Breaking News
Home / பிற செய்திகள் / பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி மாறன் தலைமறைவா?…

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி மாறன் தலைமறைவா?…

         பல்லவபுரம் நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நகரமைப்பு அதிகாரி மாறனும், பொறியாளர் ரவிச்சந்திரனும் தலைமறைவாகிவிட்டார்கள்.

      பல்லவபுரம் நகராட்சியில் 5.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் நகரமைப்பு அதிகாரி எஸ்.வி .மாறன், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் இருவரும் சிக்கினார்கள்.  இருவரிடமிருந்து ரூ2,00,200 மற்றும் 8கிராம் தங்க காசு பறிமுதல் செய்யப்பட்டது.

  46 நாட்கள் மக்கள்செய்திமையம் நடத்திய அதிரடி செய்திகளாலும், அதிரடி நடவடிக்கைகளாலும் 21.12.2020ம் தேதி இரவு 7மணியளவில் நகரமைப்பு அதிகாரி மாறனும், பொறியாளர் ரவிச்சந்திரனும், பல்லவபுரம் நகராட்சியிலிருந்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.  கடந்த ஏழு மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்.

  1. மாறன் மனைவி லட்சுமி பிரியா பெயரில்  இலட்சுமி பில்டர்ஸ் முதல் மகன் அஸ்வத் பெயரில் அஸ்வத் கன்ஸ்டிரக்சன் நடத்தி வருகிறார்.
  2. மாறனின் இரண்டாவது மகன் அரவிந்த்ரோஷன் மற்றும் அஸ்வத் பெயரில் நகரமைப்பு பிரிவில் அப்ரூவலுக்கு இலஞ்சம் வாங்கி, கொள்ளையடித்த பணத்தில் குரோம்பேட்டையில்  BARBEQUE NATION என்ற பெயரில் அசைவ ஹோட்டலை விலைக்கு வாங்கி நடத்தி வருகிறார். BARBEQUE NATION ஹோட்டலில்தான் பல்லவபுரம் ஆணையராக மதிவாணன், நகரமைப்பு ஆய்வாளராக பழனிச்சாமியும் இருந்தவரை பல அப்ரூவல் தொடர்பான இலஞ்ச பண பரிமாற்றங்கள் நடந்தது,

மாறன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.  மாறன் ரூ100கோடிக்கு சொத்து குவித்துள்ளதாக தெரிகிறது.

    பல்லவபுரம் நகராட்சி ஆணையர் மதிவாணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். நகரமைப்பு ஆய்வாளர் பழனிச்சாமியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார்.

  மதிவாணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அதிர்ச்சியான மாறன், BARBEQUE NATION ஹோட்டல் பக்கம் சில நாட்களாக வராமல் தலைமறைவாக இருக்கிறார்.

  மதிவாணன் சஸ்பெண்டை தொடர்ந்து, நகரமைப்பு அதிகாரி மாறன், பொறியாளர் ரவிச்சந்திரன் இருவரும் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *