Breaking News
Home / பிற செய்திகள் / மறைமலைநகர் நகராட்சி.. செந்தில்குமார் செழியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- பணி நியமனமே சட்ட விரோதம்..

மறைமலைநகர் நகராட்சி.. செந்தில்குமார் செழியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- பணி நியமனமே சட்ட விரோதம்..

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருக்கும் செந்தில்குமார் செழியன் பணி விதிகளுக்கு முரணாக, அரசாணைக்கு முரணாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 இதனால் செந்தில்குமார் செழியனை சஸ்பெண்ட் செய்து, செந்தில்குமார் செழியன் நியமனம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள்செய்திமையம் புகார் அளித்துள்ளது.

 13.08.2015ல் மறைமலைநகர் நகராட்சியிலிருந்து செந்தில்குமார் செழியன் நகரமைப்பு ஆய்வாளராக ஆவடி நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார். 16.03.2017ல் பூந்தமல்லி நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டவர், மாறுதல் ஆணை 04.04.2017ல் ரத்து செய்யப்பட்டு, ஆவடி நகராட்சியில் பணியை தொடருகிறார்.

 ஆவடி நகராட்சியிலிருந்து மீண்டும்  நகரமைப்பு ஆய்வாளராக மறைமலைநகர் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார். மறைமலைநகர் நகராட்சியில் செந்தில்குமார் செழியன் நகரமைப்பு ஆய்வாளர் பணியுடன், பினாமி பெயரில் கட்டுமான நிறுவனங்களை தொடங்கி, அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

 மறைமலைநகர் நகராட்சிக்கு காலை ஒருமணி நேரம் மட்டுமே எட்டிபார்த்துவிட்டு, கட்டுமான நிறுவனங்களின் பணிகளை பார்வையிட போய்விடுவார். மறைமலைநகர் நகராட்சிக்கு பணி மாறுதல் செய்து, மூன்றாண்டுகளாகிவிட்டது. தொலைதூர மாவட்டத்துக்கு செந்தில்குமார் செழியனை மாறுதல் செய்ய வேண்டும்.

   செந்தில்குமார் செழியன் நியமனம் முறைகேடானது… சஸ்பெண்ட் செய்யப்படுவாரா ..

   செந்தில்குமார் செழியன் பல்லவபுரம் நகராட்சியில் நகராட்சி நியமனக்குழு தீர்மானம் எண்.1 நாள் 30.11.2001ன்படி நகரமைப்பு ஆய்வாளராக 3.12.2001 முதல் ரூ2000/- தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகிறார்.

அதாவது செந்தில்குமார் செழியன் அரசாணை எண்.125 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை நாள் 27.5.99ன்படி நகராட்சியின் பொதுப்பிரிவில் உள்ள பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்படுகிறார்.

 செந்தில்குமார் செழியன் எவ்வித அரசாணையுமின்றி, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒராண்டு கணக்கீடு நகராட்சி ஆணையர் தன்னிச்சையாக முறையான காலமுறை ஊதிய விகிதம் வழங்கி பணிவரன் முறைப்படுத்தியது முற்றிலும் தவறானது என்று  உள்ளாட்சி நிதித்தணிக்கை அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

  மேலும் உள்ளாட்சி நிதித்தணிக்கை அறிக்கையில் செந்தில்குமார் செழியன் பணி நாளது தேதி வரை பணி வரன் முறை செய்யப்படாமல் உள்ளது என்பதையும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

  இப்படி செந்தில்குமார் செழியன் நியமனமே முற்றிலும் முறைகேடாக இருக்கும் போது, செந்தில்குமார் செழியன் போடும் ஆட்டம் எல்லை மீறிக்கொண்டு இருக்கிறது.

  செந்தில்குமார் செழியனை சஸ்பெண்ட் செய்துவிட்டு, செந்தில்குமார் செழியன் நியமனம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஐ.ஏ.எஸ் அவர்கள் உத்தரவிட வேண்டும்..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *