Breaking News
Home / பிற செய்திகள் / அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளியிட்ட- மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் குண்டர் சட்டத்தில் கைது- அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமா.. சிந்திப்பீர்… சிந்திப்பீர்…

அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளியிட்ட- மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் குண்டர் சட்டத்தில் கைது- அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமா.. சிந்திப்பீர்… சிந்திப்பீர்…

     அதிமுக அரசின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தலைவருமான  அன்பழகன் மீது, உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஆசியால் 24பொய் வழக்குகள்  போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கோவை தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

119 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார் அன்பழகன்..  கோவை தனிமை சிறையில் பாதரசம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்ய முயற்சி நடந்தது.  கோவை சிறையிலிருந்து விசாரணைக்கு நீதிமன்றம் சென்ற போது, இரண்டு முறை அன்பழகன் தாக்கப்பட்டார்.

  2018 டிசம்பர் மாதம் அன்பழகன் மீது கோவையில் மீண்டும் பொய் வழக்கு பதிவு செய்து, அன்பழகன் வீட்டின் அருகே உள்ள மண் சாலையில் நடந்து சென்ற போது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மயிரிழையில் உயிர்தப்பினார். துப்பாக்கி குண்டுகள் கண்டு எடுக்கப்பட்ட நிலையிலும் கூட பூந்தமல்லி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை மூன்று ஆண்டுகளாகியும் பதிவு செய்யவில்லை.

 இதற்கு இடையில் அன்பழகனின் தாயார் தனம், தம்பி மதிவாணன் இருவரும், அன்ப்ழகன் மீது போட்ட பொய் வழக்குகளால், நீதிமன்றங்களுக்கு அலைந்து, அலைந்து  மன உளச்சல் ஏற்பட்டு, உடல் நலம் சரியில்லாமல் இறந்து போனார்கள்.. இருவர் மரணத்துக்கும் பொறுப்பு அதிமுக அரசுதான் ..

  ஜனவரி 2020ல் நடந்த புத்தக கண்காட்சியில் பணம் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்ட  101 ஸ்டாலில்  அதிமுக அரசின் ஊழல் புத்தகங்களை விற்பனை செய்த அன்பழகனை, புத்தக கண்காட்சி செயலாளரை தாக்கியதாக பொய் வழக்கு  போட்டு, 11 நாட்கள் புழல் சிறையில் அடைத்தார்கள்..

 அன்பழகன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீண்டும் 2020 ஜனவரியில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் பல ஆயிரம் கோடி ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தால், பொய் வழக்கு, சிறை, குண்டர் சட்டம், துப்பாக்கி சூடு என்று மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை  பழி வாங்கிய அதிமுக அரசுக்கு வாக்கு அளிக்க வேண்டுமா…

 சிந்திப்பீர்.. சிந்திப்பீர்.. சிந்திப்பீர்..

   மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்தால் அத்திப்பட்டு கிராமம் போன்று தமிழ்நாடு காணாமல் போய்விடும்..

  வாக்களிக்க புறப்பட்டுவிட்டீர்கள்.. வாக்குசாவடி சென்றவுடன் அதிமுக கூட்டணி வாக்களிக்க  மாட்டோம் என்ற முடிவை செயல்படுத்துங்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *