Breaking News

CMDA சீனியர் பிளானர் ரூத்ரமூர்த்தி மீது ஊழல் வழக்கு- நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் ரூ1000கோடி ஊழல்- சட்டத்துக்கு புறம்பாக 10,000 அப்ரூவல்கள்..

சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் சீனியர் பிளானர் ரூத்ரமூர்த்தி தெரியாமல் ஒரு கோப்பு கூட நகராது. சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் –செயலாளராக கடந்த 15 ஆண்டுகளில் இருந்த எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாலும், ரூத்ரமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.  ஊழல் சக்கரவர்த்தி ரூத்ரமூர்த்தியின் ராஜாங்கத்தில்தான் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல் ஆகிய நகராட்சிகள் செயல்படுகிறது. இந்த நகராட்சிகளில் பணியாற்றும் நகரமைப்பு …

Read More »

காவல்துறையில் ரூ350 கோடி ஊழலா?- எல்காட்டில் பல கோடி ஊழல் புகழ் அன்புசெழியன் ஐ.பி.எஸ் சிக்கியுள்ளரா?

தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவின் எஸ்.பியாக இருக்கும் அன்புசெழியன் ஐ.பி.எஸ் கடந்த ஏழு ஆண்டுகளாக காவல்துறைக்கு தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதலில் ஊழல் செய்துள்ளார் என்று உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி ஐ.பி.எஸ், விஜிலென்ஸ் …

Read More »

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்- ஏரி ஆக்ரமிப்பு மாபியா ரூபி மனோகரன்.

சேலையூர் ஏரி ஆக்ரமிப்பு மாபியா ரூபி பில்டர்ஸ் மனோகரன், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.                                     காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஏரி(சர்வே எண்.145/3A) பெரும் பகுதி ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. 30.8.2014ம் தேதி மாலை ஜேசிபி மூலம் ஏரிக்கரையின் பின் சரிவினை RUBI BUILDERS நிறுவனம் வெட்டி சேதப்படுத்தி, அகலப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உதவி பொறியாளர் நீர் பாசனப்பிரிவு குஜராஜ், சேலையூர் …

Read More »

புதுக்கோட்டை மாவட்டம்.. பிரதமர் மோடியை ஏமாற்றிய ஒப்பந்தகாரர் சோத்துபாளை முருகேசன்- ரூ221 இலட்சம் கிராம சாலை அம்போ…

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை நிழல் அமைச்சர் என்று அன்பாக அழைக்கப்படும் ஒப்பந்தகாரர் சோத்துபாளை முருகேசன், பிரதம மந்திரி கிராம சாலைகள்  திட்டத்தில்  செய்த முறைகேடுகளை எதிர்த்து கந்தவர்க்கோட்டை அடுத்த கள்ளிப்பட்டி கிராம மக்கள் தார் சாலை எங்கே என்று ஆவேசமாக குரல் எழுப்பி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.   பாரத் நிர்மான் கட்டம் -10ல் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் T.S.P சாலை முதல் விராலிப்பட்டி சாலை …

Read More »

சென்னை மாநகர காவல்துறை.. மறக்க முடியுமா 27.9.14- மறக்க முடியுமா 19.12.18- மறக்க முடியுமா 12.9.19.

மறக்க முடியுமா 27.9.14 – மறக்க முடியுமா 19.12.18- மறக்க முடியுமா 12.9.19 இந்த மூன்று சம்பவங்களுக்கும் சென்னை மாநகர காவல்துறைக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. 26.9.14ல் பெங்களூர் நீதிமன்றம், சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி    மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். 27.9.14 அன்று முதல்  அதிமுக எம்.எல்.ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர், அதிமுக நிர்வாகிஅக்ள் அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி …

Read More »

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர்- நாராயணனின் பயோடேட்டா.

பெயர் – ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் பதவி – திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் படிப்பு – 10ம் வகுப்பு தொழில் – துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சம்மந்தி மாஜி காவல்துறை அதிகாரி  கந்தசாமியின் மகன், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் இருவருடனும்கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் தொழில். அதிமுகவில் எந்த அணி-   துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணி. சிபாரிசு செய்தவர் –    நாங்குநேரி தொகுதி வேட்பாளராக …

Read More »

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு சீட்டு இல்லையாம்.. வாக்குபதிவு இயந்திரமாம்.. அரசியல் கட்சிகள் மெளனம் ஏன்?

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.  மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின்  செயல்பாடுகள் குறித்து, பெரும்பாலான எதிர்கட்சிகள் பல சந்தேகங்களை எழுப்பினார்கள். இனி வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்குபதிவு நடப்பதை விரும்பவில்லை என்று சரத்பவார் வெளிப்படையாகவே அறிவித்தார். காங்கிரசு கட்சியும் வாக்குபதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அதிருப்தியை …

Read More »

திருவண்ணாமலை – போளூர் – ரூ16.80 இலட்சத்தில் தடுப்பணை- உலக அதிசயத்தில் இணைப்பு

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் கிராம பஞ்சாய்த்துகளில் அதிக அளவில் ஊழல் நடக்கிறது. கிராமங்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை . தடுப்பணை என்ற பெயரில் அதிகாரிகளின் ஊழல் கூத்தை பாருங்கள்..      திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள கல்வெட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2018-19ல் மலைக்கால்வாய் நீர்வரத்துக் கால்வாய் பலப்படுத்துதல், தடுப்பணை கட்டும் பணிக்கு ரூ16.80 …

Read More »

நாங்குநேரி இடைத்தேர்தல்… அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியா?

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடலாம் என்று அமித்ஷாவுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட சிலர் ஆலோசனை கூறியுள்ளார்கள். மேலும் நடிகர் சரத்குமார் கட்சியை பாஜகவில் இணையவைத்து, பாஜக வேட்பாளராக சரத்குமாரை நிறுத்தலாமா அல்லது இராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரனை நிறுத்தலாமா என்று பாஜக தலைமை ஆலோசனை செய்வதாக பாஜக ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவருகிறது.   பாஜக தலைமைக்கு நாங்குநேரி இடைத்தேர்தலில் …

Read More »

விக்ரவண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி..திமுக தலைமை ஒப்புதல் இல்லாமல் அறிவித்த மாஜி அமைச்சர் பொன்முடி.. விருப்ப மனு உண்டா.. நேர்காணல் நடைபெறுமா.. திமுக தொண்டர்கள் குழப்பம்…

விக்ரவண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி என்று மாஜி அமைச்சர் பொன்முடி அறிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். விக்ரவண்டி தொகுதிக்கு போட்டியிடுவோர் விருப்ப மனு 23ம் தேதி அறிவாலாயத்தில் பெற்றுக்கொள்ளப்படும். 24ம் தேதி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி, வேட்பாளர் 24ம் தேதியே அறிவிக்கப்படுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந் நிலையில் இன்று காலை(22.9.19) மாஜி அமைச்சர் பொன்முடி, மாவட்ட பொருளாளர் புகழேந்தியையும், மாவட்ட துணைச் செயலாளர் …

Read More »