்கிய உறவினர் திருமணத்துக்காக லீவு போட்டுவிட்டாராம், அதனால் நகராட்சி நிர்வாக ஆணையரகம் முடங்கி போய்விட்டதாம்..ஆணையர் அலுவலகத்தை மூடிவிடலாமே… பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் நகரமைப்பு அதிகாரி மாறனிடமிருந்து ரூ1,51,500ம், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ49,000 மற்றும் ஒரு பவுன் தங்க காசு …

Read More »

திருமழிசை காய்கறி சந்தை.. ரூ10.91கோடி அம்போ.. ரூ6.91கோடிக்கு போலி பில்…

கொரோனா பரவுவதை தடுக்க, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மூடு விழா நடத்தப்பட்டு, திருமழிசையில் காய் கறி சந்தை தற்காலிகமாக அமைக்கப்பட்டது. திருமழிசை காய்கறி சந்தை தற்காலிகமாக அமைக்கவும், விரிவாக்கம் செய்யும், அரசாணை எண்.(எம்.எஸ்) எண்.251 தேதி 23.05.2020ன் படி ரூ10.9174கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது..   ஆனால் திருமழிசை காய்கறி சந்தை அமைக்க, அதிகபட்சமாக ரூ4கோடி வரைதான் செலவாகும். திருமழிசை காய்கறி சந்தை அமைக்கப்பட்டதில் ரூ 6.91கோடிக்கு போலி பில் போடப்பட்டுள்ளது. மேலும் …

Read More »

பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின் துக்ளக் தர்பார்.. சென்னை மாநகராட்சியில் தினமும் குவியும் மக்கள்.. முகக் கவசம் – சமூக இடைவெளி கேள்விக்குறி…

சென்னை  மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கீடுகள் பெற விண்ணப்பம் பெற சென்னை மாநகராட்சியில் ரிப்பன் மாளிகையில்  தினமும்  காலை 8மணி முதல் மாலை 6மணி வரை ஆயிரக்கணக்கான மக்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிகிறார்கள்…முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் குவியும் மக்களுக்கு, சென்னை மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிப்பதுதான் வேதனையாக இருக்கிறது.   முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் குவிந்து, அலைபாயும் …

Read More »

சென்னை மாநகராட்சி- மண்டலம் -5.. சனிக் கிழமை கழுகு லாரன்ஸின்- டெங்கு கொசுப்பண்ணை..

  சென்னை மாநகராட்சி மண்டலம் -5ன்  செயற்பொறியாளர் லாரன்ஸ்யை அன்பாக சனிக்கிழமை கழுகு என்று அழைப்பார்கள்.. சனிக் கிழமை கழுகு லாரன்ஸ் மனைவி பெயரில் வாங்கிய மனையில் ரூ2கோடியில் கட்டும் நவீன பங்களாவுக்கு, மார்வாடிகள் உள் அலங்காரத்துக்கு செலவு செய்கிறார்கள். மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு சனிக் கிழமை கழுகு லாரன்ஸ் கொடுக்கும் மாத மாமூல்  ரூ2இலட்சம்..  சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் மண்டலம் -5ல் டெங்கு கொசுப்பண்ணையே நடத்துகிறார்.  டெங்கு கொசுவை …

Read More »

பல்லவபுரம் நகராட்சி… விஜிலென்ஸ் ரெய்டு நடந்த நாள் 5.11.2020 43வது நாள்….

  பல்லவபுரம் நகராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் 05.11.2020 அன்று நடத்திய அதிரடி ரெய்டில் நகரமைப்பு அதிகாரி மாறனிடமிருந்து ரூ1,51,500 மற்றும் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ49,000 மற்றும் ஒரு பவுன் தங்க நாணயம் கைப்பற்றப்பட்டது.   6.11.2020 அன்று நகரமைப்பு அதிகாரி மாறன் வீட்டில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மாறன் மனைவி லட்சுமி பிரியா பெயரில் லட்சுமி  பில்டர்ஸ்,  மகன் அஸ்வத் பெயரில் …

Read More »

ரஜினிகாந்தின் பினாமி கட்சியான- மக்கள் சேவை கட்சி தனித்து போட்டியா.. கிட்னி கொடுத்த சஞ்ஜெய் எங்கே?….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், பிரபலமான தொழில் அதிபர், சினிமா தயாரிப்பாளருமான ரஜினிகாந்த் மன்றத்தின் துாத்துக்குடி மாவட்ட நிர்வாகி ஸ்டாலின் ராஜா பெயரில் மக்கள் சேவை கட்சி, சின்னம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னமும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. ரஜினிகாந்தின் பினாமி கட்சியான மக்கள் சேவை கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் போது, கொடுக்கப்பட்ட நிர்வாகிகளில் சிலரை ஜனவரி …

Read More »

சென்னை மாநகராட்சி… நான் தாண்டா ஆணையர்- நந்தகுமார் சி.இயின் ஊழல் ராஜாங்கம்.. 672 பேட்டரி வாகன கொள்முதலில் ஊழல்…

பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் டம்மி, நான் தாண்டா ஆணையர் என்று தலைமைப் பொறியாளர்(பொது) நந்தகுமார், அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.   பேட்டரி வாகனம் கொள்முதல், மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறை சேர்ந்தது. ஆனால் , மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையின் தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன் இருவரும் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் மாதிரி டம்மி. அதனால் தலைமைப் பொறியாளர் நந்தகுமாரே, பேட்டரி வாகனங்கள் கொள்முதல் …

Read More »

பல்லவபுரம் நகராட்சி.. விஜிலென்ஸில் சிக்கிய மாறனை காப்பாற்ற- இலஞ்ச சூதாட்டம்…

பல்லவபுரம் நகராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் 5.11.2020 அன்று அதிரடியாக  ரெய்டு நடத்தியதில் நகரமைப்பு அதிகாரி வெ.மாறனிடமிருந்து ரூ1,51,500ம், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ49,000 மற்றும் ஒரு பவுன் தங்க காசு கைப்பற்றப்பட்டது.  ஆனால் சில நாட்கள் லீவில் சென்ற நகரமைப்பு அதிகாரி மாறன், மீண்டும் இலஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ரூவல் கொடுக்கும்  மாமூல் தொழிலை தொடங்கினார்.   விஜிலென்ஸில் சிக்கிய மாறன், மனைவி லட்சுமி பிரியா, …

Read More »

மனைவியா.. பினாமியா… அமைச்சர் பெஞ்சுமினின் பவர் ஏஜென்ட் நாடகம்…

           அமைச்சர் பெஞ்சுமின், தன் பவர் ஏஜென்டாக உள்ள சொத்தை  தன் மனைவி  ஷீலா பெயருக்கு ரூ3.40 இலட்சத்துக்கு 34 செண்ட் நிலத்தை விற்பனை செய்கிறார்.     ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சுமின் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ஊழல் ராஜா… அமைச்சர் பெஞ்சுமினை கண் அசைவு இல்லாமல், இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட முடியாது.   மதுரவாயல், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் …

Read More »

103.864 கிலோ தங்கம் எங்கே?- சிக்கும் சிபிஐ அதிகாரிகள்.. யார் இந்த தேவராஜன்?- நடந்தது என்ன… விரைவில் புத்தகமாக..மக்களிடம்..

சென்னையில் சுரானா கார்ப்பரேசன் லிமிட் நிறுவனத்தின் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் 400.47கிலோ தங்கம் வைக்கப்பட்டு இருந்தது. சுரானா கார்ப்பரேசன் லிமிட் நிறுவனத்தின் LIQUIDATOR இராமசுப்ரமணியம் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 400.47கிலோ தங்கத்தில் 296.606கிலோ தங்கம் தான் இருக்கிறது.  103.864கிலோ தங்கத்தை காணவில்லை என்று  புகார் கொடுக்க பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றம் 6 மாதத்திற்கு விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்யும் படி சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது. சிபிஐக்கு விசாரணைக்கு  …

Read More »