Breaking News
Home / பிற செய்திகள் / TNCSC திவாலா… சுதாதேவி ஐ.ஏ.எஸ்யால்- 59 மாதங்களில் ரூ26,600கோடி கடன்.. மாதம் 10,000 டன் அரிசி கடத்தல்…

TNCSC திவாலா… சுதாதேவி ஐ.ஏ.எஸ்யால்- 59 மாதங்களில் ரூ26,600கோடி கடன்.. மாதம் 10,000 டன் அரிசி கடத்தல்…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ்யின் மோசமான செயல்பாடுகள், ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டது.

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 59 மாதங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் 26,600 கோடி..

   உண்மையில் தமிழக அரசுக்கு பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை சேர்த்து கணக்கீட்டால் சுமார் ரூ10 இலட்சம் கோடி கடன் உள்ளது.

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கடன் பட்டியல்…

  1. 2016-17ல் கடன் ரூ2690கோடி

பாங்க் ஆப் இந்தியா ரூ845கோடி

கனரா வங்கி – 845கோடி

பாரத ஸ்டேட் வங்கி – ரூ1000கோடி

  • 2017-18ல் கடன் ரூ2923கோடி

பஞ்சாப் வங்கி – ரூ200கோடி

அலகாபாத் வங்கி – ரூ150கோடி

 பாரத ஸ்டேட் வங்கி – ரூ1373கோடி

யூனியன் பாங்க் ஆப் இந்தியா- ரூ1000கோடி

கனரா வங்கி – ரூ200கோடி

  • 2018-19ல் கடன் – ரூ4500கோடி
  • 2019-2020ல் கடன் – 6490கோடி
  • 2020 -2021(13.02.2021 வரை) ரூ10,000கோடி

ஆக மொத்தம் 58 மாதம் 13 நாட்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் ரூ26,603கோடி…

 ரேசன் கடைகளில் விலை இல்லாமல் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும், தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட மானியம்..

 2015-16 – ரூ5300கோடி

2016-17- ரூ5500கோடி

2017-18-ரூ6000கோடி

2018-19 –ரூ6000கோடி

2019-20 – ரூ6500கோடி

2020-21(13.2.2021வரை) ரூ12,000கோடி

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 2016-17ம் ஆண்டு முதல் 13.02.2021 வரை தமிழக அரசு கொடுத்த மானியம் ரூ ரூ36,000கோடி இல்லாமல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் 59மாதங்களில் பெறப்பட்ட கடன் ரூ26,603கோடி…

 இப்படி ஊழல், நிர்வாக சீர்கேடுகளால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கடன்கார கழகமாக்கிய நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் இன்னும் பதவியில் நீடிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது..

  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ரேசன் கடைகளில் குடும்ப கார்டுகளுக்கு விலை இல்லாமல் வழங்கப்படும் அரிசி ஒதுக்கீட்டில் கூடுதலாக  மாதா, மாதம்  10,000 டன் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பங்களாதேசத்துக்கு கடத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஊழலை மக்கள்செய்திமையம் விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடும்..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *