தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சியில் உள்ள காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் அரசு பணியாளராக சேர வேலைவாய்ப்பு மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணியில் வேலை அமர்த்தப்படுவார்கள். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் வழக்கு எண்.1027/2013 எம்.பி எண் 1/2013 ன்படி காலியிடங்களை, நாளிதழிகளில் விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்கள் அடிப்படையில் அந்தந்த துறையின் அதிகாரிகள் இன்டர்வியூ நடத்தி அதன் அடிப்படையில் நியமித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பிரகாஷ், அமைச்சர் வேலுமணியின் உதவியாளர் பார்த்தீபன், அமைச்சர் வேலுமணியின் போலி உதவியாளர் சந்திரசேகரன் மூவர் நகராட்சி, மாநகராட்சி காலி பணி இடங்களை நிரப்ப உத்தரவிட்டார்கள். காலி பணி இடங்கள்ளின் எண்ணிக்கை ஏற்ப மாமூல் நிர்ணயித்துவிட்டார்கள். இதனால் குஷியான நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வசூலில் குளிக்கத் தொடங்கிவிட்டார்கள்.. தமிழகத்தில் தாம்பரம் நகராட்சி, பல்லவரம் நகராட்சி, பெரம்பலூர் நகராட்சி, கோவை, திருச்சி மாநகராட்சிகளில் காலி பணி இடங்களை, ஏலம் மூலம் விற்பனை செய்துவிட்டார்கள்..
தூத்துக்குடி மாநகராட்சியில் 52 காலியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து காலியிடங்களை நிரப்ப மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸியின் மகன் கவியரசு பேரம் நடத்தி வருகிறார். இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 13, செயல்திறன் உதவியாளர் நிலை –1 காலியிடம் –3, செயல்திறன் உதவியாளர் நிலை –2 காலியிடம் 14, நகரசுகாதார செவிலியர் காலியிடம் 22, ஆக மொத்தம் 52 காலியிடங்களை நிரப்ப மாநகராட்சி ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார். 52 காலி பணி இடங்களுக்கும் ஒவ்வொரு பதவிக்கு ஒவ்வொரு ரேட் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான தொகையை கவியரசு பெற்று வருகிறார்.
தட்டச்சர் பணியிடத்திற்கு 105 பேர் விண்ணப்பம் அனுப்பி இருந்தார்கள். இதில் 42 பேருக்கு 26.6.15 அன்று நேர்முகத் தேர்வு என்று அழைப்பு அனுப்பப்பட்டது. மேயர் அந்தோணி கிரேஸி ஆர்.கே. நகர் பிரச்சாரத்தில் இருப்பதால், இண்டர்வீயூ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தட்டச்சர் பணி இடங்களுக்கு கவியரசு பணம், வாங்கி தேர்வு பட்டியலை வைத்துள்ளார். இண்டர்வீயூ என்பது கண் துடைப்பு…
மேயர் மகன் கவியரசு, நாங்கள் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு சுமார் ரூ50-ரூ60 இலட்சம் செலவு செய்துள்ளோம். இந்த பணத்தை எப்படி வசூல் செய்வது. அதனால் 52 காலி பணியிடங்களுக்கு வசூல் செய்கிறோம் என்று அலட்சியமாக, வெளிப்படையாக கூறி வருகிறார். ஆர்.கே நகர் தொகுதிக்கு ரூ60 இலட்சம் செலவு.. மீதி ரூ2 கோடி.. அம்மாடியோவ்..
இந்த செய்து, முதல்வருக்கு தெரிந்தால், மேயர் கதி அதோ கதிதான்…
ரூ4 லட்சம் முதல் ரூ6 லட்சம் வரை வாங்கப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதியுடன் விண்ணப்பம் செய்பவர்கள் கடைசி தேதியாக இருந்தது. ஆனால் அதன்பிறகும் சில விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக-வைச் சோ;ந்த பெண் கவுன்சிலர்களுக்கு பாளை ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ரூ3000 மதிப்புள்ள பட்டுச் சேலை எடுத்துக்கொடுத்து தனியார் பேருந்து மூலம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 2 நாட்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரத்திற்கு கவியரசு பயன்படுத்திக் கொண்டார். ஆனால் ஆண் கவுன்சிலர்கள் பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லவில்லை. ஏற்கனவே மாநகராட்சியில் மேயருக்கு எதிராக 29 கவுன்சிலர்கள் செயல்பட்டுவந்தார்கள். இந்த நிலையில் மேயர் மகன் கவியரசு தன்னுடைய பண செல்வாக்கால் எதிர் கோஷ்டியிலிருந்து பெண் கவுன்சிலா;களை தன்னுடைய ஆதரவாளராக மாற்றினார். தற்போது 52 காலியிடங்களை நிரப்ப 52 X 5லட்சம்= ரூ2கோடியே 60 லட்சம் சில நாட்களில் கவியரசுக்கு மாமூலாக கிடைக்க உள்ளது. இதனை யாரும் மாமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளார்கள். விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாநகராட்சியிலிருந்து தற்போது கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. கடிதம் கொண்டுவருபவர்களிடம் கவியரசு எவ்வளவு பணம் என்பதை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மாநகராட்சியில் நிரப்பப்படும் 52 பணியாளர்களுக்கு APPOINTMENT COMMITTEE 9வது வார்டு உறுப்பினரான சாந்தியிடம் கையொப்பம் பெற கவியரசு அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பம் முதல் அதிமுகவில் தொடர்ந்து தொண்டனாக இருப்பவர்களின் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவருக்கு பணம் வாங்காமல் மேயரோ அவரது மகனோ வேலை வழங்க முன்வரவில்லை. 52 காலியிடங்களில் 17 இடங்களை மேயரின் விசுவாசிகளுக்கும். மேயரின் ஆதரவு மாமன்ற உறுப்பினர்களுக்கும் அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
மாநகராட்சி நிh;வாகம் செய்யும் ஐ.எ.எஸ் அதிகாரியான மதுமதி, தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதை மறந்து, ஆளும்கட்சி ஊழலுக்கு துணை போகிறார். அதே போல் மாநகராட்சி அதிகாரிகளை கவியரசு விலைக்கு வாங்கிவிட்டார். இதற்கு உதாரணம் மாநகராட்சி வருவாய் அலுவலராக இருந்த சந்திரமோகனை கவியரசு பணத்தைப் பெற்றுக்கொண்டு நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கியுள்ளார். ஏற்கனவே மாநகராட்சியில் சீனியாரிட்டி படி பார்த்தால் சந்திரமோகனைவிட பல பேர் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் உள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் கம்ப்யூட்டர் பற்றி எதுவு தெரியாது நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சந்திரமோகனுக்கு கம்யூட்டர் ஆப்ரேட் பண்ணவே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தன்னுடைய மாநகராட்சிக்கு எதிராக செயல்படும் சம்பவங்களுக்கு துணைபோகாத காரணத்தினால் உதவி ஆணையா; பொறுப்பில் இருந்த காந்திமதிக்கு பதவியிறக்கம் செய்யப்பட்டு ரவிநாதனுக்கு கீழ் தற்போது காந்திமதி பணிபுரிகிறார்.
52 காலி பணி இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யாமல், பணி இடங்களை விலைக்கு விற்றுவிட்டதால், விலை கொடுத்து பணிக்கு வந்தவர்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும். இனி தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் அம்போதான்.
ஏற்கனவே மாநகராட்சியில் 2 முறை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திமுக ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர மக்களிடம் நாடகம் ஆடுவதற்காக 4வது பைப் லைனில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சில தினங்களுக்கு முன்பு வி.இ. ரோட்டில் உள்ள லாட்ஜிங்கில் வைத்து 4வது பைப் லைன் ஒப்பந்தகாரர்களிடம் திமுக சார்பில் ஒரு மாமன்ற உறுப்பினர் பேரம் பேசினார். ஆனால் ஒப்பந்தகாரர் திமுக மாவட்ட செயலாளார் பொpயசாமிக்கு பணம் கொடுக்காமல் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா;. இதனால் தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் மதுமதியை சந்தித்து 4வது பைப் லைன் தொடர்பான முழு விபரங்களை மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மனு ஒன்று அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 24ம் தேதி மாமன்ற உறுப்பினர்களுக்கு முழு விபரங்களை மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் வைத்து வழங்கப்படும் என்று ஆணையர் மதுமதி கூறினார். ஆனால் இன்று வரை வழங்கப்படவில்லை. எல்லாம் மேயர் அந்தோணி கிரேஸ், மகன் கவியரசு இருவரும் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால் 4வது பைப் லைன் போராட்டம் (நாடகம்) முடிவடைந்தது.
மக்கள்செய்திமையம் 25.6.15 மாலை 6மணி