கடந்த ஐந்தாண்டு காலமாக முடங்கி போன செய்தித்துறை, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து, செய்தித்துறை அதிகாரிகளின் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு, பத்திரிகையாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தின் பி.ஆர்.ஒ கலைநேசன், உதவி இயக்குநர் சுப்ரமணியன் இருவரும் அழைப்பிதலை ஏலம் போட்டு விற்பனை செய்தார்கள்.. குன்றத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.ஆர்.ஒ கலைநேசன் ரூ500 கொடுத்து பதவியேற்பு விழா அழைப்பிதழ் விலைக்கு வாங்கி வந்தார். அதிமுக பிரமுகருக்கே அழைப்பிதழ் விலைக்கு விற்கப்படுகிறது.இதை போல் பல அதிமுகவினர் அழைப்பிதழை விலைக்கு வாங்கி, பதவியேற்புவிழாவில் பங்கேற்றார்கள்…இந்த கேவலமான நிலையில் தமிழக அரசின் செய்தித்துறை செயல்படுகிறது.
ஏன்.. பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அரசு பத்திரிகையாளர் அடையாள அட்டையை பி.ஆர்.ஒவும், உதவி இயக்குநர் சுப்ரமணியனும்(செங்கோட்டையனுக்கு நெருங்கிய உறவினராம்) ரூ2000 முதல் ரூ5000 வரை விற்பனை செய்தார்கள்.. கொலை, கொள்ளை, வழிப்பறி கொள்ளையில் முக்கிய பங்கு வகிக்கும் குற்றவாளிகள் அரசு பத்திரிகையாளர் அடையாளர் அட்டையை ரூ5000 கொடுத்து விலைக்கு வாங்கி வைத்துள்ளார்கள்..நாம் பல ஆதாரங்களை வெளியிட தயார்…
தலைமைச் செயலகத்தின் செய்தித்துறை அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால், அரசின் ரகசியங்கள், கோப்புகளை வாங்கிவிடலாம்.. இந்த நிலையில்தான் செய்தித்துறை செயல்படுகிறது.. இதற்கு குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் அதிகாரி..
இதைவிட கேவலம திருப்பூர் மாவட்டத்தில், மாஜி அமைச்சர் ஆனந்தனுக்கு சப்ளை & சர்வீஸ் செய்துக்கொண்டு இருந்த பாலாஜிக்கு உதவி பி.ஆர்.ஒ வேலை கொடுக்கப்பட்டது. 25.5.16 அன்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியிடுவதில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் தாமதம் ஏற்பட்டது. நிருபர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கம் அதிமுக விசுவாசி ஜெயந்தி ஐ.ஏ.எஸ்யிடம் இது தொடர்பாக புகார் செய்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்த நிருபர்களிடம் உதவி பி.ஆர்.ஒ , திருப்பூரில் நான் தாண்டா கலெக்டர்.. என்னைப்பற்றி புகார் செய்து, என்னை ஒண்ணும் புடுங்க முடியாது என்று மரியாதைக் குறைவாக கண்டபடி திட்டினார்…அந்த அளவுக்கு உதவி பி.ஆர்.ஒ பாலாஜியின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது.
தேனி மாவட்ட பி.ஆர்.ஒ, நிருபர்களை பார்த்து, அடியாட்களை அழைத்து வந்து, கை, கால்களை முறிப்பேன் என்று ஆவேசமாக கத்தினார்.. அதாவது செய்தித்துறையில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட உதவி பி.ஆர்.ஒவுக்கள் ரவுடிகள் என்பது இந்த சம்பவங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது..அதிமுகவினர் உதவி பி.ஆர்.ஒ வாக நியமிக்கப்பட்டு, பிறகு பதவி உயர்வு பெற்றவர்களும், அரசு ஊழியர்கள் என்பதை மறந்துவிட்டு, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதும், அதிமுகவை அரசை விமர்சனம் செய்து செய்தி வெளியிடும் நிருபர்ளை மிரட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.. அரசு ஊழியர்களின் விதிமுறைகளைபடி புகார் கொடுத்து, வழக்கு தொடர்ந்தால், அவர்களின் நிலை என்னவாகும்…அதே கதிதான்…
செய்தித்துறை கூடுதல் இயக்குநர் எழிலழகன், அம்மாடியோவ்.. இவர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. இவர்தான் நிழல் செய்தித்துறை இயக்குநர், செய்தித்துறை அமைச்சர்… தானப்பா செய்தித்துறை அதிகாரி.. போலி பில் போட்டு சம்பாதிப்பதில் கில்லாடி. இவருக்கு இரண்டாண்டு பதவி நீட்டிப்புக்கு கோப்பு அதி வேகமாக நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.
இயக்குநர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், இவரை கமிசன் கிங் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் என்று அன்பாக, மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அழைக்கிறார்கள்.. அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனை மொட்டை அடித்த பெருமைக்குரியவர்தான் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்..
செய்தித்துறையில் விளம்பரங்களுக்கான கமிசன் கொள்ளை உயர்த்த முடிவாம்…. தொடரும்..
மக்கள்செய்திமையம் 26.5.16 காலை 5மணி