சென்னை மயிலாப்பூர் சரக துணை ஆணையர் திரு சரவணன் ஐ.பி.எஸ் அய்யாவுக்கு வணக்கமுங்க.. மிகவும் நேர்மையான அதிகாரி என்பதால் இந்த சேதியை சொல்லுகிறோம்.. தங்களது தனிப்படை முதல் குழுவில் பார்த்தசாரதி, சரவணக்குமார், முத்துகிருஷ்ணன், சுகுமார்..
இரண்டாவது தனிப்படை குழுவில் சையத், இளையராஜா. இந்த இரண்டு குழுவில் உள்ளவர்களில் மூன்று பேர் கிரைம் கதையை தனியாக புத்தகமே போடலாம்…
முத்துகிருஷ்ணன், காவல் துறையில் பணியாற்றிய மனைவி தீ வைத்து கொலை செய்ததாக வழக்கு நடந்து முடிந்துள்ளது. இளையராஜா சேத்துப்பட்டு தம்பையா கஞ்சா வியாபாரியிடம் இலஞ்சம் பெற்றதாக இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது ஊரறிந்த விசயம்..
21.4.18ல் கண்ணகி நகர் கஞ்சா வியாபாரி சுப்ரமணியை ஆவின் அடையாறு ஆவின் பூத் அருகே TN 10 M 5584 கருப்பு நிற இரு சக்கர வாகனத்தில் 1.250 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்டார். சுப்ரமணி மீது கிரைம் எண்.235/18/u/s353 IPC,8[c],20[b]ii[b]NDPS act r/w 25[1A] arms act 1959 பிரிவின் கீழ் முண்டக்கண்ணி அம்மன் ரயில் நிலையம் அருகில் கைது செய்தது போல் சிறையில் அடைக்கப்பட்டார்..
சுப்ரமணி மூன்று முறை குண்டர் சட்டத்தில் சென்றவர். தனிப்படை முத்துகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர். மந்தைவெளி ஆர்.டி.ஒ அலுவலகத்தின் உயரதிகாரி முத்துகிருஷ்ணனை செல்போனில் தொடர்புக்கொண்டு 1.250 கிலோ கஞ்சா இருக்கிறது விற்பனை செய்ய வேண்டும் என்கிறார்… கஞ்சா வியாபாரிகளிடம் முத்துகிருஷ்ணன் பேசி, சுப்ரமணியிடம் கஞ்சாவை விற்பனை செய்கிறார்கள்..
சுப்ரமணியை அடையாறு ஆவின் அருகில் தனிப்படை சையத் பிடித்தார்..அபிராமபுரம் ஆய்வாளரும் அருகில் இருந்தார். சுப்ரமணி இந்த கஞ்சாவை விற்பனை செய்ய சொன்னது தனிப்படையில் உள்ள தலைமை காவலர் முத்துகிருஷ்ணன். கஞ்சா மந்தை வெளி ஆர்.டி.ஒ அலுவலகத்தில் இருந்துதான் எடுத்து வருகிறேன் என்று வாக்குமூலம் கொடுத்தார்…
நமக்கேன் பெரிய இடத்து விவகாரம் என்று…அடையாறு ஆவின் பிடிப்பட்டது, முண்டக்கண்ணி அம்மன் ரயில் நிலையம் அருகே சுப்ரமணியை கஞ்சாவுடன் பிடித்தது போல், வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
இப்படி கஞ்சா வியாபாரியுடன் நெருக்கமாக உள்ள முத்துகிருஷ்ணன் தனிப்படையில் இருந்தால், துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ் பெயர் கெட்டுவிடாதா என்று நல்ல எண்ணத்தில் சேதியை சொல்லிவிட்டோம்…
இது போல் கோட்டூர்புரம் நகை கதை உள்ளிட்ட நிறைய சேதி இனி சொல்லுவோம்…
சரவணன் ஐ.பி.எஸ் பெயர் கெட்டவிடக்கூடாது.. அவ்வளவுதாங்க…