Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி… அண்ட புளுகு..ஆகாச புளுகு மேலாளர் செல்வராணி…

ஆவடி மாநகராட்சி… அண்ட புளுகு..ஆகாச புளுகு மேலாளர் செல்வராணி…

   ஆவடி மாநகராட்சியின் மேலாளர் செல்வராணிக்கு அண்ட புளுகு..ஆகாச புளுகு செல்வராணி என்றுதான் அன்பாக அழைப்பார்கள்.. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பெறப்படும் மனுக்களை, குப்பைக் கூடையில் போட்டு, வரவே இல்லை, காணாமல் போய்விட்டது என்று புரூடா விடுவதில் மிகவும் வல்லவர்..

  பொதுத் தகவல் அலுவலர் கம் மேலாளர் செல்வராணியின் அண்ட புளுகு… ஆகாச புளுகுக்கு ஒரு உதாரணம்…

 தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி சில தகவல்கள் கேட்டு 19.12.2020ல் அனுப்பிய மனு 20.12.2020 பெறப்பட்டுள்ளது. 30 நாட்களில் பொதுத் தகவல் அலுவலர் தகவல் அளிக்காத காரணத்தால் ஜனவரி 27ம் தேதி மேல்முறையீடும் செய்யப்பட்டது.

 ஆவடி மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்த காரணத்தால், ஊழல்கள் தொடர்பாக சில ஆவணங்களின் நகல் கேட்டோம். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ல் எதை கேட்டாலும் அதற்கு பதில் அளிப்பது இல்லை.

அதனால்  03.03.2021 அன்று ஆவடி மாநகராட்சியின் பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலரை கண்டித்து,  ஆவடி மாநகராட்சியின் அலுவலகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் கண்டன கடிதம் ஒட்டப்போகிறேன் என்று செய்தி வெளியிட்டவுடன், பொதுத் தகவல் அலுவலர் கம் மேலாளர் அண்ட புளுகு..ஆகாச புளுகு செல்வராணி ந.க.எண்.8405/2021/சி1 18.01.2021 என்று தேதியிட்டு, 18.01.2021ல் கையெழுத்தும் போட்டு, 01.03.2021ல் பதிவு தபால் அனுப்புகிறார். பதிவு தபால் 02.03.2021ல் கிடைக்கிறது.

01.03.2021ல் அவசரம் அவசரமாக தயாரியாக்கப்பட்ட பதில் தகவலுக்கு, 18.01.2021ல் போலியாக தேதியிட்டு கையெழுத்து போடுகிறார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள்..

 சி.சி.டி.வி கேமிரா புட்டேஜ் கேட்டால், அலுவலகத்தின் பணி சுமை அதிகரிப்பதால் தகவல் அளிக்க முடியாது என்று பதில் அளிப்பார்..

 தனக்கு தானே அதிபுத்திசாலி…அதிமேதாவி என்று நினைத்துக்கொண்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டவிதிகளுக்கு முரணாக பதில் அளிப்பார் மேலாளர் செல்வராணி…

  மேலாளர் செல்வராணியை விமர்சனம் செய்தால் உடனே ஆவடி மாநகராட்சி ஊழியர்களின் சங்கத்தலைவரிடம், விமர்சனம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுப்பார்..

  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி தகவல்கள் கேட்கும் மனுதாரரை அலுவலகத்தில் கிண்டல் அடிப்பார்.  நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களால் அவ்வப்போது நடத்தப்படும் பயிற்சிகளில் கலந்து பயிற்சி பெற்று அதன் படி செயல்படுவார் என்று பதில் அளிப்பார்.. ஆவடி மாநகராட்சியாக மாறி 18மாதங்களாகிவிட்டது. ஆனால் ஆவடி நகராட்சி என்று பதில் அளிப்பார்.

  ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், பூம்..பூம்..பூம் ..என்று தலையாட்டிவிட்டு, பொதுத் தகவல் அலுவலர்  டைப் செய்து கொடுக்கும் பதிலுக்கு மேல்முறையீட்டு அலுவலர் என்று கையெழுத்து போடுவார்.

 இப்படி தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ பற்றி அ, ஆ தெரியாத மேலாளர் கம் பொதுத் தகவல் அலுவலர் போடும் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது..

 விரைவில் ஆவடி நகரம் முழுவதும், கண்டன  வால்போஸ்டர்  ஒட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *