Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி.. ஆணையர் நாராயணன்- 3 நாட்களில் வாங்கிய இலஞ்சம் ரூ1.20 கோடி.. ஊழல் லீலைகள் 20.03.2021ல் புத்தகமாக….

ஆவடி மாநகராட்சி.. ஆணையர் நாராயணன்- 3 நாட்களில் வாங்கிய இலஞ்சம் ரூ1.20 கோடி.. ஊழல் லீலைகள் 20.03.2021ல் புத்தகமாக….

ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் 26.02.2021 & 01.03.2021& 0203.2021 ஆகிய மூன்று நாட்களில் வாங்கிய இலஞ்சம் ரூ1.20கோடி… அம்மாடியோவ்..

  கீரின் வாரியார்ஸ் குப்பை அள்ளும் நிறுவனத்தை மட்டும் சிங்கள் டெண்டரில், 26.02.2021ம் தேதி சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்ட மோகன் மூலம் ரூ20இலட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, 26.02.2021ம் தேதி இரவு 8மணிக்கு ஒப்பந்தத்தை அப்ருவல் செய்தார் ஆணையர் நாராயணன். கிரீன் வாரியார்ஸ் நிறுவனத்திடம் தனியாக ரூ10இலட்சம் கடைசி இலஞ்சமாக வாங்கிவிட்டார் சுகாதார அதிகாரி மோகன்..

  கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ20கோடி கொள்ளையடித்த, சுகாதாரபிரிவு அதிகாரி மோகன், திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்ட நிலையில், மோகனை ஆவடி மாநகராட்சியிலிருந்து  விடுவிக்க பேரம் நடந்தது.  எதற்காக… ஏன்.. என்ன…பேரம்…

 ஆணையர் நாராயணன், சுகாதார அதிகாரி மோகன், அடிக்கும் கொள்ளையில் கொடுக்கும் கமிசன் கம் இலஞ்சத்தை கணக்கு எழுதிக்கொண்டு, நீயே வைத்துக்கொள் நான் வாங்கி கொள்வதாக என்று கூறிவிட்டார்.

  மோகன் திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டதால்,  இலஞ்ச கணக்கு வழக்கு பார்த்த போது, ஆணையர் நாராயணன், ரூ1.20கோடி தர வேண்டும் என்றார். மோகன், ரூ70 இலட்சம் தான் என்று கூறி, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

 ஆணையர் நாராயணுக்கும், மோகனுக்கு இடையே ஒய்வு பெற்ற ஆர்.டி.எம்.ஏ கம் புரோக்கர் கம் பிரியாணி கடை புகழ் மோகன்  வீட்டில் இரவு கட்ட பஞ்சாய்த்து நடந்தது.

  புரோக்கர் மோகன் வீட்டில் நடந்த கட்ட பஞ்சாய்த்தில் ரூ1கோடி கொடுப்பதாக சுகாதார அதிகாரி மோகன் ஒப்புக்கொண்டார். அதன் படி 02.03.2021ம் தேதி காலை சுகாதார அதிகாரி மோகன், ஆணையர் நாராயணனிடம் ரூ1கோடி கொடுத்தார்.

  26.02.2021ல் கீரின் வாரியார்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்ததில் பெறப்பட்ட இலஞ்சம் ரூ20 இலட்சம், ஆக மொத்தம் ரூ1.20கோடி இலஞ்ச பணத்தை எடுத்துக்கொண்டு, ஆவடி மாநகராட்சி வாகனத்தில், தேர்தல் அதிகாரி என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பணத்தை பாதுகாப்பாக பல்லடத்துக்கு தப்பி ஒடிவிட்டார் ஆணையர் நாராயணன்..

  சுகாதார அதிகாரி மோகன் 02.03.2021ம் தேதி மதியம் 3மணிக்கு ஆவடி மாநகராட்சி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

 அமைச்சர் மா.பாண்டியராஜன், அமைச்சர் பெஞ்சுமின் இருவருக்கும் இருட்டு கடை அல்வாவை வாயில் திணித்துவிட்டு, 10 மாதத்தில் ஆவடி மாநகராட்சி ஆணையர்  நாராயணன், வாங்கி இலஞ்சம், அடித்த கொள்ளை ரூ10கோடியை தாண்டும்.

   ஆவடி மாநகராட்சியில் எல்லையில், கணக்கு அதிகாரி கம் ரூ4.50 கோடி சேம நல நிதி ஊழல் புகழ் திலகம் மூலம் இடம் வாங்கி உள்ளார்ர். அங்கு பண்ணை பங்களா கட்டபோகிறாராம் ஆணையர் நாராயணன்.

  ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணனின்  ஊழல் லீலைகள் புத்தகமாக 20.03.2020 வெளியிடப்படும்..

பாக்ஸ்…

  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ பற்றி அ,ஆ  தெரியாத மேலாளர் செல்வராணி, பொதுத் தகவல் அலுவலராம்.. கேலிக் கூத்தாக இருக்கிறது.. ஆவடி நகராட்சியின் தீர்மானங்கள்  ஆன் –லைனில் ஜூலை 2020 முதல் பிப்ரவரி 2021 வரை பதிவு செய்யப்படவில்லை. இந்த இலட்சணத்தில் மேலாளர் பதவியாம்.. பொதுத் தகவல் அலுவலர் பதவியாம் வெட்ககேடு…

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *