Breaking News
Home / பிற செய்திகள் / மாஜி அமைச்சர் வேலுமணிக்கு ரூ200கோடி கமிசன் கொடுத்தாச்சா… நகராட்சிகள், மாநகராட்சிகளில் அதிகாரிகளுக்குள் அடி, தடி…

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு ரூ200கோடி கமிசன் கொடுத்தாச்சா… நகராட்சிகள், மாநகராட்சிகளில் அதிகாரிகளுக்குள் அடி, தடி…

   ஊழல் அதிமுக அரசின் ஊழல் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு  ரூ200கோடிகமிசன் கொடுத்தாச்சா…இல்லை என்றால் கமிசன் பணம் எங்கே என்ற கேள்வியால் நகராட்சிகள், மாநகராட்சிகளில் ஆணையாளர்களுக்கும், பொறியாளர்களுக்கும் இடையே தமிழகம் முழுவதும் அடி, தடி நடந்து வருகிறது.

  சட்டமன்றத் தேர்தல் அறிவித்தது முதல் 07.05.2021  அதாவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது வரை டெண்டர்களுக்கு 15 -20 சதவிகிதம் கமிசன் மாஜி அமைச்சர் வேலுமணிக்கு கொடுக்க நகராட்சிகளின் ஆணையர்கள், பொறியாளர்கள் மூலமும், மாநகராட்சிகளின் ஆணையர்கள், தலைமைப் பொறியாளர், சிட்டி பொறியாளர்கள் மூலம் சுமார் ரூ200கோடி வசூல் செய்யப்பட்டது.

 02.05.2021 அன்று  சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக அருதிபெரும்பான்மையில் வெற்றி பெற்றதும்,  நகராட்சிகள், மாநகராட்சிகளின் அதிகாரிகள் மாஜி அமைச்சர் வேலுமணிக்கு கொடுக்க வேண்டிய கமிசனை, சுருட்டிவிட்டார்கள்..

 மாஜி அமைச்சர் வேலுமணி கொடுக்க வசூல் செய்த, தொகை எவ்வளவு என்ற விசாரணையில் நடப்பதால், நகராட்சிகள், மாநகராட்சிகளின் அதிகாரிகளுக்கு அடி, தடி நடக்கிறது.

 ஏனென்றால்  டெண்டரில் 15- 20 சதவிகிதம்  வசூல் செய்த கமிசனை பணத்தை மாஜி அமைச்சர் வேலுமணியிடம் கொடுத்திருந்தால், அதிகாரிகள் சஸ்பெண்ட்..

 டெண்டரில் கமிசனாக 15 -20 சதவிகிதம்  வசூல் செய்த பணத்தை மாஜி அமைச்சர் வேலுமணி கொடுக்கவில்லை என்றால், நகராட்சி, மாநகராட்சி கணக்கில் செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது.

  1. சென்னை மாநகராட்சியின் டூபாக்கூர் & மாபியா  தலைமைப் பொறியாளர் நந்தகுமார் 12.07.2021 அன்று மிஸ்டர் முகப்பேர் வீட்டில் கமிசன் பாக்கி பணம் தொடர்பாக பேசி முடிவெடுத்து ரூ30கோடி கொடுத்துவிட்டு வந்தார்.
  2. ஆவடி மாநகராட்சியில் வசூல் செய்யப்பட்ட ரூ95 இலட்சத்தை  நகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம் நானும் ஆணையர் நாராயணன் இருவரும் சேர்ந்து கோவை சென்றுதான் கொடுத்து  வந்தோம் என்கிறார்கள். ஆணையர் நாராயணன் நான் கோவை போகவில்லை என்கிறார். அடி, தடி நடந்துக்கொண்டு இருக்கிறது.
  3. செம்பாக்கம் நகராட்சி பொறியாளர் சண்முகம், நான் ரூ35 இலட்சம் வசூல் செய்தேன், மிஸ்டர் முகப்பேரிடம் கொடுத்துவிட்டேன் என்கிறார்.
  4. மறைமலைநகர் நகராட்சி ஆணையர் நவேந்திரன்(மாற்றப்பட்டுவிட்டார்) நான், நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் செழியன் மூலம் ரூ58 இலட்சம் மிஸ்டர் முகப்பேரிடம் கொடுத்துவிட்டேன் என்கிறார்.
  5.  தாம்பரம் நகராட்சி திருமதி சித்ரா(மாற்றப்பட்டுவிட்டார்) கமிசன் பணம் ரூ1கோடியை, நகரமைப்பு அதிகாரி சிவக்குமார் மூலம் மிஸ்டர் முகப்பேரிடம் கொடுத்துவிட்டேன் என்கிறார்.
  6. பல்லவபுரம் நகராட்சி கமிசன் பணம் ரூ71 இலட்சத்தை ஆணையர் மதிவாணன் சுருட்டிவிட்டார். மதிவாணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார்.
  7. திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த சிவக்குமார் ரூ3கோடி, கோவைக்கு மாஜி அமைச்சர்  வேலுமணி வீட்டுக்கு நேரடியாக அனுப்பிவிட்டேன் என்கிறார்.
  8.  ஈரோடு நகராட்சி ஆணையர் இளங்கோவன், பொறியாளர் அசோக்குமார்(தற்போது அமைச்சர் நேருவின் உதவியாளர்) மூலம் ரூ1.43கோடி கமிசன் கோவைக்கு மாஜி அமைச்சர் வேலுமணிக்கு  கொடுத்து அனுப்பிவிட்டேன் என்கிறார்.

இப்படி ஒவ்வொரு நகராட்சியிலும், மாநகராட்சியிலும் மெகா ஊழல் கூத்து, அடி, தடியாக மாறிய தினமும் அரங்கேறி வருகிறது.

  தமிழகம் முழுவதும் நகராட்சிகள், மாநகராட்சிகளில் மாஜி அமைச்சர் வேலுமணிக்கு டெண்டர் கமிசன் பணம் ரூ200கோடி போய் சேர்ந்ததா என்று ஊழல், கமிசன் பட்டிமன்றமே நடக்கிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *