Breaking News
Home / பிற செய்திகள் / DVAC “PHONY”= ஊழல் வழக்கு பதிவு செய்யாமல்- ஊழல் சாதனை..

DVAC “PHONY”= ஊழல் வழக்கு பதிவு செய்யாமல்- ஊழல் சாதனை..

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கடந்த 5 ஆண்டுகளில்  ஒரே ஒரு ஊழல் வழக்குகள் கூட பதிவு செய்யாமல் ஊழல் சாதனை செய்துள்ளது. 5 ஆண்டுகள் என்று சொல்வதைவிட கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு ஊழல் வழக்குகள் கூட பதிவு செய்யவில்லை என்பதுதான் உண்மை..

  மக்கள் செய்திமையம் உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின்சாரவாரியம் உள்ளீட்ட துறைகளில் நடந்த  ரூ5000கோடி மதிப்புள்ள ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் சுமார் 68 புகார் கொடுத்துள்ளது.

 மக்கள்செய்திமையத்தின் புகாரை பெற்றவுடன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் பணியாற்றும் ஆய்வாளர்கள், டி.எஸ்.பிக்கள் இந்த புகார் நீங்கள் அனுப்பியதா என்று கேட்பார்கள்..ஆமாம் என்று சொன்னவுடன், ஆதாரங்களை கேட்பார்கள்..

   ஊழல் புகாருடன் ஆதாரங்களை அனுப்பினாலும், மீண்டும் ஆதாரங்களை விசாரணை அதிகாரியிடம் கொடுத்தேன்.

 ஒரு மாதம் கழித்து, நீங்கள் கொடுத்த புகார் மனு, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கடிதம் வரும்.. இந்த கடிதம் டூபாக்கூர் கடிதம் என்று நமக்கு தெரியும், வேறு வழியில்லாமல், அதை பாதுகாப்பாக வைத்துக்கொண்டேன்.

          கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 60 கடிதங்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திலிருந்து வந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு புகாரில் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் அனுப்பிய ஊழல் புகார் மனுவை, பொதுத்துறை சம்பந்தப்பட்டத்துறைக்கு அதாவது நம் புகாரில் ஊழல் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஊழல் செய்தவர் எப்படி ஊழலை ஒத்துக்கொள்வார்..

 ஊழல் செய்த அதிகாரி, இந்த புகாரின் மீது எந்தவித ஆதாரமும் இல்லை என்று எழுதி, பொதுத்துறை அனுப்பிவிடுவார். பொதுத்துறை அதிகாரிகள் அந்த கோப்பு குப்பை தொட்டியில் போட்டுவிட்டு ஜாலியாக குளு…குளு அறையில் உட்கார்ந்து ஊர் கதை பேசிக்கொண்டே ஒய்வெடுப்பார்கள்..

 மக்கள்செய்திமையம் மட்டுமல்ல, பல அப்பாவிகள் இப்படி நூற்றுக்கணக்கான ஊழல் புகார்களை  ஆதாரங்களுடன்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு அனுப்பிவிட்டு, நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருந்து நொந்து போய்விட்டார்கள்..

  கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்  மற்றும் பொதுத்துறை செயலாளர் அலுவலகம் கூட்டணி, ஒரே ஒரு ஊழல் புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் ஊழல் சாதனை செய்துள்ளது..

  தமிழ்நாட்டின் ஊழல் சாதனை செய்த  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு பாரத ரத்னா விருது கொடுக்க தமிழக மக்கள் பரிந்துரை செய்யலாம்…

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *