Breaking News
Home / முக்கிய செய்திகள் / தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றியை தோல்வியாக்கிய மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிகுமார் ஐ.ஏ.எஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றியை தோல்வியாக்கிய மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிகுமார் ஐ.ஏ.எஸ்

collector_1546068f20160519_163537

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை 19ம் தேதி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிகுமார் ஐ.ஏ.எஸ் அதிமுக விசுவாசி என்பதை விட அமைச்சர் சண்முகநாதனுக்கு அடிமை என்பது மட்டும் உறுதியாக எல்லோருக்கும் தெரியும். தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபின்பு திருவைகுண்டம் தொகுதியில் பறக்கும்படை செயல்படவில்லை. திருவைகுண்டம் தாலுகாவில் பணிபுரிந்த 2 ஆசிரியர்கள் ஓய்வு பாராட்டுவிழா நடைபெற்ற மறுதினம் தாலுகாவிற்கு  உட்பட்ட ஆசிரியர்களுக்கு சண்முகநாதனால் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டபொழுது தேர்தல் அதிகாரி விஜயாவிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. அதுபோல வாக்காளர்களுக்கு 14 மற்றும் 15ம் தேதியில் வாக்காளர்களுக்கு 250 ரூபாய் பணம் வெளிப்படையாக வழங்கியபோதும் நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்தார்கள்.

    வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர்ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை  வேகப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. காரணம் வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் அதிகம் காணப்பட்டதால் தான். ஆனால் ஓட்டப்பிடாரம், திருவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்கு விபரங்களை முதலில் தெரியப்படுத்தவில்லை. தாமதப்படுத்தபட்டது. அதிமுக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றவுடன் , அதாவது அதிமுகவுக்கு வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை அமைந்தவுடன், பிரதமர் நரேந்திரமோடி, வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடனடியாக தலைமை செயலகத்திலிருந்து  சில மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு செல்போனில் அதிகாரிகள் பேசினார்கள். இதனை தொடர்ந்து,  திமுக கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகளில் குழப்பம் ஏற்படுத்தி, அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டார்கள்.

20160519_082401IMG-20160424-WA0019

  மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிகுமார் ஐ.ஏ.எஸ்,  ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் அதிகாரி சிவகாமி, திருவைகுண்டம் விஜயா, கோவில்பட்டி கண்ணபிரான் ஆகியோரை செல்போனில் அழைத்தார். மூன்று தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று வாய் மொழி உத்தரவிட்டார்.. உத்தரவு என்பதைவிட மிரட்டினார் என்பதுதான் உண்மை..

   திருவைகுண்டம் தொகுதியில் ராணி வெங்கடேசன் 13வது ரவுண்டில் சண்முகநாதனை விட 350 வாக்குகள் முன்னிலைபெற்றிருந்தார்.  எப்படியும் சண்முகநாதனை வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற உயர் அதிகாரியின் உத்தரவை விஜயா அமுல்படுத்தினார்.  அதாவது மதிய உணவு இடைவேலை இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும். ஆனால் ஒட்டபிடராம், திருவைகுண்டம், கோவில்பட்டி மூன்று தொகுதி வாக்கு எண்ணிகையின் போது உணவு இடைவேளை என்று ஒரு மணி நேரம் கொடுக்கப்பட்டது. இதற்கு ராணி வெங்கடேசன் ஆட்சபேணை தெரிவித்தார். ஆனால் தேர்தல் அதிகாரி கண்டு கொள்ளவில்லை.. கோவில்பட்டி தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கையின் போது உள்குத்து வேலை நடந்தது வெளிச்சமாகியுள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் மட்டும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதிமுக வேட்பாளா; சுந்தரராஜை விட புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி 315வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அதுபோல தபால் வாக்குகளிலும் அதிமுக வேட்பாளரை விட கிருஷ்ணசாமி கூடுதலாகவே பெற்றிருந்தார். கடைசி ரவுண்டு எண்ணுவதற்கு முன்பே அதிமுக வேட்பாளரை விட புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி 315  வாக்குகள் கூடுதல் பெற்றுதான் இருந்தார். கடைசி ரவுண்டு வாக்குகள். 7020 வாக்குகள் தான்  எண்ண வேண்டியிருந்தது. அந்த ரவுண்டு எண்ணுவதற்கு முன்பே அதிமுக வேட்பாளர் சுந்தரராஜ் மற்றும் தன்னுடைய ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வெற்றி பெற்று விட்டதாக கோஷமிட்டார்கள்.  அப்பொழுது வேட்பாளர் சுந்தரராஜ் நாங்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறோம்,  வெளியே போ என்று கிருஷ்ணசாமியை பார்த்து கூறினார். அதன்படி இறுதிச்சுற்று எண்ணி முடிக்கும்பொழுது கிருஷ்ணசாமியை விட சுந்தரராஜ் சுமார் 500 வாக்குகள் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சிவகாமி அறிவித்தார். உண்மையில் கிருஷ்ணசாமி 2741 வாக்குகள், சுந்தரராஜனைவிட  அதிக பெற்று வெற்றி பெற்று இருந்தார். ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ், வாய்மொழி மிரட்டலுக்கு பயந்து தேர்தல் அதிகாரி சிவகாமி, அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

  மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிகுமார் ஐ.ஏ.எஸ்  மக்கள் செய்தி மையத்தின் சார்பில் வைக்கப்படும்கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிப்பார…

  1. வாக்கு எண்ணிக்கையின் போது சுமார்  மணிநேரம் வாக்கு எண்ணிக்கையை 3 தொகுதியில் நிறுத்தியது எதற்காக? அதுபோல தபால் வாக்குகளை 2 முறை எண்ணியது எதற்காக? இரண்டாவது முறை வரிசை எண் இல்லை என்று பல தபால் வாக்குகள் செல்லாது என்று கூறிய பின்னனி என்ன..
  2. அதுபோல ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிற்கு கூடுதலாக கிடைத்த வாக்குபதிவான இயந்திரத்தை இரண்டு முறை எண்ணப்பட்டது ஏன்?
  3. ஒட்டபிடராம் தொகுதி தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள், திமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி, அதிமுக வேட்பாளரைவிட  2741 வாக்குகள் அப்திகம் பெற்றுதான் இருந்தார் என்ற தற்போது புலம்புகிறார்கள். இது உண்மை என்றால், மாவட்ட தேர்தல் அதிகாரி, ஒட்டபிடராம் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தயாரா?
  4. சண்முகநாதன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற வரும் போது, மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் சீட்டைவிட்டு எழுந்து வந்து கை கொடுத்தார். சான்றிதழை பெற்றுக்கொண்டு திரும்பு போது, கைக்கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  இந்த செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை, ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நடந்திருக்க வேண்டும்.  அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டார் என்பது இந்த ஒரு செயலில் வெளிச்சமாகி விட்டது.

ஒட்டபிடராம், திருவைகுண்டம், கோவில்ப்பட்டி மூன்று தொகுதியின் தபால் வாக்குகளை மீண்டும், நீதிபதி தலைமையில் ஒரு குழு முன்பு எண்ணப்பட்டால், செல்லாத தபால் வாக்குகளின் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

20160504_11585508aug_praveen_N_09_1545828e

 ஒட்டபிடராம், திருவைகுண்டம், கோவில்பட்டி மூன்று தேர்தல் அதிகாரிகளுக்கு, சுமார் இரண்டு மணிநேரம் மனசாட்சி, அடகு வைத்துவிட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ், மிரட்டலுக்கு பயந்து, அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள் என்பது உண்மை..

 இந்த மூன்று தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்கள் வாக்குகளை மறு எண்ணிக்கை வேண்டும் என்று நீதிமன்ற சென்றால், சில ஆதாரங்களை மக்கள்செய்திமையம் கொடுக்க தயாராக உள்ளது..

 மக்கள்செய்திமையம் 23.5.16 மாலை 4மணி

Comments

comments

About Anbu Admin

Check Also

பொள்ளாச்சி…காமவேட்டை- மக்கள்செய்திமையத்துக்கு தொடர் மிரட்டல்..

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளில் தொடங்கி அழகாக வசதியாக இருக்கும் குடும்ப பெண்கள் வரை நாசமாக்கிய  திருநாவுக்கரசு, சதீஷ்,சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *