Breaking News
Home / பிற செய்திகள் / தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் பார்வைக்கு- மாநகராட்சிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பதில் என்ன தான் பிரச்சனை… கலெக்சன் –கமிசன் –கரெப்சன் தொடருகிறது..

தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் பார்வைக்கு- மாநகராட்சிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பதில் என்ன தான் பிரச்சனை… கலெக்சன் –கமிசன் –கரெப்சன் தொடருகிறது..

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ்மீனா ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் அன்பான கோரிக்கை.. உண்மையில் மாநகராட்சிகளில் ஊழல், கமிசன், இலஞ்சத்தை ஒழிக்க விரும்பினால், மாநகராட்சியின் ஆணையர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கவும்.

  நெல்லை, திருப்பூர், சேலம் ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கு ஆணையர்களாக சில நாட்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்கள்.

 அதே போல் ஈரோடு, ஆவடி, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் , ஒசூர் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளுக்கு ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால்  மாஜி அமைச்சர் வேலுமணிக்கு மாமூல் வாங்கி கொடுத்துக்கொண்டு இருந்த இணை இயக்குநர் அந்தஸில் உள்ள அதிகாரிகள் மாநகராட்சி ஆணையர்களாக மாறுதல் செய்யப்பட்டார்கள்..

 இதனால் அதிமுக ஆட்சி போல   திமுக ஆட்சியிலும்  மாநகராட்சிகளில் கலெக்சன் –கமிசன் –கரெப்சன் தொடருகிறது.

 சென்னை மாநகராட்சியில் ரூ5000கோடி ஊழலில், ரூ400கோடி கமிசன், மாஜி அமைச்சர் வேலுமணிக்கு வாங்கி கொடுத்த, மாபியா & டூபாக்கூர்  தலைமைப் பொறியாளர் நந்தகுமார் மீது டன் கணக்கில் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்து, நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கமுடியவில்லை.

  நந்தகுமார், அதிகாரமையத்தில் போடும் ஊழல் ஆட்டம் திமுக ஆட்சியின் நம்பிக்கையை இழக்க வைக்கிறது.

 தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை செயலாளர் சிவதாஸ்மீனா ஐ.ஏ.எஸ்யுடன் சேர்ந்து நாம் ஊழல் வாழ்க.. ஊழல் வளர்க… ஊழலில் சிக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோஷம் போட வேண்டியதான்… வேறு வழியில்லை.

பாக்ஸ்… ஊழல் ரத யாத்திரை  20.08.2021ம் தேதி தொடங்கும்..

 ஊழல் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து, கைது செய்யக்கோரி  மக்கள்செய்திமையத்தில் ஊழல் ரத யாத்திரை 20.8.2021ல் தொடங்கும். கோவை சிறையில் அமைச்சர் வேலுமணியின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தால் பொய் வழக்குகளில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருந்த போது, பாதரசம் கலந்த உணவை கொடுத்தார்கள். அதனால் வயிற்றில் இரத்த கசிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். மீண்டும் சில நாட்களாக வயிற்றில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால், ஊழல் ரத யாத்திரையில் சிறிய மாற்றம்..

 என் உயிரே போனாலும் 20.08.2021ம் தேதி  ஊழல் ரத யாத்திரை தொடங்கும்..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *