Breaking News

கொரோனா… அதிமுக அரசின் முகக் கவசம் ஊழல் ரூ100கோடி… மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம்..

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த முகக் கவசம் கட்டாய அணிய வேண்டும் என்ற தினமும், வித விதமான அரசாணை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு அரசு ஆணையிலும்  3 லேயர் முகக் கவசம், என்.95 முகக் கவசம் விலை வேறுபாடாக இருந்தது.  அதிமுக அரசின் முகக் கவசம் கொள்முதலில் மட்டும் ரூ100கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ரூ100கோடி முகக் கவசம் ஊழலுக்கான ஆதாரங்களை மக்கள்செய்திமையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் ஆவணங்களை …

Read More »

வேலூர் மாவட்டம்.. கலெக்டர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை – மத்திய அரசு உத்தரவு…

தமிழ்நாடு, ஆந்திரா மாநிலம் எல்லையில் சுவர் எழுப்பிய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது மக்கள் செய்திமையம் மத்திய அரசின் (Department of personnel and training) ஆதாராங்களுடன் புகார் அனுப்பியது. மத்திய அரசு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தமிழக தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது.    கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் …

Read More »

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய- அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- DO WELL சபேசன் எங்கே?…

உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், சில நாட்களுக்கு முன்பு ஒரங்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.   உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளராக நகராட்சி நிர்வாகத்தின் வேலூர் மண்டல பொறியாளர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.      வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீழ்க்கட்டளையில் DO WELL ASSOCIATES உரிமையாளரும், நகராட்சிகளில் ஒப்பந்தம் எடுக்கும் சபேசன் வீட்டில் 28.3.19ல் நடந்த …

Read More »

நகராட்சி நிர்வாகம்… சாலையோர சிறு வியாபாரிகளுக்கு- ரூ14.63கோடி நிவாரணம்… உங்கள் நகராட்சியில் கொடுத்தார்களா?…

       நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகள், மாநகராட்சிகளில் சாலையோர சிறு வியாபாரிகள்க்கு நிவாரணத் தொகையாக ரூ1000 கொடுக்கப்பட்டதற்கு ரூ14,64,43,000/-(ரூ14.63கோடி) செலவானதாக கோப்புகளில் உள்ளது..   உங்கள் ஊரில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கிடைத்ததா..இதோ..மினி பட்டியல்… பெரு நகர சென்னை மாநகராட்சி – 30,000 சிறுவியாபாரிகள்-  ரூ3கோடிகோவை மாநகராட்சி – 10,208 சிறு வியாபாரிகள் –ரூ1,02,08,000(ரூ.1.02கோடி)மதுரை மாநகராட்சி – 12,486 சிறு வியாபாரிகள் – ரூ1,24,86,000(ரூ1.24கோடி)புதுக்கோட்டை …

Read More »

தமிழக அரசின்… அதிகாரமையத்தில் வலம் வரும்- இந்தியில் பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

டாக்டர் பி.சந்திரமோகன் ஐ.ஏ.எஸ், சம்புகல்லோலிகர் ஐ.ஏ.எஸ் இருவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர். மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், தமிழில் பேசுவார்கள், எழுதுவார்கள், இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்ற விளக்கம் நமக்கு கிடைத்தது மகிழ்ச்சி..  ஆனால் வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்றாலும், எனக்கு தெரிந்தவரை தமிழில் பேச மாட்டார். ஆங்கிலம், தெலுங்கில்தான் பேசுவார்         தமிழக …

Read More »

தமிழக அரசின்… அதிகாரமையத்தில் வலம் வரும்- இந்தியில் பேசும்- ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

தமிழக அரசின் அதிகாரமையத்தில் வலம் வரும் செயலாளர்கள், தமிழ், ஆங்கில தெரிந்தாலும் இந்தியில்தான் பேசிக்கொள்வார்கள்.  அந்தந்த துறை அதிகாரிகளிடம்  கோப்புகள் தொடர்பாக  பேசும் போதுதான் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அரசு கோப்புகள் அனைத்திலும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுவார்கள், குறிப்பு எழுதுவார்கள். கீழே உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒருவருக்கு கூட தமிழில் எழுத தெரியாது…ஏன்…தமிழக அரசு ஆணையின் படி தமிழில் கையெழுத்து போட தெரியுமா என்பதே கேள்விக்குறிதான்…  இப்படி இந்தி பேசும் ஐ.ஏ.எஸ் …

Read More »

ஏழைகளை ஏமாற்ற- புரட்சித் தலைவி காப்பீட்டுத் திட்டம்..

கொரோனாவில் ரூ500கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. கொரோனா கொள்ளைகளை மறைக்கவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள  வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு புரட்சித் தலைவி காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் அப்பாவி மக்களை ஏமாற்ற அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் இந்த காப்பீட்டுத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது..  முதல் கட்டமாக கிராம பஞ்சாய்த்து மற்றும் பேரூராட்சிகளில் புரட்சித் தலைவர் காப்பீட்டுத்திட்டத்தை செயல்படுத்த …

Read More »

கொரோனா…திருவள்ளூர் மாவட்டம்… சோழவரம் ஏரியில் சட்ட விரோத சவுடு மண் கொள்ளை… பின்னணியில் கலெக்டரின் கணவரா?..

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியின் அலமாதி, திருக்கண்டலம், பென்னகர்பேட்டை பகுதிகளில் சட்ட விரோதமாக, 50 அடிக்கு மேல் ஆழம்  வரை தோண்டி சவுடு மண் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.  சில மாதங்களுக்கு தமிழக அரசு நீர் நிலைகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தை மேம்படுத்த, இலவசமாக சவுடு மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசாணை வெளியிட்டது.  அந்த அரசாணையை சட்ட விரோதமாக பயன்படுத்தி சோழவரம் ஏரியை மொட்டையடித்துவிட்டார்கள். சோழவரம் ஏரியில் எந்த பக்கம் பார்த்தாலும், …

Read More »

சென்னை மாநகராட்சி – மதுரவாயல்.. ஏ.சி சண்முகம் ஆக்ரமித்த 8000சதுர அடி… விலை போன மாநகராட்சி அதிகாரிகள்..

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 144வது வார்டு மதுரவாயலில் ஏ.சி சண்முகத்தின் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைகழகம்  சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 8000 சதுர அடி நிலத்தை  அமைச்சர் பெஞ்சுமின் ஆசியுடன் ஆக்ரமித்துள்ளது.  ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, கூவத்தை ஆக்ரமித்த, ஏ.சி.சண்முகம் கட்டிய பல லட்சம் சதுர அடி இடங்களை இடித்து தள்ளினார்.  அதே ஏ.சி சண்முகம், அமைச்சர் பெஞ்சுமின் ஆசியுடன் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப்பல்கலைக் கழகத்துக்கான மீண்டும் …

Read More »

திருவேற்காடு நகராட்சி- விஜிலென்ஸில் சிக்கிய- ராஜேந்திரன், கவிதா புரோக்கர் அருண்… கைது செய்ய தயக்கம் ஏன்… மக்கள் செய்திமையம் வழக்கு தொடர முடிவு…

  திருவேற்காடு நகராட்சியில் 02.09.2020 பிற்பகல் 12மணிக்கு அதிரடி நுழையந்த விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் திருமதி கவிதா  மற்றும் லைசென்ஸ் சர்வேயர் கம் புரோக்கர் அருண் மூவரும் சிக்கினார்கள்.   நகரமைப்பு பிரிவில்  காத்திருந்த முவரும், நகரமைப்பு அதிகாரிகளிடம் இலஞ்சம் கொடுக்கவே பணத்துடன் உட்கார்ந்து இருக்கோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஒருவர் ராஜேந்திரனிடம் பணம் கொடுக்கும் போது, விஜிலென்ஸ் சிக்கினார்கள். பணம் பரிமாற்றம் சி.சி.டி.வி …

Read More »