
மக்கள்செய்திமையம்(MAKKALSEITHIMAIYAM NEWS(OPC_PVT LTD நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் வெளியிட்ட 15க்கு மேற்பட்ட அதிமுக அரசின் ஊழல் புத்தகங்களை(ஒரு இலட்சம் கோடி ஊழல்) ஆவடி, மதுரவாயல், திருவள்ளூர், அம்பத்தூர், கும்முடிப்பூண்டி, திருத்தணி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, ஆர்.கே.நகர், ராயபுரம், பூந்தமல்லி, பல்லவரம், தாம்பரம் , பொன்னேரி, கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் ரூ10 இலட்சம் மதிப்புள்ள 20,000 புத்தகங்களை, படித்த, நடுத்தர மக்களிடம், நமது நிருபர்கள் மூலம் இலவசமாக வழங்கினோம்.
2020 ஜனவரியில் நடந்த புத்தக கண்காட்சியில், அனுமதி பெற்றப்பட்ட 101 ஸ்டாலில் அதிமுக ஊழல் புத்தகங்களை விற்பனை செய்ய, சுமார் ரூ5 இலட்சம் மதிப்புள்ள ஊழல் புத்தகங்களை மறு அச்சிட்டோம். ஆனால் ஆசிரியர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காரணத்தால், அந்த புத்தகங்கள் பண்டல்களாக அலுவலத்தில் குவிந்துகிடந்தது.
அதே போல் கொரோனா கொள்ளை, கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யின் மறு பக்கங்கள், சசிகலா நிராபாரதி, ஆவடி தொகுதியில் ரூ100கோடி ஊழல், சென்னை மாநகராட்சியில் 1500கோடி ஊழல் ஆகிய புத்தகங்கள் ரூ7இலட்சத்துக்கு 2021புதிய புத்தகங்களாக அச்சிட்டோம்.
ரூ10 இலட்சம் மதிப்புள்ள 20,000 எண்ணிக்கையில் அதிமுக அரசின் ஊழல் புத்தகங்களை, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக, 16 சட்டமன்றத் தொகுதிகளில் படித்தவர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், இளைஞர்களிடம் இலவசமாக, நமது நிருபர்கள் மூலம் கொண்டு போய் சேர்த்தோம்..தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள்செய்திமையம் ஒரு சிறு துரும்பாக செயல்பட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு, மக்கள்செய்திமையத்தின் பங்கு ரூ10 இலட்சம்.. இந்த ரூ10 இலட்சமும் கடன் வாங்கியதுதான்.. இதை எப்போது, எப்படி அடைக்கப் போகிறேன் என்று தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் அதிமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் மக்கள்செய்திமையத்தின் குறிக்கோளாக இருந்தது..