
மக்கள்செய்திமையத்தின் 67 இளைஞர்கள் கொண்ட 16 குழுக்கள் தமிழகம் முழுவதும் குக்கிராமம் முதல் மாநகராட்சி வரை அமைதியாக, வீட்டுக்கு வீடு, வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து பேசி, மக்களுடன் கிராமத்து டீ கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டே பேசி கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் சுமார் 79,842 வாக்காளர்களை சந்தித்து கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 30,000க்கு மேற்பட்ட வாக்காளர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
25.03.2021ல் அன்று …..
- திமுக கூட்டணி – 167
- அதிமுக கூட்டணி – 48
- அமமுக கூட்டணி – 4
- மக்கள் நீதிமய்யம் கூட்டணி -1
இழு பறி -14 தொகுதிகள் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டோம்.
இழுபறி தொகுதிகள், வி.ஐ.பி போட்டியிடும் தொகுதிகள், கட்சித்தலைவர்கள் பிரச்சாரத்திற்கு பின்பு தொகுதிகளின் நிலவரம் என்ன என்று மக்கள்செய்திமையத்தின் கருத்துக்கணிப்புக் குழுக்கள் 36 சட்டமன்றத் தொகுதிகளில் மீண்டும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
234 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளவர்கள் மிக துல்லியமான பட்டியல் 03.04.2021 அன்று வெளியாகும்.
மக்கள்செய்திமையத்தின் கருத்துக்கணிப்பு என்பது தமிழக மக்களின் நாடித் துடிப்பு…