Breaking News
Home / பிற செய்திகள் / 2016ல் நான் தாண்டா பத்திரபதிவுத்துறை அமைச்சர்- ஆட்டம் போடும் படப்பை பத்திரபதிவு சார் பதிவாளர் ஜார்ஜ்..

2016ல் நான் தாண்டா பத்திரபதிவுத்துறை அமைச்சர்- ஆட்டம் போடும் படப்பை பத்திரபதிவு சார் பதிவாளர் ஜார்ஜ்..

IMG-20150708-WA0025

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திரபதிவு அலுவலகத்தின் சார் பதிவாளர் சற்று வித்தியாசமானவர்.. அதிமுக கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள், ஏதாவது சிபாரிசுக்கு வந்தால், அண்ணே இந்த வேலைக்கு இவ்வளவு ரேட் கொடுத்துவிடுங்கள் என்று கேட்பார்… சார் நான் அதிமுக கவுன்சிலருங்க..நான் அதிமுக நகர செயலாளருங்க.. இருக்கட்டுமே.. 2016 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சீட் கொடுத்துவிட்டாங்க… என் வெற்றி உறுதி..அடுத்த பத்திரபதிவுத்துறை அமைச்சரே நான் தான்.. நான் கேட்ட பணம் கொடுத்த வேலை நடக்கும்..இல்லன்னே நடையை கட்டு என்கிறார் அன்பாக…

வேலை வாங்கி தருகிறேன் என்று பல இளைஞர்களிடம் பல லட்சம் வசூல் செய்து ஏப்பம் விட்டுவிட்டார். இளைஞர்கள் செருப்பு தேய அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.. அதிமுக நிர்வாகிகள் மிரட்டினால், அமைச்சர் வளர்மதிக்கு சொந்தகாரன்… என்று மிரட்டியபடி.. அமைச்சர் வளர்மதி கணவருக்கு போன் செய்கிறார்..

 இதனால் அதிமுக கவுன்சிலர்கள்,  நிர்வாகிகள் கொதித்து போய் உள்ளார்கள்…சில அதிமுகவினர் அமைச்சரிடம் புலம்பினார்கள்.. அமைச்சர்  சிரித்துக்கொண்டே எல்லாம் அனுசரித்து போங்க… சார் பதிவாளர்களும்  பதவிகளை விலை கொடுத்துத்தான் வாங்குகிறார்கள் என்று பதில் அளித்தராம்…

சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் உட்கார்ந்து  இருக்கும் அறையில் மட்டும் ஐந்து முதல்வர் படம் மாட்டி வைத்துள்ளார்.. தினமும் முதல்வர் படத்துக்கு கும்பிடு போட்டுவிட்டுதான் லஞ்சம் பணம் வாங்குகிறார். எல்லாம் அம்மா பார்த்துக்கு வாங்க என்று டயலாக் பேசுகிறார் ஜார்ஜ்…

  அடுத்த அமைச்சர் நான் தாண்ட என்று ஆட்டம் போடும், படப்பை சார் பதிவாளர் ஜார்ஜ் கண்டிக்க, அதிகாரிகளும் முன் வரவில்லை, அமைச்சரும் முன்வரவில்லை…

எல்லாம் மாமூல் பலம் தான்..

மக்கள்செய்திமையம் 16.8.15 மதியம் 2மணி

Comments

comments

About Anbu Admin

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *