Breaking News
Home / பிற செய்திகள் / வெற்றி நடை போடும் தமிழகம்.. மக்கள் வரிப்பணம் ரூ64.72கோடி…

வெற்றி நடை போடும் தமிழகம்.. மக்கள் வரிப்பணம் ரூ64.72கோடி…

  தமிழக அரசு சார்பில்  மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்துடன், தமிழ், ஆங்கிலம் நாளிதழ்களில் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற முதல் பக்கம், இரண்டாம் பக்கம் உள்ளிட்ட இரண்டு முழு பக்கங்களில் விளம்பரம் வெளியாகி வந்தது. இது தொடர்பாக திமுக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரத்துக்கு  ரூ64.72கோடி செலவு செய்திருப்பதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

  பத்திரிகைகளுக்கு கொடுக்கும்படும் விளம்பரங்களுக்கு செய்தித்துறை நிர்ணயம் செய்துள்ள  கட்டணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி நமக்கு கிடைத்தது.

  ஒரு முழு பக்கம் என்பது 1716 சதுர செமீ.. தினந்தந்தி,தினமலர், தினகரன், தினமணி, தி இந்து நாளிதழ் ஆங்கிலம், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல நாளிதழ்களுக்கு வழங்கப்பட்டது.

  ஒரு முழு பக்கம் 1716 ச.செமீ  X 2 பக்கங்களுக்கு =3432 சதுர செமீ…ஒரு நாளைக்கு விளம்பர கட்டணம்..Bold

  1.  தினத்தந்தி 3432 Xரூ 1613=ரூ55,35,816 (ரூ55.35இலட்சம்) + 5% ஜி.எஸ்.டி( ரூ2,76,790) ஆக மொத்தம் ரூ58,12,606(ரூ58.12 இலட்சம்)
  2. தினகரன் 3432 X ரூ1633=ரூ56,04,456(ரூ56.04 இலட்சம்) +5% ஜி.எஸ்.டி(ரூ2,80,222) ஆக மொத்தம் ரூ58,84,678(ரூ58.84இலட்சம்)
  3. தினமலர் 3432 X 1222= ரூ41,93,904(ரூ41.93இலட்சம்) +5% ஜி.எஸ்.டி(ரூ2,09,695) ஆக மொத்தம் ரூ44,03,599(ரூ44.03 இலட்சம்)
  4. The HINDU(English) 3432xரூ1984=ரூ68,09,088(ரூ68.09)+5% ஜி.எஸ்.டி(ரூ3,40,454) ஆக மொத்தம் ரூ71,49,542(ரூ71.49இலட்சம்)
  5. TIMES OF INDIA 3432Xரூ501=ரூ17,19,432(ரூ17.19)+5% ஜி.எஸ்.டி(ரூ85,716) ஆக மொத்தம் ரூ18,05,403(ரூ18.05 இலட்சம்)
  6. Indian EXPRESS 3432Xரூ975= ரூ33,46,200(ரூ33.46)+5% ஜி.எஸ்.டி(ரூ1,67,310) ஆக மொத்தம் ரூ35,13,510(ரூ35.13இலட்சம்)
  7. தினமணி 3432 X ரூ750=ரூ25,74,000(ரூ25.74இலட்சம்)+5% ஜி.எஸ்.டி(ரூ1,28,700) ஆக மொத்தம் ரூ27,02,700(ரூ27.02இலட்சம்)
  8.  இந்து தமிழ் திசை  3432 Xரூ774=ரூ26,56,368(ரூ26.56இலட்சம்)+5% ஜி.எஸ்.டி( ரூ1,32,818) ஆக மொத்தம் ரூ27,89186(ரூ27.89இலட்சம்)
  9. தமிழ் முரசு 3432X ரூ649= ரூ22,27,386(ரூ22.27இலட்சம்)+5% ஜி.எஸ்.டி(ரூ1,11,368) ஆக மொத்தம் ரூ23ம்38,754(ரூ23.38இலட்சம்)
  10. Decan chronicle 3432Xரூ693=ரூ23,78,376(ரூ23.78இலட்சம்) + 5% ஜி.எஸ்.டி(ரூ1,18,918) ஆக மொத்தம் ரூ24,97,294(ரூ24.97இலட்சம்)

இந்த 10 நாளிதழ்களுக்கு ஒரு நாள் இரண்டு பக்கம் விளம்பரம் தொகை ரூ388.92 இலட்சம்(ரூ3.88கோடி)

  கடந்த இரண்டு மாதமாக வாரம் இரண்டு நாள் என்று மாதத்திற்கு 8நாட்கள் என கணக்கீட்டு இரண்டு மாதத்தில் 16 நாட்கள் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

   தமிழக அரசு விளம்பரங்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ64.72 கோடி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  இதில் நாம் டிவி மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்களை சேர்க்கவில்லை..

 மக்கள் வரிப்பணம் தமிழ்நாட்டில் எப்படியெல்லாம் ஸ்வாஹா செய்யப்படுகிறது என்று பாருங்கள்…

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *