Breaking News
Home / பிற செய்திகள் / அமைச்சர் பெஞ்சுமின் மச்சான் ராஜனின் பண சுருட்டல்- அலறும் அதிமுகவினர்..

அமைச்சர் பெஞ்சுமின் மச்சான் ராஜனின் பண சுருட்டல்- அலறும் அதிமுகவினர்..

  அமைச்சர் பெஞ்சுமின் அக்கா மகன் மச்சான் ராஜன், அமைச்சரின் உதவியாளர் என்ற அதிகாரமையத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிகாரிகளை  மிரட்டி  அப்ரூவல் வாங்கி தந்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்தார்.

    அமைச்சர் பெஞ்சுமினுக்கு வரும் மாமூல் பண கட்டுக்களில், பணம் குறையுது என்ற சந்தேகத்தில் ராஜன் சில மாதங்கள் ஒரங்கட்டப்பட்டார். ஆனால் தற்போது அதிகாரமையத்தில் உள்ளார்.

 மதுரவாயல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, பணம் வானகரத்தில் உள்ள பிரபலமான திருமண மண்டபத்தின் சமையல் பாத்திரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர்அமைச்சர் பெஞ்சுமின் உத்தரவின் பேரில், வாக்காளர்களுக்கு  தலா ரூ1000/- கொடுக்க, 30 அதிமுக வட்ட செயலாளர்கள், அயப்பாக்கம், அடையாளம்பட்டு, வானகரம் கிராம பஞ்சாய்த்து பொறுப்பில் இருப்பர்களிடமும்,  வாக்காளர்களை கணக்கீட்டு பணம் கொடுக்க, ராஜனுக்கு உத்தரவிட்டார் வேட்பாளர் கம் அமைச்சர் பெஞ்சுமின்.

அதிமுக வேட்பாளர் கம் அமைச்சர் பெஞ்சுமின் சொன்னதன் பேரில்,வானகரத்தில் உள்ள பிரபலமான திருமண மண்டபத்துக்கு சென்று அதிமுக வட்ட செயலாளர்கள், ராஜனிடம் கணக்கு போட்டு சொல்ல  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க , பணத்தை  பெற்றுச்  சென்றார்கள்.

 ராஜன் கொடுத்த பணத்தில்  ரூ500 பண கட்டுக்களில் ஒவ்வொரு கட்டுக்களிலும் 5 முதல் 10 நோட்கள் குறைவாக இருந்தது. 30 அதிமுக வட்ட செயலாளர்களும் அதிர்ச்சியுடன் அமைச்சர் பெஞ்சுமினிடம் இப்படி ஒவ்வொரு கட்டிலும் ரூ2500 முதல் ரூ5000 வரை குறைந்தால் எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியும் என்று புலம்பினார்கள்.

 சில அதிமுக வட்ட செயலாளர்கள்  ராஜன் தான் கட்டுகளிலிருந்து பணத்தை உருவி விடுவதாக வெளிப்படையாகவே புகார் சொன்னார்கள். அமைச்சர் பெஞ்சுமினுக்கு அதிர்ச்சியுடன் கோபம் வந்தாலும், என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் விசாரிப்பதாக கூறி அனைவரையும் அனுப்பிவிட்டார்..

 சொந்த வீட்டிலே, சூனியம் வைக்கும், ராஜனை நம்பும் அமைச்சர் பெஞ்சுமின், கட்சிக்காரர்களை நம்ப மறுக்கிறார் என்று புலம்புகிறார்கள்..

 அமைச்சர் பெஞ்சுமின் மச்சான் ராஜன், கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில்  எஸ்டேட்டுகளை, ரிசார்ட்டுகளையும்  வாங்கி உள்ளதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரித்து வருகிறது.

மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சுமின் வெற்றி பெறுவாரா.. 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயில் தொகுதி தனித் தொகுதியாக மாற்றி தருகிறேன் என்ற பெஞ்சுமின் கொடுத்த வாக்குறுதி நிறைவேறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

பாக்ஸ்… கருத்துக் கணிப்பு…விளக்கம்..

 மக்கள்செய்திமையத்தின் கருத்துக்கணிப்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர்(தனி) தொகுதி விடுப்பட்டுள்ளது. ஆத்தூர்(தனி)தொகுதியில் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

 கருத்துக்கணிப்பு இழுபறி –திமுக என்றால் இழுபறிக்கு பின் திமுகவெற்றி.. இழு பறி- அதிமுக என்றால் இழுபறிக்கு பின் அதிமுக வெற்றி என்று குறிப்பிட்டு உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *