Breaking News
Home / பிற செய்திகள் / நகராட்சி நிர்வாக ஆணையரகம்- பேரூராட்சி இயக்குனரகம்- வாங்க..சார்..வாங்க..மலிவு விலை.. ரூ20இலட்சம் முதல் 60 இலட்சம் தான்..

நகராட்சி நிர்வாக ஆணையரகம்- பேரூராட்சி இயக்குனரகம்- வாங்க..சார்..வாங்க..மலிவு விலை.. ரூ20இலட்சம் முதல் 60 இலட்சம் தான்..

உள்ளாட்சித்துறையின் நிழல் அமைச்சரும், சிறப்பு உதவியாளருமான மிஸ்டர் முகப்பேர், வாய்மொழி உத்தரவின் பேரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், பேரூராட்சி இயக்குநர் மனைவியுடன் இலஞ்சம் வாங்கும் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் இந்த அணியின் வாங்க..சார்..வாங்க…மலிவு விலை.. என கூவி..கூவி மாறுதல் போட்ட இலஞ்ச மாறுதலை பாருங்கள்..

  1. ஜெகதீசன் செயற்பொறியாளர் கும்பகோணம் நகராட்சியிலிருந்து தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மாறுதல் – ரூ60இலட்சம்,
  2. ராஜாராமன் செயற்பொறியாளர் தஞ்சாவூர் மாநகரட்சியிலிருந்து அயற்பணியில் பேரூராட்சி இயக்குநரகத்துக்கு மாறுதல் –ரூ50இலட்சம்.
  3. மணி செயற் பொறியாளர் பேரூராட்சி நிர்வாகத்தில் அயல்பணி இருந்தவர், மீண்டும் நகரட்சி நிர்வாகத்துக்கு மாறுதல் செய்யப்பட்டு கும்பகோணம் நகராட்சிக்கு மாறுதல் – ரூ60இலட்சம்..
  4. மதுசூதனன் இளநிலை பொறியாளர் ராமநாதபுரம் நகராட்சியிலிருந்து, தேவக்கோட்டை நகராட்சிக்கு மாறுதல்  -ரூ25 இலட்சம்
  5. இலட்சுமி இள நிலை பொறியாளர் விருதுநகர் நகராட்சியிலிருந்து  ராமநாதபுரம் நகராட்சியிலிருந்து மாறுதல் – ரூ20 இலட்சம்
  6. சந்திரசேகரன் நகராட்சி பொறியாளர் திருத்துறைப்பூண்டி நகராட்சியிலிருந்து, மயிலாடுதுறை நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாறுதல் –ரூ30 இலட்சம்..
  7. செங்குட்டுவன் உதவி பொறியாளர்  மயிலாடுதுறை நகராட்சியிலிருந்து திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு நகராட்சி பொறியாளராக மாறுதல் – ரூ25 இலட்சம்..
  8. வசந்தி ஆணையர் திண்டிவனம் நகராட்சியிலிருந்து,  திருவேற்காடு நகராட்சிக்கு மாறுதல் – ரூ10 இலட்சம்.(கொஞ்சுண்டு விலை குறைப்பு)
  9. ஜஹாங்கீர் பாட்சா ஆணையர் புதுக்கோட்டை நகராட்சியிலிருந்து திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் ரூ30இலட்சம்..
  10. சிவக்குமார் நகராட்சி பொறியாளர் புஞ்சம்புளியம்பட்டி நகராட்சியிலிருந்து, நெல்லியாளையம் நகராட்சிக்கு மாறுதல் – ரூ20இலட்சம்..
  11. பழனிச்சாமி, நகராட்சி பொறியாளர் நெல்லையாளயம் நகராட்சியிலிருந்து புஞ்சம்புளியம்பட்டி நகராட்சிக்கு மாறுதல்-  ரூ35இலட்சம்
  12. அய்யனார் நகராட்சி பொறியாளர் தேவக்கோட்டை நகராட்சியிலிருந்து, அறந்தாங்கி நகராட்சிக்கு மாறுதல் – ரூ25 இலட்சம்..

இப்படி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மலிவு விலையில் இலஞ்சம் கொடுத்து மாறுதல் பெற்றார்கள்..

   ஆனால் ஒரு கோடி இலஞ்சம் கொடுத்து மாறுதல் பெற்றவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா…

   1.03.2020 முதல் 25.02.2021 வரை 12 மாதமாக மருத்துவிடுப்பில்  இருந்த பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முத்துக்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சிவகங்கை மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டார். முத்துக்குமார் கொடுத்த இலஞ்சம் ரூ1கோடி… முத்துகுமார் மாறுதலுக்கு அரசாணையே வெளியாகவில்லை, ஆனால் பணியில் சேர்ந்துவிட்டார்..முத்துக்குமாரின் ஊழல் லீலைகளைப்பற்றி நாளை விரிவாக பார்க்கலாம்..                                                                          தொடரும்…

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *