
தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா, நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சாமூவேல், சுகாதார அதிகாரி மொய்தீன் நால்வர் அணி, அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னையாவுக்கு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்..
அம்மா மக்கல் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கரிகாலனும், சின்னையாவும் தாம்பரம் நகராட்சியில் கூட்டணி அமைத்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்தார்கல். அதனால் கரிகாலன் சின்னைக்கு எதிராக செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளருக்கு தேர்தல்
செலவுக்காக ரூ1 கோடி போலி பில் போட்டு கொடுத்தார் ஆணையர் சித்ரா..மேலும் தாம்பரம்நகராட்சி
வாகனங்கள் மூலமாகதான், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தினமும் நடக்கிறது.
மேலும் தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா, சுகாதார
அதிகாரி, மொய்தீன், சுகாதார ஆய்வாளர் சாமூவேல் மூவர் அணி, அதிமுக வேட்பாளருக்கு நகராட்சி
பணத்தை போலி பில் மூலம் தாரை வார்த்தது இல்லாமல், சில ஒப்பந்ததாரர்களிடம் தேர்தல் செலவுக்கு
பணம் வாங்கி கொடுத்துள்ளார்கள்..
- குப்பை அள்ளுவதில் நடந்த ஊழலில் சிக்கிய ஆர்.ஆர்.சர்வீசஸ் நிறுவனம் அதிமுக வேட்பாளர் சின்னையாவுக்கு ரூ6 இலட்சம் கொடுத்துள்ளது. ஏற்கனவே சட்டத்துக்கு புறம்பாக ஆர்.ஆர்.சர்வீசஸ்கு குப்பை அள்ளும் டெண்டர் தாம்பரம் நகராட்சியில் ரூ31.62 இலட்சத்துக்கு கொடுக்கப்பட்டது.
- நம்ம டாய்லெட் பராமரிப்பு பணி ஒப்பந்ததாரர் எஸ்.ஆர் மேன் பவர் கன்சல்டன்சி யிடம் ரூ5 இலட்சம் வாங்கி, சின்னையாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நம்ம டாய்லெட் பராமரிப்பு பணியில் மெகா ஊழல் நடந்துள்ளது. நம்ம டாய்லெட் பராமரிப்பு பணிக்கு 9 எண்ணிக்கைக்கு மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆணையரின் அறிவுரையின் படி 9 கழிவறைகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்தபுள்ளி 20 கழிவறைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் தாம்பரம் நகராட்சியில் எத்தனை நம்ம டாய்லெட் கழிவறை இருக்கிறது என்ற எண்ணிக்கை விவரமே கோப்புகளில் இல்லை.
- இந்திரா நகர் பூங்கா அபிவிருத்தி செய்யும் பணியில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகலை மீறி ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட பி.மணியிடம் ரூ2 இலட்சம் வாங்கி, அதிமுக வேட்பாளர் சின்னையாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
- சி.எம்.டி.ஏ பணிகள்,- பூங்கா பராமரிப்பு பணிகள் உத்தரவு வழங்கி, 41/2 ஆண்டுகள் கழித்து பணிகள் மேற்கொண்ட சிம்லா கூல் மேக்கர்ஸ் சரவணனுக்கு சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி ரூ36 இலட்சத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சிம்லா சரவணனிடம் ரூ10 இலட்சம் வாங்கி அதிமுக வேட்பாளர் சின்னையாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதுஜ்.
இப்படி சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி டெண்டர் கொடுத்தவர்களில், பல லட்சம் வாங்கி, அதிமுக வேட்பாளர் சின்னையாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆணையர் சித்ரா, மொய்தீன், சாமூவேல் சிவக்குமார் நான்கு பேரும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் பணியாற்றுகிறார்களா.. அதிமுக வேட்பாளர் சின்னையாவிடம் பணியாற்றுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆணையர் சித்ரா, சுகாதார அதிகாரி மொய்தீன், சுகாதார ஆய்வாளர் சாமூவேல், நகரமைப்பு அதிகாரி சிதம்பரம் சிவக்குமார் நான்கு பேரும், அதிமுக வேட்பாளர்சின்னையாவுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரமும் செய்கிறார்கள்..
அது..சரி மாவட்ட தேர்தல் அதிகாரி என்ன தான் செய்கிறார்கள்.. எதிர்கட்சியான திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராசாவும் மெளனமாக இருப்பது ஏன்?