Breaking News
Home / பிற செய்திகள் / 528 பேரூராட்சிகளில்- LED LIGHT ரூ16கோடி ஊழல்- Sri Sakthi corporation பெயரில் போலி பில்..

528 பேரூராட்சிகளில்- LED LIGHT ரூ16கோடி ஊழல்- Sri Sakthi corporation பெயரில் போலி பில்..

   2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்பதால், உள்ளாட்சி அமைப்புகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் செயல் அலுவலர்கள் வரை கடைசி கட்டமாக கொள்ளை, கொள்ளை அடித்து வருகிறார்கள்.

 பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் அலுவலகத்திலிருந்து, பேரூராட்சிகளின் உதவி இய்ககுநர் மூலமாக  528 பேரூராட்சிகளின் செயல் அலுவலருக்கு செல்போன் மூலமாக வாய் மொழி மிரட்டல் உத்தரவு சென்றது.

  பேரூராட்சி இயக்குநரகத்தின் மிரட்டல்  உத்தரவில் Sri Sakthi corporation, Flat No.1-B, ESS PeekayApartments, No.9, Dhannammal street, Chetpet, Chennai-31 என்ற நிறுவனத்திடமிருந்து  LED LIGHT 20 W – 100 எண்ணிக்கைக்கு ரூ4704 விலைக்கு குறைந்தபட்சம் 200 எண்ணிக்கையும்,  20 W LED Fitting  ஒன்றின் விலை ரூ4200 என்ற விலைக்கு 200 எண்ணிக்கையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

 Sri Sakthi corporationல் 528 பேரூராட்சிகளும் தலா ரூ8.50 இலட்சத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்கள்.

  LED LIGHT 20 W, 20 W LED Fitting சப்ளை செய்யப்படாமலேயே பில் மட்டும் வாங்கிக்கொண்டு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

  சின்ன கணக்கு ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் ரூ8.50 இலட்சம் என்றால் ரூ8.50 இலட்சம் X 528= ரூ21,93,00,000(ரூ21.93கோடி)… Sri Sakthi corporation பெயருக்கு ரூ21.93கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

 ரூ21.93கோடியில் ரூ5கோடிக்கு கூட LED LIGHT 20 W, 20 W LED Fittingகொள்முதல் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.. LED LIGHT 20 W, 20 W LED Fitting ஊழலில் இருப்பது உதவி செயற் பொறியாளர் கம் ஆல்..இன்.ஆல்.. மனோகரன்…

 பல பேரூராட்சிகளில், பணம் பட்டுவாடா செய்த பின்பு, LED LIGHT 20 W, 20 W LED Fitting அனுப்பவில்லை ஏன்.. என்று செயல் அலுவலர்கள் கேடார்கள், அதற்கு சக்தி கார்ப்பரேசன் நிறுவனம்  பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் பக்கம் கைக்காட்டிவிட்டு ஒதுங்கிவிட்டது. செயல் அலுவலர்கள் பெரிய இடத்து விவகாரம். .நமக்கேன் வம்பு என்று சப்ளை  செய்யப்பட்டதாக கோப்புகளில் எழுதி மூடிவிட்டார்கள்.. அம்மாடியோவ்,,,

 சத்தம் இல்லாமல் 528 பேரூராட்சிகளிலும் Sri Sakthi corporation பெயரில்  LED LIGHT 20 W, 20 W LED Fitting கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக போலி பில் போட்டு ரூ16கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

 சட்டமன்றத் தேர்தல் நேரத்திலும் வாய்மொழி மிரட்டல் உத்தரவில் ரூ16கோடி கொள்ளையடித்த, அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டுமா… சிந்திப்பீர்.. சிந்திப்பீர்… சிந்திப்பீர்..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *