Breaking News
Home / பிற செய்திகள் / மாஜி அமைச்சர் வேலுமணி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுமா? பார்த்தீபன், சரவணன், சந்திரசேகரன் வீடுகளில்- விஜிலென்ஸ் ரெய்டு நடக்குமா?

மாஜி அமைச்சர் வேலுமணி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுமா? பார்த்தீபன், சரவணன், சந்திரசேகரன் வீடுகளில்- விஜிலென்ஸ் ரெய்டு நடக்குமா?

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட  ஊழல் அதிமுக அரசின் ஊழல் அமைச்சராக இருந்த வேலுமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்கு பதிவு செய்யப்படுமா?  மாஜி அமைச்சர் வேலுமணியின் நிழல் உதவியாளர் கம் நிழல் அமைச்சராக அதிகாரமையத்தில் வலம் வந்த பார்த்தீபன், சரவணன் மற்றும் சிறப்பு உதவியாளர் சந்திரசேகரன்(ஒய்வு பெற்ற கூடுதல் இயக்குநர் –மிஸ்டர் முகப்பேர்) ஆகிய மூவரின் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு நடக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

     வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீழ்க்கட்டளையில் DO WELL ASSOCIATES உரிமையாளரும், நகராட்சிகளில் மின் விளக்கு, எல்.இ.டி விளக்குகள்  ஒப்பந்தம் எடுக்கும் சபேசன் வீட்டில் 28.3.19ல் நடந்த அதிரடி ரெய்டில் ரூ14.21கோடி சிக்கியது. விசாரணையின் போது  செல்போன் சிணுங்கியது. செல்போனில் அமைச்சரின்  நிழல் உதவியாளர்  சரவணன்  செல்போனில் வந்தார். சபேசன் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியது தெரியாமல் உளறிக் கொட்டினார்..

 அடுத்த சில நிமிடங்களில் அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனின் ஆர்.ஏ.புரம் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் அதிரடியாக நுழைந்த போது, சரவணன் ரூ7 இலட்சம்,  இலஞ்சம் வாங்கிகொண்டு இருந்தார். சரவணன் வீட்டில் ரூ70.50இலட்சமும், இலஞ்சம் வாங்கிய தொகை ரூ 7இலட்சத்தையும் சேர்த்து,  பி.வி.சரவணனின்  ஆர்.ஏ.புரம் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் ரூ77.50 இலட்சம் கைப்பற்றப்பட்டது.

 வருமானவரித்துறையில் சிக்கிய சரவணன், ரூ77.50 இலட்சம், நகராட்சி அதிகாரிகள் கொடுத்த இலஞ்ச பணம்,   இந்த பணத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் கொடுத்துவிடுவோம். எங்களுக்கு இலஞ்சம் வாங்கி கொடுக்கும் பணத்துக்கு கமிசன் மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

      வருமான வரித்துறை உடனடியாக  சரவணன் வீட்டில் ரூ77.50 இலட்சம் பறிமுதல் செய்தது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் அலுவலகம், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.  நகராட்சி நிர்வாக ஆணையரகம், கோவை மாநகராட்சி ஆணையருக்கு 12.04.20219ல் சரவணனைதற்காலிக பணி நீக்கம் செய்யும் படி கடிதம் அனுப்பியது. ஆனால் நகராட்சி நிர்வாக ஆணையரகம் கடிதத்தை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நிழல் உதவியாளர் சரவணன் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யாமல், சரவணனை காப்பாற்ற முயற்சி நடந்தது,

   கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் 24.03.2021ல் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக முன் தேதியிட்டு, கோப்புகளை தயாரித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆர்டரில் தேதி மட்டும் பேனாவில் எழுதப்பட்டு இருக்கும்.

 24.03.2021ல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆர்டரை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு 11.05.2021 தேதியிட்டு அனுப்பி உள்ளார். மேலும் 11.05.2021 தேதியிட்ட கடிதத்தில் 01.04.2015 முதல் 31.03..2019 சரவணன் சொத்து விவர அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட இளம் பொறியாளர் சரவணன், டிசம்பர் 2017 முதல் மார்ச் 2021 வரை கோவை மாநகராட்சி வருகை பதிவேட்டில் அப( அலுவலக பணியா.. அயல் பணியா) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2021ல் வருகை பதிவேட்டில் மவி(மருத்துவவிடுப்பு ) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

24.03.2021ல் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு வருகை பதிவேட்டில் எப்படி அப, மவி என்று பதிவு செய்யும் முடியும்? இதுதான் குமாரவேல்பாண்டியன் ஐ.ஏ.எஸ்யின் மெகா மோசடியாகும்.

 2017ம் ஆண்டு ஆகஸ்டு முதல் இன்று வரை வேலுமணியின் நிழல் உதவியாளர் பார்த்தீபன் மருத்துவ விடுப்பில் உள்ளார். எப்படி அனுமதிக்கிறார்கள் ..

 28.03.2019ல் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கி, 24.03.2021ல் சஸ்பெண்ட் சரவணன் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், மாஜி அமைச்சர் வேலுமணி மீது சொத்து குவிப்பு பதிவு செய்யப்படுமா?

 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் கந்தசாமி ஐ.பி.எஸ் பதில் சொல்லுவாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *