Breaking News
Home / பிற செய்திகள் / மக்கள்செய்திமையம் கருத்து கணிப்பு… 2021 சட்டமன்றத் தேர்தல்- பல்லாவபுரம் தொகுதி- தடுமாறும் திமுக – முன்னேறும் அதிமுக.. தனக்குத் தானே குழி வெட்டிக்கொண்ட கருணாநிதி எம்.எல்.ஏ..

மக்கள்செய்திமையம் கருத்து கணிப்பு… 2021 சட்டமன்றத் தேர்தல்- பல்லாவபுரம் தொகுதி- தடுமாறும் திமுக – முன்னேறும் அதிமுக.. தனக்குத் தானே குழி வெட்டிக்கொண்ட கருணாநிதி எம்.எல்.ஏ..

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் 2016ல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கருணாநிதி, அதிமுக வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதியைவிட 22165 வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றார்..

 தற்போது அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுக ஆகிய கட்சிகள் உள்ளது. திமுக கூட்டணியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளை விட தற்போது மதிமுக மட்டுமே கூடுதலாக உள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தல்.. வாக்குகள் ஒரு பார்வை..

 அதிமுக -96,726                                      திமுக – 1,12,891

 பாஜக -11,781                                       மதிமுக –   14,083

பாமக-9339                                            மொத்தம் – 1,26,974

  மொத்தம் – 1,11,846..

     2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணியில் தற்போது இணைந்துள்ள கட்சிகளின் தனித்து நின்று பெற்ற வாக்குகளை கூட்டி பார்த்தால் திமுகவுக்கு 15,000 வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்கிறது.

 ஆனால் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி, கடந்த ஐந்தாண்டுகளில் மக்களை சந்திக்கவில்லை. ஸ்டார் ஹோட்டல் பாணியில் செயல்படும் கருணாநிதி எம்.எல்.ஏவின் ரியல் எஸ்டேட் மற்றும் பிசின்ஸ் அலுவலத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பார்க்கலாம்.. தன்னை சந்திக்க வரும் மக்களிடமும், வா..போ.. பார்க்கலாம் என்று பதில் அளித்து, வெளியே அனுப்பி விடுவார் கருணாநிதி எம்.எல்.ஏ.

 இதே கருணாநிதி, பல்லாவரம் நகராட்சித் தலைவராக இருந்த போது, 48வார்டுக்கும் தன் உறவினர்களை புரோக்கர்களாக நியமித்து, கவுன்சிலர்களை மதிக்காமல் வசூல் செய்தார். எல்லா ஒப்பந்த பணிகளுக்கு 2006லேயே 15-20சதவிகிதம் கமிசன் வாங்கிக்கொண்டார்.

  பல்லாவரம் நகராட்சி ஆணையர் மக்களை பற்றி கவலைபடாமல், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல்  இலஞ்சம் வாங்குவதில் மட்டுமே நோக்கமாக செயல்பட்டு வருகிறார். ஊழல் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்த திமுக எம்.எல்.ஏ கருணாநிதி, வாக்களித்த மக்களை மறந்துவிட்டார்.. எதிர்கட்சி எம்.எல்.ஏ என்பதை மறந்து, ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு தனக்குதானே குழி வெட்டிக்கொண்டார்.

 பல்லாவரம் நகராட்சியில் நடக்கும் ஊழலுக்கு, லஞ்சமாக மாதா, மாதம் ரூ15 இலட்சம் வரை பெற்ற எம்.எல்.ஏ கருணாநிதி. மேலும் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி மாறன், பொறியாளர் ரவிச்சந்திரன் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தார்.

 இப்படி மக்களை மதிக்காமல், வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்த, திமுக எம்.எல்.ஏ கருணாநிதிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள்..

  பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் 2435 வாக்காளர்களிடம் மூன்று நாட்கள் மக்கள்செய்திமையம்  கருத்து கணிப்பு நடத்தியது.. அதன் முடிவுகள் …

திமுக கூட்டணி- 1056 -43.36%

அதிமுக கூட்டணி-1125 -46.20%

அம்மா மக்கள்முன்னேற்றக்கழகம் -176 -7.22%

இதர கட்சிகள்(ஆம் ஆத்மி உட்பட) -78-3.20%

 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக சி.ஆர்.சரஸ்வதிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங்குக்கு போட்டியிட்டு இருந்தால், கருணாநிதி படுதோல்வி அடைந்திருப்பார்.

 சட்டமன்றத் தேர்தலில்  மீண்டும் திமுக கூட்டணியில் கருணாநிதி போட்டியிட்டால், தோல்விக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது..

 பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங் போட்டியிட்டால்  அதிமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடும்..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *