Breaking News
Home / பிற செய்திகள் / 2021 சட்டமன்றத் தேர்தலை விற்பனை செய்யும் அதிகாரிகள்- ஹர்மந்தர்சிங் ஐ.ஏ.எஸ்-பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- பிரகாஷ் ஐ.ஏ.எஸ்- பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்-டாக்டர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்- காப்பாற்றும் சத்யபிரதசாகு ஐ.ஏ.எஸ்

2021 சட்டமன்றத் தேர்தலை விற்பனை செய்யும் அதிகாரிகள்- ஹர்மந்தர்சிங் ஐ.ஏ.எஸ்-பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- பிரகாஷ் ஐ.ஏ.எஸ்- பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்-டாக்டர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்- காப்பாற்றும் சத்யபிரதசாகு ஐ.ஏ.எஸ்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு  உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம பஞ்சாய்த்துகள் அதாவது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலமாக, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளின் ஆணையர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், 528 பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், ஊரக வளர்ச்சித்துறை ஆணையர்(12600 கிராம பஞ்சாய்த்து, 385 ஊராட்சி ஒன்றியங்கள்) டாக்டர் பழனிச்சாமி மற்றும் நகராட்சி நிர்வாக மற்றும் குடி நீர் வழங்கல்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் ஐ.ஏ.எஸ் இந்த ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வாய் மொழி உத்தரவின் மூலமாக , 234 தொகுதிகளில் ஆளும் அதிமுக வேட்பாளர்களுக்கு, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா நடக்கிறது.

  மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள அரசு வாகனங்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பயன்படுத்தப்படுகிறது.

  121 நகராட்சி ஆணையர்கள் உதவி தேர்தல் அதிகாரியாகவும், 14 மாநகராட்சி அதிகாரிகளும், 528 பேரூராட்சி செயல் அலுவலர்களும் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பதால், உள்ளாட்சி அமைப்புகளின் வாகனங்களை, அதிமுக வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பயன்படுத்தப்படுகிறது.

  ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், பல்லவபுரம் நகராட்சி ஆணையர் மதிவாணன், தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா, செங்கல்பட்டு மண்டல இயக்குநர் முஜிபுர்ரஹமான், செங்கல்பட்டு மண்டல பொறியாளர்  கருப்பையா ராஜா, மறைமலைநகர் நகராட்சி ஆணையர்நவேந்திரன், செம்பாக்கம் நகராட்சி பொறியாளர்சண்முகம் உள்ளிட்ட பல நகராட்சி அதிகாரிகளை பற்றி தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்து, இன்னும் மாற்றப்படவில்லை.

  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார் இருவர் மூலமாக சென்னையில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தலா ரூ10கோடி என ரூ150 கோடி பணம், சென்னை மாநகராட்சி வாகனங்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பணம் கொடுக்கவும் சென்னை மாநகராட்சி வாகனனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

 அதே போல் 121 நகராட்சிகளின் ஆணையர்கள், பொறியாளர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், 385 ஊராட்சி ஒன்றியங்களின் அதிகாரிகள்(பி.டி.ஒ), 15 மாநகராட்சிகளின் ஆணையர்கள் மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளின் வாகனங்கள் மூலமாக அதிமுக வேட்பாளர்கள் மற்றும்  அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சுமார் ரூ2000கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இன்னும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

  ஹர்மந்தசிங் ஐ.ஏ.எஸ், பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், பிரகாஷ் ஐ.ஏ.எஸ்,  எஸ்.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் இந்த நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் உடனடியாக மாறுதல் செய்யாதவரை 2021 சட்டமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி, நியாயமாக நடக்காது.

  இந்த நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் 2021ம் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அய்யா, அடுத்த துணை முதல்வர் என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்..

 இப்படி2021 சட்டமன்றத் தேர்தல்  ஜனநாயகத்தை விலைக்கு விற்பனை செய்யதான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளானார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *