தமிழகத்தில் உள்ள வருவாய் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தினசரி அரசு நிலத்திற்கும், தனியார் நிலத்திற்கும் போலி பட்டா வழங்க பல லட்சங்களை வசூலித்து வருகின்றார்கள். இதற்கு உதாரணம் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு நிலங்களுக்கு பட்டா வழங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. மீளவிட்டான் அரசு நிலம், பூமிதான் வாரியம் நிலம், மக்கள்செய்திமையம் புகாரை தொடர்ந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்டு செந்திலாம்பண்னை கிராமத்தில் இறந்து 17 வருடம் ஆன பின்பு மீண்டும் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்ததாக கூறி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட செந்திலாம்பண்னை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியபாண்டிய தலைவர் என்பர் கடந்த 21.10.1998 அன்று மரணமடைந்தார். மரணத்திற்கான சான்றிதழ் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள துணை தாசில்தார் சேதுராஜன் 11.11.1998 அன்று இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணிபுhpயும் வீரபாகு கிராம நிர்வாக அலுவலர் ஜான்சிராணி இருவர் கூட்டணி தூத்துக்குடி வட்டத்திற்குற்பட்ட செந்திலாம்பண்னை கிராமத்தில் உள்ள EN10/1 பிரிவின் படி பட்டா எண்.86ன்படி 14 ஹெக்டர் இடத்திற்கு சொந்தகாரர் பட்டியலில் செந்தூர்பாண்டி தலைவர் மகன் சுப்பிரமணிபாண்டிதலைவர் இடத்திற்கு உரிமையாளர் என்று பட்டா வழங்கப்பட்டுள்ளது. செந்திலாம்பண்னை கிராமத்தில் கிராம பதிவேடு 13/2015 ன்படி 01.06.2015 தேதியில் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சிராணியிடம் சுப்பிரமணியபாண்டிதலைவர் பட்டா மாறுதல் கேட்டு மனு செய்துள்ளாராம். மனு விசாரணைக்கு பின்பு தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணிபுரியும் வீரபாகு பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு உடனடியாக பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளார். 10 நாட்கள் கழித்து பிரச்சணை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஜான்சிராணி, மண்டல துணை தாசில்தார் வீரபாகு கூட்டணி 14.06.2015 பட்டாவிலிருந்த சுப்பிரமணியபாண்டியதலைவர் பெயரை நீக்கிவிடுகின்றார்கள். வருவாய் துறை என்றைக்கு ஆன்லைன் மயமாகியதோ அன்றையிலிருந்து அதிகாரிகள் நினைத்தால் எந்த பெயரை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்கின்றார்கள் அதுபோல எந்த பெயரை வேண்டுமென்றாலும் நீக்கிக் கொள்கின்றார்கள். வருவாய்த்துறை எந்த அளவிற்கு சீரழிந்து உள்ளது என்பதற்கு இந்த ஒரே பட்டா மாறுதலே போதும்.
1998ம் ஆண்டு 10ம் மாதம் 22ம் தேதி இறந்து போன சுப்ரமணியபாண்டியதலைவர் 01.06.2015ல் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சிராணி முன்பு தோன்றி தன்னுடைய இடத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு கிராம பதிவேடு 13/2015ன்படி விண்ணப்பம் செய்துள்ளார். இந்த விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலனை செய்த மண்டல துணை தாசில்தார் வீரபாகு விண்ணப்பம் செய்த சுப்பிரமணியபாண்டியதலைவரை அழைத்தார். இறந்து போன சுப்பிரமணியபாண்டிய தலைவர் மண்டல துணை தாசில்தார் வீரபாகு முன்பு ஆஜராகி மண்டல துணை தாசில்தார் வீரபாகுவிடம் பட்டாவை பெற்றுக்கொண்டார்.
உலகில் ஏழு அதிசயங்கள் உள்ளது. எட்டாவது அதிசயம் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் கடைகோடி மாவட்டமான தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் இறந்து 17 வருடங்களுக்கு பின்பு மண்டல துணை தாசில்தார் வீரபாகு மற்றும் கிராம நிh;வாக அலுவலர் ஜான்சிராணி ஆகியோர் முன்பு ஆஜராகி பட்டா கேட்டு விண்ணப்பம் செய்து அதன்படி பட்டாவும் பெற்றுச் சென்ற 8வது அதிசயம் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்துள்ளது. இதனால் இந்த அதிசயத்தை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், தூத்துக்குடி தாலுகா அலுவலத்திற்கும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் வந்து எட்டாவது அதிசயத்தைக் கண்டு செல்கின்றார்கள்.
மக்கள்செய்திமையம் 12.7.15 காலை7மணி