Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி பாணியில்- மாறன், ரவிச்சந்திரன் சஸ்பெண்ட்.. விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு…

திருவேற்காடு நகராட்சி பாணியில்- மாறன், ரவிச்சந்திரன் சஸ்பெண்ட்.. விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு…

    திருவேற்காடு நகராட்சியில் எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கை போல், மாறன், ரவிச்சந்திரனை சஸ்பெண்ட் செய்ய, விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்..

    திருவேற்காடு நகராட்சியில்  02.09.2020 அன்று நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதா இருவரும் சிக்கினார்கள். பிறகு விஜிலென்ஸ் உத்தரவின் பேரில் நகரமைப்பு ராஜேந்திரன் கோவில்பட்டி நகராட்சிக்கும், கவிதா அரக்கோணம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்கள்.

   நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனும், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்யவும், நகராட்சி ஆணையர் செந்தில்குமாரனை அதிகாரம் இல்லாத நான் – சென்சிடிவ் பதவிக்கு மாறுதல் செய்யும் படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறைக்கு கடிதம் அனுப்பியது. இதை தொடர்ந்து 18.02.2021அன்று  நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனும், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், வேலூர் மாநகராட்சியில் உதவி ஆணையராக மாறுதல் செய்யப்பட்டார்.

 மக்கள் செய்திமையம் 19,.02.2021ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு  அனுப்பிய கடிதத்தில் 05.11.2020ல் பல்லாவரம் நகராட்சியில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் நகரமைப்பு அதிகாரி மாறனும், பொறியாளர் ரவிச்சந்திரனும் சிக்கினார்கள்.  மக்கள்செய்திமையத்தின் நீண்ட சட்ட ரீதியான போராட்டத்துக்கு பின், மாறன், ரவிச்சந்திரன் இருவரும் பல்லாவரம் நகராட்சி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்..

 திருவேற்காடு நகராட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல், பல்லாவரம் நகராட்சியிலும் விஜிலென்ஸில் சிக்கி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நகரமைப்பு அதிகாரி மாறன், பொறியாளர் ரவிச்சந்திரன் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  பல்லாவரம் நகராட்சி ஆணையர் மதிவாணனை, அதிகாரமே இல்லாத நான் –சென்சிடிவ் பதவிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

 மக்கள்செய்திமையத்தின் கடிதத்தின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்,  விஜிலென்ஸில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி மாறன், ரவிச்சந்திரன் இருவரையும் சஸ்பெண்ட் செய்யவும், பல்லாவரம் நகராட்சி ஆணையரை அதிகாரம் இல்லாத நான் – சென்சிடிவ் பதவியில் நியமிக்கவும் முடிவு செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

 ஒரு சில நாட்களில் திருவேற்காடு நகராட்சி எடுக்கப்பட்ட நடவடிக்கை பாணியில் விஜிலென்ஸில் சிக்கி, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மாறனும், ரவிச்சந்திரனும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பல்லாவரம் நகராட்சி ஆணையரை  அதிகாரமே இல்லாத, நான் –சென்சிடிவ் பதவிக்கு மாற்றப்படுவார்..

 நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால் அதிகாரம் இருந்து நடவடிக்கை எடுக்காமல், பூம்..பூம்..பூம் என்று தலையாட்டிக்கொண்டு இருப்பது, ஐ.ஏ.எஸ் என்று பெயருக்கு பின்னால் போடுவதே அசிங்கம்..

  சட்டமன்றத் தேர்தலை காட்டி, நடவடிக்கை எடுப்பதில் தாமதம்  ஏற்பட்டால்  மக்கள்செய்திமையம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *