Breaking News

செங்கல்பட்டு கலெக்டராக- கருப்பையா ராஜா ஐ.ஏ.எஸ் நியமனமா? பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் பரிந்துரை..

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் செயற்பொறியாளர் பதவி உயர்வை விலைக்கு வாங்கி,  செங்கல்பட்டு மண்டல பொறியாளராக பதவியில் அமர்ந்த, தாம்பரம் பெரு நகராட்சி பொறியாளர் மற்றும் பொறுப்பு ஆணையர் கருப்பையாராஜாவுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பதவிக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மற்றும் கூடுதல் இயக்குநர் அசோகன் பரிந்துரை செய்துள்ளார்கள்..  பல்லவபுரம் நகராட்சி பொறியாளர் கருப்பையாராஜா 18.6.2019ல் தாம்பரம் பெரு நகராட்சி உதவி செயற் பொறியாளராக பதவியை பல …

Read More »

கொரோனா..சாத்தான்குளம்.. இரட்டை கொலையில் காப்பாற்றப்பட்ட முதல் குற்றவாளி சிறப்பு எஸ்.ஐ பாலு… காவல்துறை பி.ஆர்.ஒ சத்தியநாரயணன் மச்சான்…

சாத்தான்குளம்  ஜெயராஜ், பென்னீக்ஸ் இருவருரையும், சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய தாக்குதலில் பலியானார்கள். இந்த கொலையில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்..  சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தலைமைக்காவலர் மற்றும் சிறப்பு எஸ்.ஐயாக பணியாற்றும் பாலு என்கிற பாலசுப்ரமணியன் என்கிற குண்டாஸ் பாலுதான் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் காவல்துறை பி.ஆர்.ஒ சத்தியநாரயணன் மச்சான் …

Read More »

கொரோனா…தாம்பரம் நகராட்சி.. ஆணையர் பதவி ஏலம்… ஏலம் எடுத்த கருப்பையாராஜா… பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஊழலுக்கு அடிமையாகிவிட்டாரா…

தாம்பரம் பெரு நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் பொறுப்பு பதவியில் இருந்த கருப்பையாராஜா, செயற்பொறியாளர் பதவி உயர்வை விலைக்கு வாங்கி, நகராட்சி நிர்வாகத்தின் செங்கல்பட்டு மண்டல பொறியாளர் பதவியில் அமர்ந்தார்.  தாம்பரம் பெரு நகராட்சிக்கு உடனடியாக ஆணையர் ஒருவரை நியமித்து இருக்க வேண்டும். ஆனால் தாம்பரம் பெரு நகராட்சிக்கு ஆணையர் பதவிக்கு ஏலம் நடந்தது. ஏலத்தில் மண்டல பொறியாளர் கருப்பையா ராஜாவே, ஆணையர் பதவியை பல லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். …

Read More »

கொரோனா..சென்னை.. சிறப்பு முகாம் கூத்து.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் “FACKLESS”- அம்மா மாளிகையா…கொரோனா மாளிகையா?-

சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்ட நிலையில் மின்னல் வேகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பரவி வருகிறது. சென்னையில் கொரோனா சமூக பரவலாக மாறுகிறது என்பதை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சுகாதாரத்துறை செயலாளராக  மாறுதல் செய்யப்பட்டப்பிறகு, சென்னை மாநகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். அதே போல், கொரோனா சிறப்பு அதிகாரிகளுக்கும், பிரகாஷ் …

Read More »

கொரோனா…கொள்ளை… கிருமி நாசினி கொள்முதலில்- கோடிக்கணக்கில் ஊழல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரூ2.40கோடி கமிசன்…

கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க, கிருமி நாசினியாக 5% சோடியம்ஹைப்போகுளோரைட் (SODIUM HYPOCHLORITE) சுத்தம் செய்யும் பணிகளுக்கு (DISINFECTANTS) பயன்படுத்தப்பட்டு வருகிறது.  5% SODIUM HYPOCHLORITE கிருமி நாசினியின் ஒரு லிட்டர் ரூ5 கிடைக்கிறது. பிரபலமான கம்பெனிகள் அதிகபட்சமாக ஒரு லிட்டர் ரூ7க்கு விற்பனை செய்கிறது.  கொரோவை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளதை பார்க்கும் ஓது, கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதை …

Read More »

கொரோனா –கொலை.. ஜெயராஜ்-பென்னீக்ஸ் கொலை- சிபிசிஐடி விசாரணை நியாயமாக நடக்குமா?

  சாத்தான்குளத்தில் காவல் நிலைய அதிகாரிகளில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலியான  ஜெயராஜ், பென்னீக்ஸ்  தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரணை தொடங்கு வரை திருநெல்வேலி சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார் விசாரிப்பார் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை என்று அறிவித்துள்ளது.  திருநெல்வேலி சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. உயர் நீதிமன்ற ஆணையை சற்றும் மதிக்காத அதிகாரி சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார்,  2018ம் ஆண்டு அதாவது 4-3-2018 ல்  தூத்துக்குடி …

Read More »

கொரோனா..நகராட்சி நிர்வாகம்- சட்டத்துக்கு புறம்பாக செயற் பொறியாளர் பதவி உயர்வு.. நகராட்சிகளில் சரவணன் போட்டோ…

    கொரோனா நோய் மின்னல் வேகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பரவிவருகிறது. ஆனால் கொரோனா பரவலைப்பற்றி கவலைபடாமல், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக போடப்பட்ட போலி பில் மூலம் கொள்ளையடித்த பணத்தில் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் பணியாற்றும் உதவி செயற்பொறியாளர் பதவியிலிருந்து செயற்பொறியாளர் பதவி உயர்வு தகுதி பட்டியலில்(சீனியார்ட்டி பேனல்) இடம் பெற ஏலமே நடந்தது. செயற்பொறியாளர் தகுதி பெற …

Read More »

கொரோனா – ரூ3,55,595… எஸ்.ஆர்.எம் மருத்துவமனையா – கொள்ளைக்கார மருத்துவமனையா… பி.பி.இ கிட்டுக்கு ரூ2,40,000/-

 கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடம் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல லட்சம் வசூல் செய்யப்படுகிறது. இந்த தனியார் மருத்துவமனைகளின் வசூல் வேட்டையை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.   பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி பாரிவேந்தர் பச்சமுத்துவின் காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நமது நண்பரின் பில்… Professional charges – Rs 2000X16days = Rs 32,000Investigation …

Read More »

கொரோனா..நகராட்சி நிர்வாகம் செயற் பொறியாளர் பதவி உயர்வு.. வாங்க..சார்..வாங்க… ரூ10 இலட்சம்.. ஒரு தரம்..இரண்டு தரம்..மூன்று தரம்…

கொரோனா நோய் மின்னல் வேகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பரவிவருகிறது. ஆனால் கொரோனா பரவலைப்பற்றி கவலைபடாமல், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக போடப்பட்ட போலி பில் மூலம் கொள்ளையடித்த பணத்தில் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் பணியாற்றும் உதவி செயற்பொறியாளர் பதவியிலிருந்து செயற்பொறியாளர் பதவி உயர்வுக்கு ரூ10 இலட்சம் வரை இலஞ்சம் கொடுத்து, பதவி உயர்வு தகுதி  பட்டியலில்(சீனியார்ட்டி பேனல்) இடம் …

Read More »

கொரோனா… டூபாக்கூர் நிறுவனத்தில்- மாஸ்க் கொள்முதல் செய்த “ FECKLESS” பிரகாஷ் ஐ.ஏ.எஸ்… ரூ59 இலட்சம் கமிசன்…

சென்னை மாநகராட்சியில் 14 இலட்சம்  3 ply மாஸ்க், 5 சதவிகிதம் ஜி.எஸ்.டியுடன் ரூ9.71விலைக்கு டில்லியை சேர்ந்த   டூபாக்கூர் டில்லி  GREENVAC SOLUTION  நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய, 28.3.2020ல் சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டில்லி  GREENVAC SOLUTION  நிறுவனம், மாஸ்க் தயாரிக்கவே இல்லை. Greenvac works with facility owners, Developers, Architects, Consultants, Governments or stake holders to create a SMART, Green, Healthy …

Read More »