Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ838 கோடியில் புகாருக்கு ஆளான இளநிலை பொறியாளர் சரவணன்- லஞ்ச ஒழிப்பு புகாரை ரத்து செய்த மர்மம் என்ன?

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ838 கோடியில் புகாருக்கு ஆளான இளநிலை பொறியாளர் சரவணன்- லஞ்ச ஒழிப்பு புகாரை ரத்து செய்த மர்மம் என்ன?

44

தமிழகத்தில் உள்ள  மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் தொடர்ந்து ஊழல் புகாருக்கு ஆளாகி வருகின்றார்கள். நகராட்சி நிர்வாக இயக்குநரகம், புகார்கள் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும்  எடுப்பது கிடையாது. லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தாலும் பணத்தைப் பெற்றுக்கொண்டு புகாருக்கு ஆளான அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றப்படுகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் இளநிலை பொறியாளராகவும், முன்பு மேற்கு மண்டல உதவி ஆணையராகவும், தற்போது தெற்குமண்டல உதவி ஆணையராக பணிபுரிந்துவரும் சரவணன் மீது உள்ள புகாரை ரத்து செய்த மர்மம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியாக உள்ளது. கடந்த 15 வருடமாக மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். முன்பு  சரவணன் திருச்செந்தூரில் உள்ள பஞ்சாயத்தில் அலுவலகத்தில் பணிபுரிந்த பொழுது நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த அனிதா.ராதாகிருஷ்ணன்  தயவில் முதன்முதலாக தூத்துக்குடி நகராட்சியில் கருணை அடிப்படையில் பணி ஆய்வாளராக பணியில் சேர்ந்து இளநிலை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார்.

  சரவணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தும் ஆணையராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ் தயவில் புகாரிலிருந்து தப்பித்து விட்டார்.  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  பரிந்துரை  கடிதம் E/2/527/2010 நாள் 15.07.2013 மேல்முறையீட்டு குழு தலைவரின் அறிக்கை நாள் 18.07.2013 அதுபோல நியமன கூட்டப்பொருள் நாள் 31.01.2014 சரவணன் மீது வருமானத்திற்கு அதிகமாக சம்பாதித்ததில்   புதிய வீடு அனுமதியின்றி வாங்கியது தொடர்பாகவும் மேலும் காலி மனைகள் வாங்கியது தொடர்பாகவும் புகார் வந்ததை  அடுத்து ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத்துறை (சென்னை) இவரது குற்றச்சாட்டை உறுதி செய்து தண்டனையும் வழங்கியது. இந்த தண்டனையை அப்போது ஆணையராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.  அதன்பிறகு சில மாதங்கள் கழித்து சரவணன் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தார். மேல்முறையீட்டுக் குழுத் தலைவரான அப்போது மேயராக இருந்த சசிகலாபுஷ்பாவிடம் 15.07.2013ல் சரவணன் பரிந்துரை செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய மேல்முறையீட்டுக் குழுத்தலைவர் இளநிலை பொறியாளர் சரவணன் மீது குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை என்பதால் அவர் (சரவணன்) மாநகராட்சிக்கு இனிமேல் எந்தஒரு மேல்முறையீடும் செய்யக்கூடாது என்று தடை விதித்தும் ஏற்கனவே மேல் முறையீடு மனுவை 18.07.2013ல் தள்ளுபடி செய்து விட்டார். கொள்ளையடித்த சரவணன் சசிகலாபுஷ்பா மேயராக இருக்கும்வரை இனிமேல் நமக்கு பதவி உயர்வும் வராது என்றும் குற்றச்சாட்டை ரத்து செய்ய மாட்டார் என்றும் அதிர்ச்சியில் இருந்த சரவணணுக்கு  ஜாக்பாட் அடித்தது போல சசிகலா புஷ்பாவிற்கு மேல்சபை பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து மேயர் பதவியை 24.01.2014 அன்று ராஜினாமா செய்தார்.  ராஜினாமா செய்த 1மணி  நேரத்தில் ஊழல் ராஜா சரவணன் ஆணையர் மதுமதியிடம் 2வது முறையாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

IMG_98831

  ஆணையராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ்க்கும், சரவணணுக்கு என்ன உறவு, என்ன நெருக்கம் என்று தெரியவில்லை. மதுமதி ஐ.ஏ.எஸ் உடனடியாக அப்போது மேயர் பொறுப்பில் இருந்த  சேவியர் துணையுடன் சரவணன் மீதுள்ள குற்றச்சாட்டை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் அப்பாய்மெண்ட் கமிட்டி உறுப்பினர் சாந்தி கையெழுத்திட்டு சரவணன் கொள்ளையடிப்பதற்கு வழிகாட்டினார். இதனையடுத்து சரவணன் மீதிருந்த புகார் ரத்து செய்யப்பட்டது. சரவணன் மீது அப்போது ஆணையராக இருந்த மதுமதி இவ்வளவு பாசம் காட்டியதற்கு பல்வேறு காரணங்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது. சென்னை சாலி கிராமத்தில் 4 கோடி மதிப்பில் மதுமதி ஐ.ஏ.எஸ் பங்களா கட்டியுள்ளதாகவும், திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் முகில் உணவகம்  என்று இருந்தது. தற்போது அது பானுபிருந்தவன் உணவகமாக உள்ளது. இந்த உணவகத்தை திறந்து வைத்தது மதுமதியின் புதல்வன் தான் திறந்து வைத்தார்.

23 (1)

 

  சரணவனன் மேற்பார்வையில் செயல்பட்டுவரும் 4வது பைப் லைன் திட்டத்தை செய்து வரும் 3 நிறுவனத்திடமிருந்து மதுமதி ஐ.ஏ.எஸ்க்கு ரூ12 கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அதன் பலனாகத்தான் குற்றச்சாட்டு தண்டனையை ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பலர் உதவிப் பொறியாளராக  இருந்தும் அவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு வழங்காமல் இளநிலைய பொறியாளராக இருந்த சரவணணுக்கு மேற்கு மண்டல உதவி ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டது.  ஒரு பதவியில் உள்ளவர்களுக்கு ஒரு அலுவலக அறைதான் இருக்கும். ஆனால் மதுமதியில் பெயரில் கொள்ளை ராஜாவாக வலம் வந்த சரவணணுக்கு 3 இடங்களில் அவருக்கு அலுவலக அறை இருந்தது. இவரை விட வயதில், அனுபவத்தில் முதிரிந்தவர்களுக்கெல்லாம் உதவி ஆணையராக உள்ள 3 நபார்களுக்கு சாதாரண கார்வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சரவணணுக்கு மட்டும் குளு குளு வசதியுடன் கூடிய  சைலோ கார்  வழங்கப்பட்டுள்ளது.

   தற்போது தெற்கு மண்டலத்தில் உதவிஆணையராக உள்ள சரவணன் மீது தூத்துக்குடி மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதில் ரூ838 கோடி நடைபெற்ற பணிகளில் எத்தனை கோடி கொள்ளையடித்திருப்பார் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளலாம். பணிகள் விபரம் பக்கிள் ஓடை பராமாpப்புப்பணி – ரூ200 கோடி, 4வது பைப்லைன் பணி – ரூ282 கோடி , சாலை மேம்பாட்டுத் திட்டம் – ரூ150 கோடி, மழைநீர் வடிகால் பணி – ரூ75 கோடி, பூங்காப்பணி – ரூ1கோடிபுதிய மாநகராட்சி, பழைய மாநகராட்சி புதுப்பிக்கும்பணி – ரூ50 கோடி மேலும் பணிகள் பினாமி ஒப்பந்தகாரர்கள்மூலம் பணிகளை கோடிகோடியாக சம்பாதித்துள்ளார்.  இவர் 14 ஆண்டுகளாக ராஜாஜி டேங்க் பொறுப்பில் உள்ளார். அதன்மூலம் திருட்டுத்தனமாக தனியார் லாரி மூலம் திருட்டுத்தனமாக குடிநீர் விற்பனை செய்தததில் மட்டும் பல லட்சங்களை சம்பாதித்துள்ளார்.  இந்த கொள்ளைக்கு உடந்தையாக சங்கர் என்ற நபரை உதவியாளராக சரவணன் வைத்துக்கொண்டார். குடிநீர் வேண்டுமென்றால் யாரும் மாநகராட்சி அலுவலம் சென்று பணம் கட்டத் தேவையில்லை. சங்கரை அணுகி பணம் கொடுத்தால் உடனடியாக குடிநீர் உங்களைத் தேடிவரும். இது தொடர்பாக புகார் வந்ததை அடுத்து அப்போது ஆணையாக இருந்த மதுமதி நடவடிக்கை என்ற பெயரில் புகாருக்கு தொடர்பு இல்லாத சிலரை மாற்றம் செய்து விட்டு குடிநீரில் கொள்ளையடித்த சரவணன், சங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

4_MG_1919

 

  மேலும் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநராக இருநது ஒய்வு பெற்றுவிட்டு தற்போது அமைச்சரின் வேலுமணியின் புரோக்கர் மாமாவாக இருக்கும் சந்திரசேகரன் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரின் உதவியாளர்  இருவரை நான் விலைக்கு வாங்கிவிட்டேன், அதனால் என்னை ஒண்ணும் பண்ணமுடியாது என்று மார்த்தட்டுகிறார் சரவணன்.

24sept_TIPAJHI-_25_2124379g

   ஆணையராக இருந்த மதுமதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இளநிலை பொறியாளர்சரவணன் மீது முன்பு கூறப்பட்டு உறுதி செய்யப்பட்ட குற்றச்சாட்டை மீண்டும் விசாரணை நடத்தி கூறப்பட்ட குற்றச்சாட்டை உறுதி செய்து சரவணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்று நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ்க்கு ஆதாரத்துடன் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டு வருகின்றது. புகார் மனு மீது  தற்போது நகராட்சி நிர்வாக ஆணையத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி விசாரித்து வருகிறார். விசாரணை  அறிக்கையை நகராட்சி நிர்வாகஇயக்குநர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் அளித்தவுடன் சரவணன் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தொpயவருகிறது. மேலும் ஒருவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அது மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பு அதே நபருக்காக (குற்றம்சாட்டப்பட்ட) மீண்டும் மாமன்றத்தில் முன்பு வழங்கப்பட்ட குற்றச்சாட்டுத் தண்டனையை ரத்து செய்து மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது பற்றியும், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மக்கள்செய்திமையம் 4.8.15 மாலை4மணி

Comments

comments

About Anbu Admin

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *