Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி 420… அமைச்சர் மா.பாண்டியராஜன் பின்னணியில்- கோடிக்கணக்கில் ஊழல்.. அதிகாரமையத்தில் 420 அதிகாரிகள்..

ஆவடி மாநகராட்சி 420… அமைச்சர் மா.பாண்டியராஜன் பின்னணியில்- கோடிக்கணக்கில் ஊழல்.. அதிகாரமையத்தில் 420 அதிகாரிகள்..

ஆவடி தொகுதி எம்.எல்.ஏ கம் அமைச்சர் மா.பாண்டியராஜன் பின்னணியில் ஆவடி மாநகராட்சியே 420 அதிகாரிகள் கையில் சிக்கி சின்னபின்னாமாகிவிட்டது. கோடிக்கணக்கில் கொள்ளையடித்த சுகாதார அதிகாரி  420 மோகன், 26.02.2020ல் திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டாலும், ஆணையர் நாராயணனை, பட்டாபிராமில் உள்ள பசுமைக்குடிலில் மது, மாது விவகாரத்தில் சிக்க வைத்து, பல காசோலைகளில் கையெழுத்து வாங்கிவிட்டார்.

 ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் கடந்த 10மாதங்களில் சம்பாதித்தது ரூ10கோடி என்றால், பல ஆண்டுகளாக ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் 420 மோகன், 420 திலகம்(கணக்கு அதிகாரி சேம நல நிதி ரூ4.50கோடி ஊழல்)  மற்றும் இந்திராணி(ரூ10கோடி ஊழல்) மூவர் அணி எவ்வளவு கோடி கொள்ளையடித்து இருப்பார்கள் என்று நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

 ஆணையர் நாராயணன் பசுமைக்குடிலில் முத்து எடுக்கும்போது, பிளிச்சிங் பவுடர் உள்ளிட்ட  கிருமி நாசினி சப்ளை செய்ததாக போலி பில் SRI KALIYAMMAN TRADING CORPORATION  பெயரிலும், கொரோனா பெயரில் Arunai Engineering Works பெயரிலும், கொரோனாவுக்கு ஊழியர்களை பூந்தமல்லி, திருவள்ளூரிலிருந்து அழைத்து வந்ததாக சுரேஷ் டிராவல்ஸ் பெயரிலும் ரூ2கோடிக்கு  போலி பில் தயாரித்து  சுகாதார அதிகாரி 420 மோகன் காசோலைகளில் கையெழுத்து வாங்கிவிட்டார்.

  சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி கீரின் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு  ஆணையராக ரவிச்சந்திரன் இருக்கும் போது, சுகாதார அதிகாரி 420 மோகன் ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2020 வரை குப்பை அள்ளும் பணி நீட்டித்து உத்தரவு வழங்கினார்.

 டிசம்பர் 2020ல் கீரின் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு பணி நீட்டிப்பு முடிந்த பிறகு, 420மோகன் மூலம் குப்பை அள்ளும் பணி, எந்தவித பணி நீட்டிப்பு ஆணையும் இல்லாமல், ஆணையர் நாராயணன் ஆசியில் சுகாதார அதிகாரி 420மோகன்  பின்னணியில் தொடருகிறது.

 சுகாதார அதிகாரி 420மோகன் ஜனவரி 2020 முதல் பிப்ரவரி 2021 வரைஅடித்த கொள்ளை சுமார் ரூ10கோடி.. இதில் ரூ2கோடி படப்பையில் அதிநவீன பண்ணை வீடு, பங்களா கட்டியுள்ளார். தற்போது திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டாலும், மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டார்..

ஆவடி மாநகராட்சி 420 அதிகாரிகள் அடித்த கொள்ளை மினி பட்டியல்..ஜனவரி 2020 –பிப்ரவரி 2021…

  1. சுகாதார அதிகாரி 420 மோகன் – ரூ10கோடி
  2. கணக்கு அதிகாரி 420 திலகம் – ரூ2கோடி
  3. வருவாய் அதிகாரி இந்திராணி – ரூ10கோடி
  4. வருவாய் ஆய்வாளர் விஜிலென்ஸில் சிக்கிய சத்தியமூர்த்தி –ரூ5கோடி

    மே2020 முதல் பிப்ரவரி 2021 வரை 10மாதங்களில் ஆணையர் நாராயணன் அடித்த கொள்ளை ரூ10கோடி..

   சுகாதார அதிகாரி 420 மோகன், திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டாலும் விஜிலென்ஸ் வளையத்திலிருந்து தப்பிக்க முடியாது.. கணக்கு அதிகாரி 420 திலகம், சேம நல நிதி ஊழலில் சஸ்பெண்ட் செய்யப்படுவது உறுதி…

   இப்படி டஜன் கணக்கில் உதவியாளர் மாமூல் வாங்கிக்கொண்டு, ஆவடி மாநகராட்சியை ஊழல் மாநகராட்சியாக மாற்றி, அதிகாரிகள் எல்லாம் 420 அதிகாரிகளாக வலம் வர வைத்து, வாக்களித்த அப்பாவி மக்களை அடிப்படை தேவைகளுக்காக நடுத்தெருவில் நிற்க வைத்த, அமைச்சர் மா.பாண்டியராஜன், மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட போகிறாராம்..    ஆவடி மக்கள், அமைச்சர் பாண்டியராஜனை துரத்தியடிக்க, தயாராகிவிட்டார்கள்

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *