Breaking News
Home / பிற செய்திகள் / கவர்னர் மாளிகையின் அத்துமீறல்- கவர்னர் மாளிகை & கிண்டி வன உயிரின கோட்டம் ஊழியர்கள் கொத்தடிமைகளா?- பால், மருந்து கிடைக்காமல் அவதி… ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தடை..

கவர்னர் மாளிகையின் அத்துமீறல்- கவர்னர் மாளிகை & கிண்டி வன உயிரின கோட்டம் ஊழியர்கள் கொத்தடிமைகளா?- பால், மருந்து கிடைக்காமல் அவதி… ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தடை..

கவர்னர் மாளிகை மற்றும் கிண்டி வன உயிரின கோட்டத்தில்  பணியாற்றும் ஊழியர்கள் குடும்பத்துடன்  கவர்னர் மாளிகை அமைந்துள்ள வனத்துறை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில்  கொத்தடிமைகளாக வசித்து வருகிறார்கள்.

 மேதகும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பாதுகாப்பு என்ற பெயரில் வேளசேரி சாலை நுழைவு வாயிலை பூட்டிவிட்டார்கள். மேலும் சர்தார் பட்டேல் சாலையில் உள்ள ஸ்டாப் கேட் அழைக்கப்படும் நுழைவு வாயிலையும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு போட்டு காவல்துறையினரை பாதுகாப்புக்கு நியமித்து பூட்டிவிட்டார்கள்.

 கவர்னர் மாளிகை மற்றும் கிண்டி வன உயிரின கோட்டம் ஊழியர்கள் கிண்டி சிறுவர் பூங்காவுக்கு செல்லும் பாதையை மட்டும் பயன்படுத்த வேண்டுமாம். இந்த பாதை குடியிருப்புகளிலிருந்து 2.50கிமீட்டர் தூரம் உள்ளது.

 வனத்துறைக்கு சொந்தமான வேளச்சேரி கேட்டை மூட, ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  கவர்னர் மாளிகை மற்றும் கிண்டி வன உயிரின கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின்  குடும்பத்தினர்களுக்கு மாரடைப்பு மற்றும் அவசர சிகிச்சைக்கோ வெளியில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனே செல்ல ஆளுநர் மாளிகை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்(ஆனால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று யாருக்கும் தெரியாது.. ஒவ்வொரும் ஒவ்வொரை கைக்காட்டுவார்கள்) அதற்குள் நோயாளிகளுக்கு பாதி உயிர் போய்விடும் அல்லது இறந்துவிடுவார்கள். .என்ன கொடுமை.. இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது.

  நோயாளிகளை பகல், இரவு நேரங்களில் வெளியே கொண்டு செல்லவோ, கூட்டிவரவோ ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது..

  கவர்னர்மாளிகை மற்றும் கிண்டி வன உயிரின கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் கொத்தடிமைகள் போல் வாழ்ந்து வருகிறார்கள்.

                     இதுவிட கொடிமை என்ன வென்றால் 

  1.   குடியிருப்புகளுக்கு செய்தித்தாள், பால், காய்கறிகள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.
  2.  குடியிருப்புகளுக்கு நேரடியாக கேஸ் சிலிண்டர் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. ஸ்டாப் கேட் என்று அழைக்கப்படும் நுழைவு வாயில் அருகே சென்று தலையிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ கொண்டு வர வேண்டும்.
  3.  ஆன் லைனின் ஆர்டர் கொடுக்கப்படும் உனவுகள், அத்திவாசிய பொருட்கள், மருந்து, மாத்திரைகள் குடியிருப்புகளுக்கு கொண்டு செல்ல ஆளுநர் மாளிகை தடைவிதித்துள்ளது.
  4. ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அவசர வாகனங்கள் குடியிருப்புகளுக்கு செல்ல ஆளுநர் மாளிகை தடைவிதித்துள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அய்யாவின் செயலாளர் ராஜகோபால் பணியாற்றிய போது, கட்டுப்பாடுகளை கொண்டு வந்து மெல்ல, மெல்ல அடக்குமுறை செய்து, மனித உரிமைகளை பறித்தார்.

 தற்போது செயலாளராக இருக்கும் ஆனந்தராவ் பட்டேல் ஐ.ஏ.எஸ் பாதுகாப்பு என்ற பெயரில் பணியாற்றும் குடும்பங்களை கொத்தடிமைகளாக மாற்றிவிட்டார்.

    கவர்னர் மாளிகை மற்றும் கிண்டி வன உயிரின கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு விடிவு காலம் பிறக்குமா.. கொத்தடிமைகளாக தொடர வேண்டுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *