
மதுரை திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவும் வருவாய்த்துறை அமைச்சருமான உதயகுமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ60கோடி மதிப்புள்ள கணிப்பொறி(டெஸ்க் கணனி) வாக்குசாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இலஞ்சமாக வழங்கினார். இது சட்டவிரோதம் இல்லையா.. மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாதா..
அமைச்சர் உதயகுமார் 21.02.2021 காலை முதல் திருமங்கலம் தொகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கும் இலஞ்சமாக கணிப்பொறி வழங்கிய பட்டியல் இதோ..

1.முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 929 பேர்.
2. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 1260 பேர்
3. மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலக பணியாளர் மற்றும் செய்தியாளர்கள், ஊடகவியாலாளர்கள் 312 பேர்
ஆக மொத்தம் 2501 பேருக்கு கணிப்பொறி இலஞ்சமாக வழங்கினார்.. இப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே அமைச்சர் உதயகுமாரிடம் கணிப்பொறி இலஞ்சம் வாங்கினால் எப்படி சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடக்கும்.. பத்திரிகையாளர் உண்மையான செய்தியை எப்படி வெளியிடுவார்கள்..
மேலும் 7500 கணிப்பொறி திருமங்கலம் தொகுதியில் வாக்குசாவடிகளில் பணியாற்ற வாய்ப்புள்ள அரசு ஊழியர்கள், அதிமுக பூத் ஏஜெண்டுகளுக்கும் கணிப்பொறிகளை அமைச்சர் உதயகுமார் இலஞ்சமாக கொடுத்தார்.
10,000 கணிப்பொறி, 8லாரிகளில் 20.02.2021ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்கு வந்தது. காலை 9மணி முதல் இலஞ்சமாக கணிப்பொறி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயகுமார் தொடங்கி, மதியம் 1.30மணி வரை கொடுத்தார். கணிப்பொறி இலஞ்சம் பெற க்யூ நிற்பவர்களுக்கு காலை, மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மதுரை காமசாரர் பல்கலைக்கழக வளாகம் என்ன மடமா?
ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் மாஸ்க் கொள்முதல் செய்ய ரூ60கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மாஸ்க் வாங்கவில்லை. மாஸ்க் வாங்கியதாகவும், ரேசன் கார்டுகளுக்கொ கொடுக்கப்பட்டதாக கோப்புகளில் பதிவு செய்துவிட்டு, அந்த பணம் ரூ60கோடியை, அமைச்சர் உதயகுமார் நடத்தும் அம்மா சாரிட்டப்பிள் டிரஸ்ட்டுக்கு மாற்றிக்கொண்டார். எவ்வளவு பெரிய மோசடி…மக்கள் வரிப்பணம் இலஞ்சம் கொடுக்கவா?
அம்மா சாரிட்டப்பிள் டிரஸ்ட்டிலிருந்து கணிப்பொறி வழங்கியது போல், கணக்கு காட்டப்படுகிறது. டிரஸ்ட்டிலிருந்து கணிப்பொறி கொடுத்தாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாங்கினால் அது இலஞ்சம் தான்…கணிப்பொறி இலஞ்சம் வாங்கிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
திருமங்கலம் தொகுதியில் பணியாற்றும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும் திருமங்கலம் தொகுதியில் உள்ள வாக்குசாவடியில் பணியாற்ற நியமிக்க கூடாது என்று மக்கள்செய்திமையம் தமிழக ஆளுநர் அவர்கள், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநனருக்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கணிப்பொறியை இலஞ்சமாக கொடுத்த அமைச்சர் உதயகுமார், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்.