Breaking News
Home / பிற செய்திகள் / நாகை – தப்பு செய், ஆனால் பணம் கொடு – கடமையாற்ற அஞ்சும் காச நோய் துறை அதிகாரிகள்.

நாகை – தப்பு செய், ஆனால் பணம் கொடு – கடமையாற்ற அஞ்சும் காச நோய் துறை அதிகாரிகள்.

26jan_tysri01_I_TY_2291193e
    நாகபட்டினம் மாவட்டத்தின் துணை இயக்குனர்(காச நோய்) யாக இருப்பவர் ,டாக்டர் வீரகுமார். மாநில காசநோய் அதிகாரியாக இருந்த டாக்டர் அறிவொளியின் மர்ம மரணத்திற்கு பிறகு நியாயமாக ,அரசு விதிகளின்படி இவர் தான் மாநில காச நோய் அதிகாரியாக நியமனம் செய்யபட்டிருக்க வேண்டும்.ஆனால் அனைத்து துணை இயக்குனர் களும் டாக்டர் அறி வொளியின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வேளையில் திருவள்ளூர் துணை இயக்குனர் டாக்டர் லக்ஷ்மி முரளி மட்டும் சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து இரட்டை இலக்க லகரங்களை கொட்டி அப்பதவியில்(நிர்ணயிக்க பட்ட தகுதியில்லாமல் )எந்த சிரமமும்யின்றி அமர்ந்தார்.
   கிடைக்க வேண்டிய பதவி கிடைக்காத டாக்டர் வீரகுமார் தான் எந்த மாவட்டதிற்கு மாற்றபடுவோம் என்ற கவலையில் ஆழ்துள்ளார். காரணம் இது தான். நாகை மாவட்டதில் துணை இயக்குனர் டாக்டர் வீரகுமா ரின் கீழ் டி.ஆர்.-டி.பி கோடினேட்டராக (DR-TB –co-ordinator) பணிபுரிபவர் கண்ணதாசன்.இவர் ஒப்பந்த அடிபடையில் கடந்த் 2 ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறார். அரசு ஊழியராக செயல்படமாட்டார்,மாறாக அரசியல் தாதா வாக இம்மாவட்டதில் வலம் வந்து கொண்டிருந்தார். துணை இயக்குனர் உட்பட எவருக்கும் கட்டுபட மாட்டார்.குறிபிட்ட அமைச்சர் பெயரை சொல்லி அனைவரையும் மிரட்டுவார். இவருடைய செயல்பாட்டினால் அதிகம் பாதிக்கபட்டது ஏழை காச நோயாளிகள்.
  பனிரெண்டு முறை இவருக்கு எச்சரிக்கை நோட்டிஸ்( வார்னிங் மெமோ) கொடுத்தும் இவர் திருந்தவில்லை.இறுதியாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் இவரை பணியில் இருந்து 31-3-2015 அன்று  டிஸ்மிஸ் செய்தார் துணை இயக்குனர்.
    சற்றும் தளராத கண்ணதாசன் சுகாதார துறை அமைச்சரை சந்தித்து லட்சத்தில் தட்சணை கொடுத்து மீண்டும் பணியில் சேர்த்துள்ளார். மத்திய காச நோய் பிரிவு(central TB division) விதிகளின் படி டிஸ்மிஸ் செய்யபட் ட ஒருவரை மீண்டும் பணியமர்த்த கூடாது. பட் கரண்சி நோட்டுகளை பார்த்தால் (central TB division )விதியை மதியால் வென்று விடுகிறார்களே.
    கண்ணதாசனை செல்போனில் அழைத்த மாநில காச நோய் அதிகாரி டாக்டர் லக்ஷ்மி முரளி நாகையை தவிர வேறு மாவட்டதில் போ ஸ்டிங் போட்டு தருகிறேன், சென்று வேலை பாருங்கள் என்று கெஞ்சியிருகிறார். அதெல்லாம் முடியாது என்று மறுத்த கண்ணதாசன் வேறொரு செல்ல உத்தரவையும். மாநில காச நோய்அதிகாரிக்கு போட்டிருக்கிறார். அது தான் துணை இயக்குனர்  டாக்டர் வீரகுமாரை. வேறு மாவட்டதிற்கு மாற்ற வேண்டும் என்று. இது எப்படி இருக்கு.
   சுகாதார துறையில் இந்த நிலை நீடித்தால் ஏழை காச நோயாளிக ளை கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அந்த துறையை சார்ந்த்வர்கள் புலம்புகிறார்கள்.
மக்கள்செய்திமையம் 4.7.15 மாலை 4மணி

Comments

comments

About Anbu Admin

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *