RNTCP ஊழல் குறித்து நாம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாநில காச நோய் அதிகாரி டாக்டர் .லக்ஷ்மிமுரளி அனைத்து காச நோய் துணை இயக்குனர்களை களையும் 21ஆம் தேதிக்குள் சென்னை வரும் படி இ-மெயில் மூலம் உத்தரவிட்டார் . காலி இடங்களை சரி பார்க்க வேண்டும் என்று மட்டுமே அதில் கு றிபிடபட்டிருந்தது.
ஆனால் ரகசியமாக அனைத்து காச நோய் துணை இயக்குனர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அப்பாண்ட்மண்ட் ஆர்டகளை(appointment orders) ரெடி செய்து கொண்டுவரும்படி உத்தரவிட்டிருந்தார்.
அப்பாண்ட்மண்ட் ஆர்டர்களோடு சென்னைக்கு சென்றவர்களை எந்த தயக்கமுமின்றி, இதனை எடுத்துக்கொண்டு மந்திரி(விஜயபாஸ்கர்) பி.ஏ வை சந்தியுங்கள்.அவர் சொல்வதை கடைபிடியுங்கள் என்றிருக்கிறார். சற்று தயக்கம் காட்டிய சில துணை இயக்குனர்களை நோக்கி ‘நான் சொல்வதை கேளுங்கள்,இல்லை ட்ரான்ஸ்பருக்கு(transfer) தயாராக இருங்கள்’ என்று மிரட்டுகிறார்.
அவமானம் கவ்வி பிடிக்க ,குடும்ப சூழல்களை மனதில் கொண்டு, தன்மானத்தை அடகு வைத்துவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் பி.ஏ வை சென்று சந்தித்திருக்கிறார்கள் இந்த MBBS படித்த டாக்டர்கள்.
பி.ஏ தன்னிடம் இருந்த லிஸ்ட் -ஐ வாசித்து அந்த அப்பாண்ட்மெண்ட் ஆர்டகளை மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டார். மற்றதை துணை இயக்குனர்களே கொண்டு சென்று மீண்டும் அவர் சொல்லும் போது கொண்டு வர உத்தரவுஇடபட்டது. அதாவது பணம் முழுவதும் வசூல் ஆகாத நபர்களை படியவைக்க மேற்கொள்ளபடும் உத்தி இது.
அமைச்சருக்கு பயந்து இதையெல்லாம் லட்சுமி முரளி செய்கிறாரா என்றால் இல்லை. வாலை ஆட்டும் நாய்க்கு எலும்பு போடுவதை போல் இவருக்கு 657 சீட்டில் 50 சீட்டை நிரப்பிகொள்ள சலுகை வழங்கியிருக்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு.
‘தன் மகனை தனியார் மருத்துவக்கல்லூரியில் 50 லட்சங்கள் கொடுத்து சேர்த்திருக்கும் லட்சுமி முரளி இந்த பதவிக்கு வந்ததே அதனை முழுமையாக வசூல் செய்ய தான். எனவே தான் இப்படி மானம் மரியாதை எல்லாவற்றையும் துறந்து மாமி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்’ என்று நம்மிடம் புலம்பினார் திருவள்ளூரை சேர்ந்த ஒரு காச நோய் பணியாளர்.
செய்வதறியாது கவலையுற்றிருக்கிறார்கள் காச நோய் துணை இயக்குனர்கள்.
மக்கள்செய்திமையம் 23.8.15 காலை 10மணி