Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி.. ஊழல் மன்னர் சுகாதார அதிகாரி மோகன்.. திண்டிவனம் நகராட்சிக்கு மாற்றம்.. 26.02.2021 நடந்த பேரம் என்ன… விஜிலென்ஸில் மோகனின் ரூ20கோடி சொத்து..

ஆவடி மாநகராட்சி.. ஊழல் மன்னர் சுகாதார அதிகாரி மோகன்.. திண்டிவனம் நகராட்சிக்கு மாற்றம்.. 26.02.2021 நடந்த பேரம் என்ன… விஜிலென்ஸில் மோகனின் ரூ20கோடி சொத்து..

 ஆவடி மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவை  கூவி, கூவி ஏலம் விட்டு, கொள்ளையடித்து ரூ20கோடிக்கு சொத்து சேர்த்த  சுகாதார அதிகாரி 26.02.2021ம் தேதி திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

  26.02.2021ல் அன்று நடந்த மெகா டெண்டரில் கோல்மால் நடந்தது. அந்த கோல்மாலில் பல லட்சங்கள் கைமாறியது..இதில் ஆணையர் நாராயணனும் சிக்கியுள்ளார்.

 சுகாதார அதிகாரி மோகனுக்கு அம்பத்தூர், கோயில் பதாகை, தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் வீடுகள் உள்ளது. கோயில்பதாகையில் தன்னுடைய பினாமி பாத்திமா ஆரோக்கியமேரிக்கு ரூ.1.75கோடியில் வீடு கட்டி கொடுத்து, வாரா, வாரம் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் இலஞ்சம் வாங்கும் தொகையை, பணம் எண்ணும் இயந்திரம் மூலம் எண்ணி, எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்வார் மோகன்..

  தாம்பரம் அருகே ரூ2கோடியில் அதி நவீன பங்களா கட்டி, சில நாட்களுக்கு முன்பு கிரகபிரவேசம் செய்தார். சுகாதார அதிகாரி மோகன் வருமானத்து அதிகமாக சேர்த்த ரூ20கோடி க்கான சொத்து விவரங்களை  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் மக்கள்செய்திமையம் கொடுத்துள்ளது.

ஆவடி மாநகராட்சியில் கீரின்வாரியர்ஸ் என்ற  நிறுவனம், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக, வங்கி உத்தரவாதம் இல்லாமல் குப்பைகளை அகற்றும் பணியை, ஆணையர் நாராயணன் ஆசியில் செய்துக்கொண்டு இருக்கிறது.  கீரின் வாரியர்ஸ் குப்பை அள்ளும் நிறுவனத்தின் உண்மையான முதலாளியே சுகாதார அதிகாரி மோகன் தான்..

ஆவடி மாநகராட்சியில் சட்டத்துக்கு புறம்பாக குப்பைகளை அகற்றும்  கீரின் வாரியர்ஸ் நிறுவனத்தின் ஊழல்  தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவகத்தில் புகார் கொடுத்து விசாரணை முடிந்துவிட்டது. கீரின் வாரியர்ஸ் நிறுவனத்தின் ஊழலில் முன்னாள் ஆணையர் ரவிச்சந்திரன், தற்போதைய ஆணையர் நாராயணன் இருவரும் சிக்கியுள்ளார்கள்.

 ஆவடி மாநகராட்சி சுகாதார அதிகாரி மோகன் கோடிக்கணக்கில் ஊழலில் சிக்கியதால்  சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மாநகராட்சி பணி வேண்டாம், நகராட்சி பணிக்கு போகிறேன் என்று கடிதம் கொடுத்தார். இந்நிலையில்  சுகாதார அதிகாரி மோகன் திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டநிலையில், மோகன் விடுவிக்கவும் பேரம் நடக்கிறது, சுகாதார அதிகாரி பொறுப்பில் மற்றொருவரை நியமிக்கவும், ஆணையர் நாராயணன் பேரம் நடத்தி வருகிறார்..

 சுகாதார அதிகாரி மோகன், திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதலில் சென்றாலும் விஜிலென்ஸ் வளையத்திலிருந்து தப்ப முடியாது. சுகாதார அதிகாரி மோகன் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவது உறுதி…

பாக்ஸ்..

 ஆவடி மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலர் திருமதி செல்வராணி, மேல்முறையீட்டு அலுவலர் ஆணையர் நாராயணன் இருவரும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்படும் தகவல்களுக்கு தகவல் அளிப்பது இல்லை. தகவல் உரிமைச் சட்டத்தை மதிப்பதும் இல்லை.

 அதனால் மக்கள்செய்திமையம், ஆவடி மாநகராட்சியின் அலுவலக நோட்டீஸ் போர்டில் கண்டன கடிதம் ஒட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *